…
…
…
…
இன்னும் கொஞ்சம் காலத்துக்கு,
இந்த கொரோனா அச்சுறுத்தல், நிம்மதியின்மை,
அலைச்சல், உளைச்சல்கள் அனைத்தும் முடிந்து –
மக்கள் அனைவரும் அமைதியும், உடல்நலமும் பெற்று,
நிம்மதி நிலவும் வரை –
இந்த விமரிசனம் தளத்தில் இயன்ற வரை –
நேர்மறையான (அதாவது positive- ஆன) விஷயங்களை
நிறைய எழுதுவது என்றும்,
நகைச்சுவையும், நல்ல சுவாரஸ்யமான பொழுதுபோக்கும்
நிறைந்த காட்சிகளை நிறைய தருவது என்றும்
-உத்தேசித்திருக்கிறேன்.
(- இன்ஷா அல்லா – இறைவன் இதற்கு அருள் புரியட்டும்…! )
————————
அடுக்குமாடி வீடுகளில் வசிப்பவர்கள், அடிக்கடி
lift மற்றும் இதர சுவிட்சுகளை தொட்டு பயன்படுத்த
வேண்டியிருக்கிறது. பலபேர் தொடுவதால், இதன் மூலம்
தொற்று பரவுமோ என்று அச்சப்படுபவர்களின் பயத்தை
போக்குவதற்காக, பாதுகாப்பான, சுலபமான வழியொன்றை,
ஒரு நண்பர் யோசித்து, தெரிவித்திருக்கிறார்.
அதனை காணோளி வடிவில் கீழே தந்திருக்கிறேன்.
இதை கையில், பாக்கெட்டில் வைத்திருந்தால்,ATM மற்றும்
பொது இடங்களுக்குப் போனாலும் உதவும்.
மிகச்சுலபமான இந்த வழிமுறையை அனைவரும்
பயன்படுத்தலாம்… இது பயத்தைப் போக்கும்…
பாதுகாப்பாகவும் இருக்க வைக்கும்….. !!!
….
….
.
———————————————————————————————————————————————————
எங்கள் அபார்ட்மெண்டில் (18 மாடி), ரிசப்ஷனில் சானிடைசர் கொடுப்பார்கள். லிஃப்டின் வெளியே குச்சிகளை தெர்மோகோல் அட்டையில் குத்தி வைத்திருப்பார்கள். உபயோகித்ததைப் போட ஒரு பிளாஸ்டில் பாட்டில் சுவற்றில் ஒட்டி வைத்திருக்கிறார்கள். ஒரு குச்சியை எடுத்து லிஃப்ட் பட்டனை அமுக்கிவிட்டு பிறகு குச்சியை (tooth pick) பாட்டிலில் போட்டுவிட வேண்டும். லிஃப்டின் உள்ளேயும் இதே அரேஞ்ச்மெண்ட். அதனால் தேவையில்லாமல் எதையும் தொடவேண்டிய அவசியம் இல்லை.
ஆனாலும், உபயோகித்த குச்சியை பாட்டிலில் போடாமல் திரும்பவும் தெர்மோகோலிலேயே குத்தி விட்டுவிடுவார்களோ என்ற ஐயம் மனதில் உண்டு.