நக்கலும், கிண்டலுமாக மூன்றரை நிமிட சுவாரஸ்யமான உரையொன்று …


சுவாமி சின்மயாநந்தர் –
(இன்றைய போலி சந்நியாசிகளின்
தோற்றத்திற்கு முந்தைய) –

– உண்மையான துறவிகளின்
வரிசையில் விவேகாநந்தருக்கு அடுத்து இருப்பவர்.
1943-லேயே (நான் பிறப்பதற்கு முன்பே) -ஆங்கில
இலக்கியத்திலும், சட்டப்படிப்பிலும் தேர்ச்சி பெற்றிருந்தாலும்,

ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டு, சுமார் 12 ஆண்டுகள்
இமயத்தில் தனிமைத் தவத்தில் இருந்தவர்.

பின்னர், சின்மயா மிஷன் என்கிற ஒரு ஸ்தாபனத்தை நிறுவி,
அத்வைதம், பகவத் கீதை – ஆகியவற்றின் மேன்மையை
உலகம் பூராவும் எடுத்துச் சென்றவர்… சொன்னவர்.

அவரது மறைவிற்குப் பிறகும் (3 August 1993),
சின்மயா மிஷன் – கல்வி மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கான
தொண்டு நிறுவனம் – ஆடம்பரமின்றி, விளம்பரங்களின்றி,

அமைதியாகத் தொண்டாற்றி வருகிறது. நாடெங்கும் –
ராமகிருஷ்ணா மடத்தைப்போல, பல கல்வி நிறுவனங்களை
நிறுவி, கல்விப்பணி ஆற்றி வருகிறது.

ஆங்கிலத்தில், ஆங்கிலேயர்களே வியக்கும் அளவிற்கு
மிகச்சிறந்த பேச்சாற்றல்; புத்திசாலித்தனம்; உண்மை;
நேர்மை, வெளிப்படைத்தன்மை கொண்டவர்.

அவர் பேச்சில், புத்திசாலித்தனத்தோடு,
கிண்டலும், நக்கலும் கூடவே சேர்ந்து மிளிரும்.

அவரது சில கூட்டங்களில் கலந்துகொள்ளக்கூடிய
வாய்ப்பு எனக்கு இளம் வயதிலேயே கிடைத்தது…
அவரது ஆங்கில உரை பலரை கவர்ந்திழுத்தது.
அவர் மறைந்து சுமார் 27 ஆண்டுகள் ஆகி விட்டன.

மேற்கத்திய நாடுகளின் கலாச்சாரத்தில் உள்ள ஓட்டைகளை,
அவர்களிடமே வெளிப்படையாக போட்டு உடைக்கும்
துணிச்சல் கொண்டவர். சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர்,
அவர் ஆற்றிய உரையொன்றின் காணொளி கிடைத்தது.

கரோனா வைரஸ் பீடித்துள்ள இன்றைய தினத்திற்கு
அவரது பேச்சு எந்த அளவிற்கு பொருந்துகிறது என்பதைப்
பார்த்தால் வியப்பு மேலிடுகிறது.

மிக சுவாரஸ்யமான அந்த காணொளியை
நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்… கீழே…

(ஒலிப்பதிவு சரியில்லாத காரணத்தால், பேச்சை
புரிந்து கொள்ள முடியவில்லையென்றால் –
கூடவே காட்டப்படும், ஆங்கில சப்-டைட்டில்களை
காணலாம்… 2-ம் தடவை ஓடவிட்டு பார்த்தீர்களானால்,
நன்றாகப் புரியும்…!!! )

.
————————————————————————————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to நக்கலும், கிண்டலுமாக மூன்றரை நிமிட சுவாரஸ்யமான உரையொன்று …

 1. Prabhu Ram சொல்கிறார்:

  Very Interesting talk
  particularly considering the fact
  that it was given 35 yrs. back

 2. jayakumar chandrasekaran சொல்கிறார்:

  இதை பார்த்தவுடன் நம்முடைய மோடி டிரம்பினை கட்டிப்பிடித்ததும் டிரம்ப் பரிதாபமாக விழித்ததும் ஞாபகம் வந்தது. 

 3. புதியவன் சொல்கிறார்:

  காணொளி மிகவும் இண்டெரெஸ்டிங். இதைப் பார்க்கும்போது, நான் வெளிநாட்டில் வேலை பார்த்த ஆரம்பகட்டத்தில் நடந்தது நினைவுக்கு வந்தது. ஃப்ரான்ஸைச் சேர்ந்த பெண், எங்கள் கம்பெனியில் எனக்குச் சமமான பொசிஷனில் இருந்தார். அவர் டிபார்ட்மெண்டுக்கு நான் செய்த வேலையைப் பார்த்துவிட்டு எல்லோர் முன்னிலையிலும் கட்டிக்கொண்டார். எனக்கு ஒரே நெர்வஸாகி விடுவித்துக்கொண்டேன்-பார்க்க மற்றவர்களுக்கு ODD ஆகத் தோன்றியிருக்கும், நான் செய்தது. வட இந்தியர்களும் அந்தச் சந்திப்பில் இருந்தார்கள். என் ‘பாஸ்’ மட்டும் என் உணர்வைப் புரிந்துகொண்டார் (அடுத்த பெண் மேலே பட விடமாட்டேன் என்று.. பொதுவா இது தென் தமிழக வழக்கம்னு நினைக்கிறேன் – முன்பு). கை கொடுப்பதும் வெகு வெகு அபூர்வம். ஆனா வட நாட்டில் பொதுவா கட்டிப்பிடிப்பது (ஆணும் ஆணும்தான்) வழக்கம்னு நினைக்கிறேன். அரபு நாட்டில், of course அரபிப் பெண்கள் பக்கம் சென்றாலும் டிஸ்டன்ஸையும் டிக்னிட்டியையும் maintain செய்யணும். அவங்கள்ட பேசும்போதும் குரலை உயர்த்தாமல் சாஃப்டா பேசணும். இந்த கல்சர் சரி, இந்த கல்சர் தவறு என்று சட்னு சொல்லிட முடியாது. பொதுவா பாரதம், மற்ற தேசங்களைவிட கலாச்சாரத்தில் மிகவும் செழிப்பாக ஆதிகாலத்திலிருந்தே இருந்தது என்று நினைக்கிறேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.