“ராமாயண்” – ராமரும் சீதையும் இப்போது எப்படி இருக்கிறார்கள்…???


1987-88 ஆண்டுகளில் அகில இந்தியாவையும் அப்படியே
ஆகர்ஷித்துக்கொண்ட தூர்தர்ஷன் சீரியல் “ராமாயண்” –
நினைவிருக்கிறதா…?

இயக்குநர் ராமானந்த் சாகர் உருவாக்கிய “ராமாயண்”
தொலைக்காட்சித் தொடரில் பாத்திரப்படைப்புகள்
அற்புதமாக, மிகப்பொருத்தமாக அமைந்திருந்தன. அந்த
ராமரையும், சீதையையும், லட்சுமணனையும் பல
வருடங்களுக்கு மக்களால் மறக்கவே முடியவில்லை.

அந்த ராமர் பாத்திரத்தில் தோன்றிய அருண் கோவில்,
சீதையாக வந்த தீபிகா சிக்கிலியா, லட்சுமணனாக வந்த
சுனில் லஹரி ஆகியோருக்கு மக்கள் மனதில் மிகப்பெரிய
மரியாதையும், ஒட்டுதலும் ஏற்பட்டிருந்தது.

33 ஆண்டுகள் முடிந்த நிலையில், அண்மையில்
ஒரு பேட்டியில் இந்த கதாபாத்திரங்கள்
கலந்து கொண்டார்கள்…. அவர்கள் சொல்லும்போது –

“ராமாயண்” தொடர் முடிந்த பிறகு எங்களுக்கு வேறு நிறைய
வாய்ப்புகள் வந்தன. ஆனால், நாங்கள் செல்லும் இடங்களில்
எல்லாம் மக்கள் எங்களுக்கு கொடுக்கும் மரியாதையையும்,
காட்டும் அன்பையும் பார்த்த பிறகு, எங்கள் இமேஜை
கெடுத்துக் கொள்ளும் துணிவு எங்களுக்கு ஏற்படவில்லை.
பல வருடங்களுக்கு நாங்கள் வேறு எந்த வாய்ப்புகளையும்
ஏற்றுக் கொள்ளாமலே இருந்தோம் என்கிறார்கள்.

ராமராக நடித்த அருண் கோவில் சொல்கிறார் –
“ராமாயண் வெளிவந்து சில வருடங்களுக்குப் பிறகு கூட,
நான் மௌரிஷியஸ் தெருக்களில் நடந்துசென்றபோது,
என்னை புரிந்துகொண்ட பலர், நடுத்தெரு என்றும் பார்க்காமல் –

அப்படியே தெருவில் விழுந்து வணங்கினர்.”

சீதையாக நடித்த தீபிகா, ராமாயண் தொடருக்குப் பிறகு,
பல வருடங்கள் தன்னால், சேலையைத் தவிர வேறு எந்தவித
நாகரிக உடையையும் உடுத்த முடியவில்லை….

வேறு எந்த தோற்றத்திலும் வெளியே செல்ல – சூழ்நிலை
என்னை அனுமதிக்கவில்லை. பார்த்த இடங்களிலெல்லாம்
பெண்கள் எனக்கு மிகுந்த மரியாதை கொடுத்தனர்.
தங்கள் தலையை துப்பட்டாவால் மூடிகொண்டு –
அன்போடும், மரியாதையோடும் வணக்கம் செலுத்தினர்
என்கிறார்.

தாங்கள் – ராமர், சீதை, லட்சுமணன் தோற்றத்தோடு,
வாரணாசி சென்றபோது, பல லட்சம் மக்கள் சுமார் 10 கிலோ
மீட்டர் தூரத்திற்கு, பாதையின் இருபுறமும் நின்று
வரவேற்றதையும் அவர்கள் நினைவுகூர்ந்தனர்.

அன்றைய ராமானந்த் சாகரின் ராமர், சீதை, லட்சுமணன்
ஆகியோரின் இன்றைய தோற்றத்தைக் காண ஆவலாக
இருக்குமே….!!!

கீழே – அன்றும் … இன்றும்….

——————————————————
.
—————————————————————————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to “ராமாயண்” – ராமரும் சீதையும் இப்போது எப்படி இருக்கிறார்கள்…???

 1. புதியவன் சொல்கிறார்:

  நாம் நம்பிக்கையோடு பார்க்கும்போது, கடவுள், அந்தப் பாத்திரங்களாகவே தோன்றுவர். அதனால்தான் சில்லறை நடிகைகள் இந்த மாதிரி கடவுளர் பாத்திரங்களை ஏற்கும்போது மனதுக்கு ஒப்பாது.

  எனக்கும் நிறைய சமயங்களில் தியானத்தில் கிருஷ்ணர் என நினைக்கும்போது சில சமயம் ‘மஹாபாரதம்’ தொடரில் கிருஷ்ணராக நடித்தவர் முகம் வந்துவிடும். மனதுக்கு சங்கடமாக இருக்கும், ஆனால் மனது ஒன்றி தொடரைப் பார்த்ததன் விளைவு அது என்று புரிந்துவிடும்.

  அப்போ ராமாயண் தொடர், பெரும் புரட்சியை (தொலைக்காட்சி பார்ப்பவர்கள்) உருவாக்கியது. தொடர் வெளியாகும் சமயத்தில் பலர் வெளியே செல்வதில்லை. அதற்குள் வீட்டில் இருக்கும்படியாகப் பார்த்துக்கொள்வர்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   மொழியே தெரியாவிட்டாலும் கூட பலர்
   ஞாயிறு காலைக்காக ஆவலுடன் காத்திருந்த
   காலம் அது. முக்கியமான காரணம் –
   அனைவருக்கும் தெரிந்த கதை தானே அது.
   எனவே, மொழியின் அவசியம் தேவைபடாமல்
   போனது; உணர்வுகளும், காட்சிகளுமே
   அவர்களுக்கு போதுமானவையாக இருந்தன…!!!

   ராமாயணத்திற்கும், மஹாபாரதத்திற்கும்
   உள்ள இன்னொரு விசேஷம் –
   எத்தனை முறை கேட்டாலும், பார்த்தாலும்
   அலுப்பதே இல்லை.

 2. Pingback: நாளை முதல் மீண்டும் தூர்தர்ஷனில் “ராமாயண்” ….!!! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.