…
…
…
…
சில நல்ல யோசனைகளைப் பற்றி கேள்விப்படுகிறேன்.
ஒருவேளை கொரோனா கொடூரம் தீவிரமாகுமேயானால்,
அது அடுத்த நிலைக்கு செல்லக்கூடிய சூழ்நிலை
ஏற்படுமேயானால், ஏற்படக்கூடிய தேவைகளை சமாளிக்க –
1) ராணுவ சாதன உற்பத்தித் தொழிற்சாலைகள்
(Ordnance Factories ) சிலவற்றில் –
கொரோனா சிகிச்சைகளில் ஈடுபட்டிருக்கும்
மருத்துவர்களுக்கும், உதவியாளர்கள்,
பணியாளர்களுக்கும் தேவையான –
முழு அளவிலான overall உடைகளையும்,
முகக்கவசங்களையும், சானிடைசர்களையும்
உற்பத்தி செய்யும் அவசரப்பணி தற்போது
கொடுக்கப்பட்டிருக்கிறது. பெரும் அளவில் தேவைப்படும்
இவற்றை, வெளிநாடுகளிலிருந்தும் பெற முடியாத
சூழ்நிலையில் இது ஒரு மிக நல்ல யோசனை / முயற்சி.
2) அதே போல், ரெயில்வே பெட்டிகளை தயாரிக்கும்
தொழிற்சாலைகள் சிலவற்றையும் இந்தப் பணிக்கு
பயன்படுத்த அரசு உத்தேசித்திருப்பதாகத் தெரிகிறது.
3) நாட்டின் அனைத்து பொது போக்குவரத்துகளும்
நிறுத்தப்பட்டு விட்ட நிலையில், ரெயில் பெட்டிகள்
உபயோகப்படுத்தப்படாத நிலையில் சும்மா தான் இருக்கின்றன.
இவற்றில் சில நூறு பெட்டிகளை –
தனிமைப்படுத்தப்படும் நோயாளிகளுக்கான
ஸ்பெஷல் வார்டுகளாக, தகுந்த முறையில் மாற்றி,
தயார் நிலையில் வைக்கவும் யோசனைகள்
உருவாகி இருப்பதாகத் தெரிகிறது..
மேற்கண்ட அனைத்து வசதிகளும், மத்திய அரசின்
அதிகாரம் / கட்டுப்பாட்டிற்குள் ஏற்கெனவே இருப்பதால்,
இந்த யோசனைகளை உடனடியாக செயல்பாட்டிற்கு
கொண்டு வருவது அரசுக்கு சுலபமாக இருக்கும்.
வரவேற்கத்தக்க யோசனைகள் இவை.
இதே போல், ஏற்படக்கூடிய தேவைகளை துரிதமாக
சமாளிக்ககூடிய இதர வழிவகைகளையும் மத்திய /மாநில
அரசுகளும், அரசின் வசம் உள்ள சம்பந்தப்பட்ட
இதர துறைகளில் பொறுப்பில் இருப்பவர்களும் கலந்து
ஆலோசிப்பது இன்னும் நல்ல யோசனைகள் உருவாக உதவும்.
அரசு சாராத இதர தொழில் நிபுணர்கள் கூட, நாட்டின் உடனடியான
எதிர்காலத் தேவைகளை சமாளிக்கத் தேவையான உத்திகளை
யோசிப்பது நல்லது.
.
————————————————————————————————————————————————————-
Good ideas.
Sir, I hear that one Machine Tool builder from Rajkot – Jyothi CNC – is getting engaged in manufacturing Ventilators. Also central government has asked Maruti to explore the possibility of manufacturing ventilators.
K . Ganapathi Subramanian