கொஞ்சமல்ல – நிறையவே .. !!!


கொஞ்சமல்ல – நிறையவே ..நம்பிக்கை தரும் செய்திகள்.

இந்தியா – அமெரிக்கா அல்ல…
இந்தியா – இத்தாலியும் அல்ல…

இந்தியா – இந்தியா தான்.
இந்தியர்கள் – பிறந்த, வளர்ந்த, வாழும் சூழ்நிலைகள்
மேற்கத்திய நாடுகளிலிருந்து, குளிர் பிரதேசங்களிலிருந்து
மாறுபட்டவை.

எது நம்முடைய பலவீனமாக கருதப்பட்டதோ –
அதுவே இப்போது பலமாகி இருக்கிறது…

நகரங்களில் ஓடும் திறந்த சாக்கடைகளின் நடுவே,
கூவம், அடையாறு போன்ற பெரும் சாக்கடைகளின் நடுவே,

ஆரோக்கியமற்ற,சுகாதாரமற்ற சூழ்நிலைகளில்
வளர்ந்த நமது மக்கள், இயல்பாகவே,
நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் கொண்டிருக்கிறார்கள்.

அந்த நோய் எதிர்ப்பு சக்தியும், நமது வெப்பமான
சீதோஷ்ணமும் கொரோனா வைரசை எதிர்த்து நிற்பதில்
நமக்கு பெரிதும் உதவுவதாக அண்மையில்
நடந்துள்ள இந்த நிகழ்வுகள் தெரியப்படுத்துகின்றன.

———————————————

கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் ரேஷ்மா, என்பவர் தானே
விரும்பி கொரோனா வார்டில் பணியாற்றினார். கோட்டயம்
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மார்ச் 12
முதல் 22 வரை அவருக்கான டூட்டி இருந்தது.

ரேஷ்மா பணியில் இருந்தபோது கொரோனா வார்டில்
பத்தனம்திட்டா மாவட்டம் ராணி பகுதியைச் சேர்ந்த
90 வயது முதியவரான தாமஸ் குஞ்சவரச்சன் மற்றும்
அவரது மனைவியான 88 வயது நிரம்பிய மரியம்மா
ஆகியோர் கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்டனர்.

வயதான அந்தக் கொரோனா பாதித்த தம்பதியை கவனித்துக்
கொண்டவர்களில் நர்ஸ் ரேஷ்மாவும் ஒருவர்.

தனது 10 நாள் தொடர் பணியை முடித்துக்கொண்டு
வீட்டுக்குத் திரும்பிய ரேஷ்மாவுக்கு மறுநாளிலேயே
உடல் வலியும் தலைவலியும் ஏற்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக மருத்துவமனையில் பணியாற்றியதால் ஏற்பட்ட
அசதி காரணமாக உடல்வலி ஏற்பட்டிருக்கலாம் என அவர்
துவக்கத்தில் நினைத்தார்.

ஆனால், தொடர்ந்து அவருக்கு இருந்த அறிகுறிகளைப்
பார்த்ததும் மருத்துவமனைக்கு வந்து உடல் பரிசோதனை
செய்துகொண்டார். அவருடைய பரிசோதனை முடிவு
மார்ச் 24-ம் தேதி வந்தபோது அவருக்குக் கொரோனா
தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

நோயாளிகளுக்குச் சிகிச்சையளித்த நர்ஸ் ஒருவருக்கு
நோய்த் தொற்று ஏற்பட்ட சம்பவம் கேரளாவை
அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அதையொட்டி, 10 நாள் தனிமை வார்டில் ரேஷ்மாவிற்கு
சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்து ,
நர்ஸ் ரேஷ்மா தற்போது பூரண குணமடைந்து வீடு
திரும்பியிருக்கிறார். அவருடன் பணியாற்றிய செவிலியர்கள்,
மருத்துவமனையின் டாக்டர்கள், சுகாதாரப் பணியாளர்கள்
உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

….

10 நாள் சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்து,
ரேஷ்மா வீடு திரும்புகிறார்…


….

கொரோனா பாதிப்பை வென்று முழு குணமடைந்து வீடு
திரும்பிய நர்ஸ் ரேஷ்மா கூறுகையில், “கேரள
மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்பிலிருந்து
மீள்வதற்குத் தேவையான அனைத்து உபகரணங்களும்
இருக்கின்றன. ஏராளமான பணியாளர்கள் தன்னார்வமாகப்
பணியாற்றி வருகிறார்கள். கொரோனா பாதிப்பு குறித்து
யாரும் அச்சப்படத் தேவையில்லை. இந்த நோய்த்
தொற்றிலிருந்து எளிதில் மீள முடியும்.

அடுத்த 14 நாள்கள் நான் தனிமையில் இருக்க உள்ளேன்.
அது முடிந்ததும் மீண்டும் பணிக்குத் திரும்புவேன். அப்போது
யாராவது கொரோனா பாதிப்புடன் இந்த மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருந்தால் அந்த வார்டில் பணியாற்றவே
விரும்புவேன்” என்கிறார் ரேஷ்மா.

இதனிடையே, ரேஷ்மா குணமடைந்த அதே வேளையில்
அவர் சிறப்பாகக் கவனித்துக்கொண்ட 90 வயது முதியவரான
தாமஸ் குஞ்சவரச்சன் மற்றும் அவரது மனைவியான மரியம்மா
ஆகியோரும் பூரண குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள்.

உடல்நிலை சீரானதைத் தொடர்ந்து பரிசோதனை
மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்குக் கொரோனா சோதனை
செய்ததில் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததைத் தொடர்ந்து அவர்கள்
டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கின்றனர்.

தாமஸ்
குஞ்சவரச்சன் அவரது மனைவி மரியம்மா இருவரும் பூரண
குணமடைந்து வீடு திரும்புகிறார்கள்…

….

இத்தாலி நாட்டிலிருந்து கடந்த பிப்ரவரி 29-ம் தேதி ஊர்
திரும்பிய பத்தினம்திட்டாவைச் சேர்ந்தவர்களால் அவர்களது
வீட்டில் உள்ள 93 வயதான தாமஸ், அவரின் மனைவி
88 வயதான மரியம்மா ஆகியோர் கொரோனா வைரஸ்
தொற்றுக்கு ஆளானார்கள். மார்ச் 8-ம் தேதி இவர்களுக்குக்
கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து கோட்டயம் அரசு மெடிக்கல் காலேஜ்
ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் இவர்கள் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து கோட்டயம் மெடிக்கல் காலேஜ் மருத்துவர்கள்
கூறுகையில், “கொரோனா நோய்த் தொற்று முதியவர்களைக்

கடுமையாகப் பாதிக்கும் தன்மை கொண்டது. இந்தநிலையில்
93 மற்றும் 88 வயதான முதிய தம்பதியருக்கு வயது
முதிர்வால் ஏற்பட்ட நோய், சிறுநீரகத் தொற்று
உள்ளிட்டவையும் இருந்தன.

இவர்களுக்கு 8 மருத்துவர்கள் 25 நர்சுகள், 40 பணியாளர்கள்
சேவை செய்தனர். அதில் ஒரு நர்சான ரேஷ்மாவுக்கு
மட்டும் கொரோனா தொற்று பாதித்தது.

இப்போது ரேஷ்மாவும் கொரோனா பாதிப்பிலிருந்து
விடுபட்டு விட்டார்.

நமக்கும் கொரோனா வந்து விடுமோ என்று
யாரும் எப்போதும் சந்தேகத்திலேயும் இருக்க வேண்டாம்.
வந்து விட்டதே என்று பயப்படவும் வேண்டாம்.

அச்சத்தை ஒழித்து… தைரியமாக
கொரோனாவை எதிர்கொள்வோம்.

ஆனால், இந்தப்போரில் கட்டுப்பாட்டுடன்
விதிகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம்.
சமூக விலகலை உறுதி செய்வதும் அவசியம்.

இந்தியரின் பண்பாடு போலவே –
மன உறுதியும், நோய் எதிர்ப்பு சக்தியும் கூட –
உலகளவில் பேசப்படட்டும்.

.
—————————————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to கொஞ்சமல்ல – நிறையவே .. !!!

 1. மன நலமே உடல் நலம் சொல்கிறார்:

  நீங்கள் தொடர்ந்து நிறைய நல்ல செய்திகளை
  நம்பிக்கையூட்டும் விதத்தில் தந்துகொண்டே
  இருக்கிறீர்கள். மிக நல்ல செயல். வாழ்க வளமுடன்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   அனைவருக்கும் சேர்த்தே –

   இப்போது தான் ஒரு செய்தி படித்தேன்…
   இதைப்படிக்க – மனதுக்கு மிகவும்
   நிறைவாக இருக்கிறது.

   ————————————————–

   அம்மா உணவகம் வந்த தொடக்க காலத்தில்
   மிகவும் சிறப்பாக இயங்கி வந்தது. ஆனால்
   இடையில் கொஞ்சம் இதில் சுணக்கம் ஏற்பட்டது.

   தற்போது ஊரடங்கு இருக்கும் நிலையில் மிகவும்
   தரமாக அம்மா உணவகம் இயங்கி வருகிறது.
   மிகவும் தூய்மையான முறையில், அதே சமயம்
   நல்ல சுவையுடன் உணவுகள் தயாரிக்கப்பட்டு
   மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
   பாதுகாப்பாக உள்ளது இதெல்லாம் போக
   கொரோனா பரவி வருவதால் தற்போது அனைத்து
   ஊழியர்களும் முக கவசம் அணிந்துள்ளனர்.
   பரிமாறுபவர்கள் கையுறை அணிந்துள்ளனர்.
   அதேபோல் அங்கு உணவு சமைக்கும் இடம் மிக
   சிறப்பாக சுத்தம் செய்யப்பட்டுள்ளது. எல்லோரும்
   இடைவெளி விட்டு வரிசையில் நிற்க வைக்கப்பட்டு
   உணவு வழங்கப்படுகிறது. சென்னையில் இருக்கும்
   அனைத்து அம்மா உணவகங்களும் தற்போது
   இயங்கி வருகிறது.

   எத்தனை இட்லிக்கள் தமிழக அரசு வெளியிட்ட
   கணக்குப்படி கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து
   நேற்று வரை தமிழகத்தில் அம்மா உணவகங்கள்
   407 சென்னையில் மட்டும் இயங்கி உள்ளது.

   மொத்தம் 26.23 லட்சம் இட்லிக்கள் மக்களுக்காக
   தயார் செய்யப்பட்டுள்ளது. 8 லட்சம் வெரைட்டி ரைஸ்
   உணவுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது போக
   15 லட்சம் பேருக்கு சப்பாத்தி தயார் செய்யப்பட்டுள்ளது.
   15 லட்சம் பேர் லாக் டவுனுக்கு பிறகு வந்து சாப்பிட்டு
   இருக்கிறார்கள்.

   உணவின்றி இந்திய தலைநகர் டெல்லியில் மக்கள்
   சொந்த ஊர்களுக்கு அகதி போல செல்லும் போது..
   சென்னை மட்டும் யாருக்கும் இல்லை என்று
   சொல்லாமல் அனைவருக்கும் உணவளித்து வருகிறது.

   ( https://tamil.oneindia.com/news/chennai/coronavirus-tamilnadu-government-s-own-amma-mess-helps-people-pandemic-time/articlecontent-pf447687-381779.html )

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.