எங்கே போகிறார் திருமா….? புதிய கூட்டணியா…?


கீழே ஒரு காணொளி –

திருமதி சசிகலா அம்மையார்… மற்றும்
அண்ணன் தினகரன் – ஆகியோருக்கு
அற்புதமான புகழாரம்..!!!

இந்தப் பேச்சு …திருமாவளவனை எங்கே கொண்டு
போய்ச்சேர்க்கும் …?

திருமாவின் பேச்சு – இந்த இரண்டில் ஒன்றைத்தான்
தெரியப்படுத்துகிறது…

1) தினகரன்(+சசிகலா அம்மையார்) அவர்களுடன்
ஒரு புதிய கூட்டணி….

2) தினகரனை(சசிகலா அம்மையாருடன் சேர்த்து)
திமுக கூட்டணிக்குள் கொண்டு வருவது….

திமுக தலைவர் இதை எந்த அளவிற்கு ரசிப்பார்….?

.
———————————————————————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to எங்கே போகிறார் திருமா….? புதிய கூட்டணியா…?

 1. arul சொல்கிறார்:

  Sasikala thiyagi..Dinakaran how he got this much money? it is completely caste based group

 2. புவியரசு சொல்கிறார்:

  ஜெயலலிதாவின் பெயரையும், பதவியையும்
  பயன்படுத்தி, முழுக்க முழுக்க கொள்ளையடித்தவர்கள்
  சசிகலா, தினகரன் அண்டு ஃபேமிலி.
  இதில் பலியானவர் ஜெயலலிதா தான்.
  ஆனால் இது தெரியாதது போல்
  சசிகலா-தினகரன் காம்பினேஷனை பலியாடுகள் போல்
  சித்தரிக்கிறார் திருமா.
  திருமா போடுவது முழுக்க முழுக்க வேடம்.
  அடுத்த தேர்தல் கூட்டணிக்கான அடித்தளம்.

 3. புதியவன் சொல்கிறார்:

  திருமா போடும் வேடத்திற்குக் காரணம் புரியலையா? சென்ற பாராளுமன்றத் தேர்தலிலேயே திருமாவுக்கு ஒரு சரியான ஆப்பினை ஸ்டாலின் வைத்தார். எங்க சின்னத்துல நின்னா நான் செலவைப் பார்த்துக்கறேன். இல்லைனா நீங்கதான் பார்த்துக்கணும் என்று நெருக்கினார். வேறு வழியில்லாமல் ஒருவர் திமுக சின்னத்திலும், இன்னொருவர் தனிச் சின்னத்திலும் நின்றார். தனிச் சின்னத்தில் நின்றவர், பொதுமக்களிடம் கையேந்தியும் தப்பித் தவறி வெற்றிபெற்றார். இப்போ சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் தவிர மற்றவர்கள் திமுக சின்னத்தில்தான் நிற்கணும் என்று ஸ்டாலின் சொல்லப்போகிறார் (திருமாவின் லாயல்டி பற்றிதான் ஸ்டாலினுக்கு நிறையவே தெரியுமே.. 2006ல் என்ன செய்தார் என்று). அப்படி நிற்கலைனா இடத்தைக் காலி செய் என்றே சொல்லிவிடுவார். அதற்காகத்தான் திருமா துண்டு போட்டு வைக்கிறார். நேச்சுரலாக அவர் திமுக பக்கம்தான் நிற்க முடியும் (வெற்றி பெறணும்னா). ஈகோனால கவிழணும்னா தினகரன் கும்பலோடு சேர்வார். அனேகமா எந்த கண்டிஷன் போட்டாலும் தலையாட்டிவிட்டு ‘சிக்கின அடிமை திருமா’ திமுகவை விட்டு விலகமாட்டார்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.