…
…
…
காலையிலேயே எழுதி இருந்தேன். இனி,
கொஞ்ச காலத்திற்கு இந்த விமரிசனம் தளத்தில்
நகைச்சுவைக்கும், நல்ல சுவாரஸ்யமான
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும்
முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று….
சிரிப்பு ஒரு அருமையான மருந்து.
கவலையை,
துன்பத்தை,
வலியை,
நோயை,
பயத்தை,
– மறந்து இதயத்தை சந்தோஷத்தால்
நிரப்பக்கூடிய ஒரு அருமருந்து….
இன்று முதல் இங்கே, “இது சிரிப்பு பூமி”
என்கிற தலைப்பில் ஒரு புதிய இடுகைத்தொடர்
வெளிவரும். பலவேறு இடங்களிலிருந்து திரட்டப்படும்,
நல்ல நகைச்சுவை நிகழ்ச்சிகளை –
வாசக நண்பர்கள் இங்கே கண்டு ரசிக்கலாம் / சிரிக்கலாம்.
…….
…….
பின் குறிப்பு – இந்தத் தொடரில் வெளியாகும்
எந்த நிகழ்ச்சியும் என்னுடைய தயாரிப்பல்ல…
நான் எதற்கும் சொந்தம் கொண்டாடவில்லை.
இந்த நிகழ்ச்சிக்கான பாராட்டும், பெருமையும்,
அதை உருவாக்கியவர்களுக்கே உரியது.
இந்த நேரத்தில், அனைவரும் கவலைகளை மறந்து,
சிரித்து மனநிறைவுடன், ஆனந்தமாக இருக்க வேண்டும்
என்கிற நோக்கத்தில் மட்டும் தான்
இவை இங்கே பதிப்பிக்கப்படுகின்றன.
இந்த நிகழ்ச்சிகளுக்காக யாராவது copyright claim
பண்ணினால் – நான் க்ளீன் சரண்டர்… 🙂 🙂 🙂
அவர்களுக்கு இதில் ஆட்சேபணை எதுவும் இருந்தால்,
உடனே நீக்கி விடுகிறேன்
என்று உளமாற உறுதி கூறுகிறேன்… !!!
.
——————————————————————————————————————————————————————
நல்ல ஐடியா;
தொடருங்கள் சார்.
இதைவிட ரமணி vs ரமணி முதலாம் பாகம் நன்றாக இருந்தது.நடித்தவர்கள் நடிப்பு சிறப்பாக இருந்தது.
சக்தி,
1) நான் அதை இன்னும் பார்க்க முடியவில்லை…
2) அந்த பாகத்திலும் இதே ஜோடியாகத்தானே
இருந்திருக்க வேண்டும்…? வேறு யார் நடித்திருந்தார்கள்..?
3) மேலும், நான் “பெயர்த்தெடுத்து” போடக்கூடியவற்றை
மட்டும் தானே போட முடியும்…?
(my choice / capacity is limited.. I hope you understand … 🙂 🙂 )
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்