…
…
…
தன் நாட்டு மக்களுக்காக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
வெளியிட்டிருக்கும் ஒரு தொலைக்காட்சி அறிவிப்பு கீழே –
கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும்,
கனடிய மக்களுக்கு, கனடா அரசாங்கம் எந்தெந்த விதங்களில்
உதவி புரிய உத்தேசித்திருக்கிறது என்பதை இந்த
தொலைக்காட்சி அறிவிப்பில் கோடி காட்டுகிறார்….
மக்களுக்கு கட்டுப்பாடுகளை மட்டும் அறிவிக்காமல்,
நம்பிக்கையூட்டக்கூடிய வகையில் அரசுத்தரப்பிலிருந்து
மக்களுக்கு பலவிதங்களிலும் மிகவும் பயனளிக்கக்கூடிய
விதங்களில் உதவிகளையும்,
சலுகைகளையும் அறிவித்திருக்கிறார்….
மக்கள் நல அரசு ஒன்று எப்படிச் செயல்படும்/ செயல்பட வேண்டும்
என்பதற்கான மிகச்சிறந்த உதாரணம் ….
காணொளியிலேயே சப்-டைட்டில்களின் மூலம்
அனைத்தும் தெளிவாக காட்டப்படுவதால், தனி விளக்கங்கள்
ஏதும் தேவையில்லை என்று நினைக்கிறேன்….
இருந்தாலும் ஒன்றிரண்டு முக்கிய விஷயங்கள் –
– 82 பில்லியன் டாலர் அளவிற்கு அரசு உதவிகள்…
– 2 வாரங்களுக்கு ஒருமுறை மக்களுக்கு
அரசு தரப்பிலிருந்து பண உதவி…
– கடைகளை, வர்த்தக நிறுவனங்களை மூட நேரிடும்
சிறு, குறு வியாபாரிகளுக்கு, அவர்கள் ஊழியர்களுக்கான
சம்பளத்தை ஈடுகட்ட அரசு நிதியுதவி …
– நெருக்கடிக்கு உள்ளாகும் எந்த குடிமகனுக்கும் – அரசும்,
உதவிக்குழுக்களும், எத்தகைய தருணத்திலும் உதவத் தயாராக
காத்திருக்கும் என்கிற உறுதிமொழி ….
……
…..
பின் குறிப்பு –
கனடாவில் சுமார் 12 லட்சம் இந்தியர்கள்
வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது …
இந்தியா மீதும், இந்தியர்கள் மீதும், மிகவும்
பற்றும் பாசமும் கொண்ட கனடா பிரதமர் பிப்ரவரி, 2018-ல்
குடும்பத்தோடு சுற்றுப்பயணமாக இந்தியா வந்தது
வாசக நண்பர்களுக்கு நினைவிருக்கலாம்….
அப்போது வெளியான சில அழகிய புகைப்படங்கள் கீழே –
….
..
..
..
.
————————————————————————————————————————————————————————————-
//இந்தியா மீதும், இந்தியர்கள் மீதும், மிகவும்
பற்றும் பாசமும் கொண்ட கனடா பிரதமர்//
உங்களுக்கே இது டூ டூ மச்சாகத் தெரியவில்லையா கா.மை. சார்?
கனடாவில் ஏகப்பட்ட பஞ்சாபியர்கள். அவர்களது வாக்கினைக் கவர்வதற்காக கனடா பிரதமர் அடிக்கும் ஸ்டண்டுகளை, ஏதோ இந்தியர்கள் மீது பற்றும் பாசமும் கொண்டவர் என்பதுபோல சித்தரிக்கலாமா?
புதியவன்,
இதே லாஜிக்’கை இந்தியாவில்
பதவியில் இருப்பவர்களுக்கும்
பயன்படுத்தலாமா… 🙂 🙂
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
//இந்தியாவில் பதவியில் இருப்பவர்களுக்கும் பயன்படுத்தலாமா… // – இதில் உங்களுக்கு என்ன சந்தேகம்? எந்த அரசியல் கட்சியும், அவங்களோட பிரைமரி வாக்கு வங்கிகளுக்கு ஏற்றபடிதான் பேசுவார்கள் செயல்படுவார்கள். அப்படிச் செயல்படலைனாத்தான் ஆச்சர்யம். ஆளும் அரசியல் கட்சியினர், நேரடியாக வெளிப்படையாக அப்படிக் காண்பித்துக்கொள்ள மாட்டார்கள். அவ்ளோதான்.
இப்போ ஸ்டாலினுக்கு கொரோனா (தமிழகம், இந்தியா), தமிழகம் என்பதைப் பற்றியெல்லாம் அக்கறை கிடையாது. அவருக்கு அக்கறை காஷ்மீரிலுள்ள, ஈரானிலுள்ள, பாகிஸ்தானிலுள்ள சிறுபான்மையினர். அப்புறம் இத்தாலியில் விசுவரூபம் எடுக்கும் கொரோனா. காரணம் அப்போதான் அவருக்கு தமிழகத்தில் சிறுபான்மையினரின் வாக்கு கிடைக்கும் என்று நம்புகிறார். ஏண்டாப்பா…. இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமையைப் பற்றி இவ்வளவு அக்கறை காட்டுறயே..அவர்களின் தலைவரின் தாய் சென்னைக்கு மருத்துவத்திற்காக வந்தபோது, ஏர்போர்ட்டில் இறங்கவிடாமல் துரத்தி அடித்து உங்க தமிழ்ப்பற்றைக் காட்டினீர்களே , இலங்கையில் கிழக்கு மாகாண முஸ்லீம்களுக்கு வி.புலிகள் தொந்தரவு தந்தபோது கப்.சிப் என்று வாயப் பொத்திக்கொண்டு காங்கிரஸ் தலைவருக்கு அடி வருடிக்கொண்டிருந்தாயே என்று கூட இருக்கும் பச்சோந்தி வை.கோ கேட்கமாட்டார் என்பதில் அவ்வளவு நம்பிக்கை.
புதியவன் சார், உங்கள் குஜராத் தானைத் தலைவரை
ஏன் விட்டு விட்டீர்கள் ?
தமிழ்மொழி உலகத்திலேயே பழமையான மொழி,
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொல்லிகொண்டே
இந்தியை தமிழன் தலையில் அரைக்கிறாரே அது போல
என்றும் சொல்லுங்களேன்.
// கனடாவில் ஏகப்பட்ட பஞ்சாபியர்கள். அவர்களது வாக்கினைக் கவர்வதற்காக கனடா பிரதமர் அடிக்கும் ஸ்டண்டுகளை //
கனடாவில் 3 லட்சத்திற்கும் மேல் ஈழத்தமிழர்கள் உண்டு.
அவர்களைக் கவர்வதற்காக ட்ரூடே ஏன் இலங்கைக்குச்
சென்று அங்குள்ள தமிழர்களுக்கு சோப் போடவில்லை ?
அதற்கும் எதாவது விளக்கம் வைத்திருப்பீர்களே ?
பிரதமர் ஜஸ்டினுக்கு ஒரு வகையில் இந்தியாவுடன் அதுவும் தமிழ் நாட்டுடன் தொடர்பு உண்டு.அவரின் பேரனார் தோமஸ் கிழக்கிந்திய கம்பனி சார்பில் சிங்கப்பூரிலும் பின்னர் இந்தியாவில் தமிழ் நாட்டிலும் கடமை ஆற்றியவர். அப்போது தமிழ் கலாச்சாரம் அவரைக் கவர்ந்ததாக அவருடைய நூல் ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.