ஒரு பயங்கரமான செய்தி ( அல்லது வதந்தி ) ….


சில நாட்களுக்கு முன்னர், சமூக வலைத்தளங்களிலும்,
செய்தி மீடியாக்களிலும் பரபரப்பாக ஒரு செய்தி பேசப்பட்டு
வந்தது.

கரோனா வைரஸ், சீனா உலக நாடுகள் அனைத்தின்
பொருளாதாரத்தையும், சீர்குலைத்து –
தன் வசப்படுத்த செய்த ஒரு திட்டமிட்ட சதி என்று.

அதிலிருந்து சில முக்கிய பகுதிகளை கீழே தருகிறேன்.

————–
How to dominate the world quickly?

1. Create a virus and the antidote.

2. Spread the virus.

3. A demonstration of efficiency, building hospitals in a few days.
After all, you were already prepared, with the projects, ordering
the equipment, hiring the labor, the water and sewage network,
the prefabricated building materials and stocked in an impressive
volume.

4. Cause chaos in the world, starting with Europe.

5. Quickly plaster the economy of dozens of countries.

6. Stop production lines in factories in other countries.

7. Cause stock markets to fall and buy companies at a
bargain price.

8. Quickly control the epidemic in your country. After all,
you were already prepared.

9. Lower the price of commodities, including the price of oil
you buy on a large scale.

10. Get back to producing quickly while the world is at a
standstill. Buy what you negotiated cheaply in the crisis and
sell more expensive what is lacking in countries that have
paralyzed their industries.

After all, you read more Confucius than Karl Marx.

PS: Before laughing, read the book by Chinese colonels Qiao
Liang and Wang Xiangsui, from 1999, “Unrestricted Warfare:
China’s master plan to destroy America”, on Amazon,
then we talk. It’s all there.
————————-

மேற்கண்ட செய்தி எவ்வளவு தூரம் உண்மையாக
இருக்கக்கூடும் என்று ஆராய முற்பட்டு, மேற்கொண்டு
சில விவரங்களை திரட்டினேன்.

மேற்கண்ட புத்தகம் 2 சீன ராணுவ விஞ்ஞானிகளால்
21 ஆண்டுகளுக்கு முன்னர், 1999-ல் எழுதப்பட்டிருக்கிறது.
இது முதலில் சீன மொழியில் எழுதப்பட்டு, சீன
ராணுவத்தால்( PLA) அங்கீகரிக்கப்பட்டு அப்போதே
விற்பனைக்கு வந்திருக்கிறது. எனவே, இதில் ரகசியம் என்று
எதுவும் இல்லை…

இந்தப் புத்தகத்தை பல்வேறு வழிகளில் சென்று
ஓரளவு மேற்போக்காக வாசித்தேன்.. பல்வேறு விதமான
போர்த்தந்திரங்களைப்பற்றி விரிவாக அலசி இருக்கிறார்கள் –
அவ்வளவே. முழுக்க வாசிக்க எனக்கு ஆர்வம் வரவில்லை;
ஏனெனில், மேற்கண்ட மாதிரி எல்லாம் அதில் திட்டம்
போட்டுக்காட்டவில்லை.

2011-க்குப் பிறகு, அமெரிக்காவின் உளவுத்துறை, இந்த
புத்தகத்தை சீனா அமெரிக்காவிற்கு எதிராக இத்தகையதொரு
போர்த் தந்திரத்தை மேற்கொள்ள முயற்சிக்கிறது என்று
வேண்டுமென்றே சித்தரித்து, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து
புத்தகத்திற்கு வேண்டுமென்றே ஒரு புதிய தலைப்பையும்
கொடுத்து உலக மார்க்கெட்டில் வெளியிட ஏற்பாடு
செய்திருக்கிறது.


கொரோனா சம்பவத்திற்குப் பிறகு, அமேசான் விற்பனைத்தளம்
இந்த புத்தகத்தின் விற்பனையை பெருக்குவதற்காக,
(விலை ரூ.449/- ) மேற்கண்ட செய்தி/வதந்திச் சுருக்கத்தை
மீடியாக்களில் சுற்றுக்கு விட்டிருக்கிறது.

எனவே, வேண்டுமென்றே பரபரப்புக்காக செயற்கையாக
உண்டாக்கப்பட்ட செய்தி தான் இது என்று தான் நான் கூட
நினைத்திருந்தேன்.

ஆனால், இப்போது சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் WION –
செய்தித் தொலக்காட்சி வெளியிட்டிருக்கும் ஒரு செய்தித்
தொகுப்பை பார்த்தவுடன் பகீரென்றது.

கொரோனா சமாச்சாரங்களை எல்லாம் மூட்டை கட்டி
வைத்துவிட்டு, சீனா, உள்நாட்டு விமான போக்குவரத்தை
துவங்கி, தொழிற்சாலைகளில் உற்பத்தியையும் துவங்கி
விட்டதாகத் தெரிகிறது. இதையெல்லாம் பார்த்தால்,
சீனாவில் – கொரோனா பாதிப்பே ஒரு உருவாக்கப்பட்ட
மாயையோ என்று கூடத் தோன்றுகிறது.

ஆஸ்திரேலியாவில், பொருளாதார சந்தை அதல பாதாளத்திற்கு
சரிந்ததையொட்டி, பல கம்பெனிகள் விழுந்து விட்டதால்,
அவற்றை வாங்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருவதாகவும்
செய்திகள் வருகின்றன.

ஒரு வேளை, புலி வருகிறது புலி வருகிறது என்று
அமெரிக்கா உலகை ஏமாற்ற பொய் சொல்லப்போய் –

-நிஜமாகவே புலி வந்து விட்டதோ என்று இப்போது
தோன்றுகிறது….!!!!

Wion செய்தித் தொகுப்பு காணொளி கீழே –

….

….

ஆனால், இது உண்மையாக இருந்தால்….?
உலக நாடுகள் இதைச் சும்மா விடுமா…?

.
———————————————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to ஒரு பயங்கரமான செய்தி ( அல்லது வதந்தி ) ….

 1. புவியரசு சொல்கிறார்:

  துவக்கத்தில் இந்த செய்தி வேடிக்கையாக பார்க்கப்பட்டது.
  ஆனால், சிங்கப்பூர் WION செய்தி நிறுவனம் சொல்வதைப்
  பார்க்கும்போது, பல கற்பனைகள் நிஜமாக உறுதி
  செய்யப்படுகின்றன. பொதுவாக சிங்கப்பூரிலிருந்து,
  சீனாவுக்கு எதிரான செய்திகள் வராது. இப்போது இப்படி
  செய்தி வருவது வித்தியாசமாக இருக்கிறது.
  எனக்கு ஆஸ்திரேலியாவில் நண்பர் ஒருவர் இருக்கிறார்.
  அவரும், ஆஸ்திரேலியாவில் பலரும் இந்த அச்சத்தை
  நிஜமாகவே பார்ப்பதாகச் சொல்கிறார்.

 2. புதியவன் சொல்கிறார்:

  இதில் உண்மை இருக்கிறது. ஆனால் உலக நாடுகள் நிச்சயம் சீனாவிற்கு எதிராக இந்த விஷயத்தில் வழக்கு தொடுக்கும் எனத் தோன்றுகிறது. அதற்கு முன்னேற்பாடாக இப்போதே சீனா, இந்தியப் பிரதமருடனான பேச்சின்போதும் டிரம்ப் உடனான பேச்சின்போதும் இதனை சீன வைரஸ் என்று ப்ரொஜெக்ட் செய்வதை நிறுத்துங்கள், அப்படிப்பட்ட மீடியா செய்திகளைக் கட்டுப்படுத்துங்கள் என்று முதலிலேயே வலியுறுத்தியிருக்கிறது. அமெரிக்கா இந்த பாதிப்பிலிருந்து முதலில் வெளியே வர, சீன உதவி அவசியம் என்பதால் அமெரிக்கா இப்போது தணிந்து செல்கிறது என்றே நான் நினைக்கிறேன்.

 3. Vic சொல்கிறார்:

  அறிவுத் திறன் திருட்டால் பாதிக்கப்பட்டு மேற்படி யான் தான்தீய வச்சது என்ற கணக்கும் இருக்கு இப்ப தீயை அணைத்து கொடுத்தவர்களுக்கு உதவி செய்வது என்ற கணக்கும் இருக்கு ஆனால் உதவி ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கு தேவைப்படாது அவருக்கு காசு பிரச்சினை அவர்களுக்கு இல்லை தேவை பொருளுதவி மட்டுமே உற்பத்தி அதனால் விற்பனை செய்கிறது

 4. yarlpavanan சொல்கிறார்:

  சிறப்பான ஆய்வுப் பதிவு

 5. Ravikumar rangasamy சொல்கிறார்:

  No country could do anything against China including US.

 6. Ramnath சொல்கிறார்:

  IF the world together decides NOT TO BUY /IMPORT
  anything – ANYTHING – from China –
  That is enough; Death of Chinese Supremacy.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.