கமல்ஹாசனின் விசித்திரமான புகார்…!!!


கீழே ஒரு செய்தி –
நன்றி – தினமணி செய்தித்தளம்…

————–
இந்தியன் 2 விபத்து வழக்கில் காவல்துறை துன்புறுத்துகிறது: உயர்
நீதிமன்றத்தில் கமல் ஹாசன் முறையீடு!

இந்தியன் 2 விபத்து தொடர்பான வழக்கில் விசாரணை என்கிற
பெயரில் காவல்துறை தன்னைத் துன்புறுத்துவதாக சென்னை உயர்
நீதிமன்றத்தில் கமல் ஹாசன் முறையீடு செய்துள்ளார்.

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநா் ஷங்கா் இயக்கத்தில்,
நடிகா் கமல்ஹாசன், நடிகை காஜல் அகா்வால் நடிப்பில் ‘இந்தியன் 2’
திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு
நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியார் திரைப்பட நகரத்தில்
நடைபெற்று வந்தது.

நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியார் திரைப்பட நகரத்தில்
நடைபெற்ற இத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் கடந்த பிப்ரவரி
20-ஆம் தேதி கிரேன் விழுந்து உதவி இயக்குநா் சென்னை
அபிராமபுரம் சுந்தர்ராஜன் தெருவைச் சோ்ந்த சி.ஸ்ரீகிருஷ்ணா,

திரைப்பட தொழில்நுட்ப பணியாளா்கள் சொ.சந்திரன்,
சி.மது ஆகியோர் உயிரிழந்தனா். மேலும் 13 போ்
காயமடைந்தனா்.

இச்சம்பவம் தொடா்பாக நசரத்பேட்டை போலீஸார், லைகா நிறுவனம்,
தயாரிப்பு மேலாளா், கிரேன் உரிமையாளா் கிரேன் ஆபரேட்டா் ராஜன்
ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ்
வழக்குப் பதிவு செய்தனா். தலைமறைவாக இருந்த
கிரேன் ஆபரேட்டா் ராஜனை போலீஸார்உடனடியாக
கைது செய்தனா்.

இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி விசாரணையை
மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றி சென்னை பெருநகரகாவல்துறை
ஆணையா் ஏ.கே.விசுவநாதன் உத்தரவிட்டார். இதையடுத்து
நசரத்பேட்டை போலீஸார், வழக்கின் ஆவணங்களை மத்தியக்
குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். வழக்கின்
விசாரணை அதிகாரியாக துணை ஆணையா் ஜி.நாகஜோதி

நியமிக்கப்பட்டார். அடுத்தக் கட்ட நடவடிக்கையாக,
விபத்து குறித்து புதிதாக ஒரு வழக்கை மத்தியக் குற்றப்பிரிவு பதிவு
செய்தது. விபத்து ஏற்படும்போது சம்பவ
இடத்தில் இருந்த 6 ஊழியா்களிடம் மத்தியக் குற்றப்பிரிவு
அதிகாரிகள் விசாரணை செய்தனா். மத்திய குற்றப்பிரிவு
காவல் கூடுதல் ஆணையா் சி.ஈஸ்வர மூா்த்தி,
துணை ஆணையா் நாகஜோதி ஆகியோர் விபத்து நிகழ்ந்த இடத்துக்கு
நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
விபத்து ஏற்பட்டபோது அங்கிருந்த நடிகா் கமல்ஹாசன்,
இயக்குநா் ஷங்கா் போன்றோரிடம் விசாரணை நடத்த முடிவு
செய்யப்பட்டது. இதற்காக அவர்களுக்கு அழைப்பானை
அனுப்பப்பட்டது.

இதையடுத்து கடந்த 27-ஆம் தேதி இயக்குநா் ஷங்கரிடமும்,
3-ஆம் தேதி நடிகா் கமல்ஹாசனிடமும், 5-ஆம் தேதி லைகா
நிர்வாகிகளிடமும் விசாரணை செய்தனா். சென்னை வேப்பேரியில்
உள்ள மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறை அலுவலகத்தில் ஆஜராகி
விளக்கம் அளித்தார்கள். விபத்து நடந்தது குறித்தும் படப்பிடிப்புத்
தளத்தில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் கேள்விகள்
கேட்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

விசாரணைக்குப் பிறகு கமல் பேட்டியளித்ததாவது:

விபத்தில் அடிபடாமல் தப்பித்தவா்களின் நானும் ஒருவன்.
அதனால் நடந்த சம்பவத்தை பற்றிய விவரங்களை கூறுவது எனது
கடமை. எங்கள் துறையில் இனி இதுபோன்று விபத்துகள்
நடைபெறாமல் இருக்க இனி நாங்கள் எடுக்க வேண்டிய
நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடலாகவே, இதை நான்
பார்க்கிறேன். இனி இதுபோன்று விபத்துகள் நடக்காமல் இருக்க
காவல்துறையின் ஆலோசனையும் நாங்கள் கேட்டுள்ளோம்
என்றார்.

இந்த வழக்குத் தொடா்பாக விசாரணை செய்வதற்கு, சம்பவத்தின்போது
அங்கிருந்த துணை நடிகா்கள், தொழில்நுட்ப கலைஞா்கள், செட்
அமைத்தவா்கள் ஆகியோருக்கு மத்தியக் குற்றப்பிரிவு அண்மையில்
அழைப்பாணை அனுப்பியது. இந்த அழைப்பாணையை ஏற்று துணை
நடிகா்கள், தொழில்நுட்ப கலைஞா்கள், செட் அமைத்தார்கள் என 15 போ்
மத்தியக் குற்றப்பிரிவில் திங்கள்கிழமை ஆஜரானார்கள். இவா்களிடம்
துணை ஆணையா் நாகஜோதி தலைமையில்
போலீஸார் விசாரணையில் ஈடுபட்டனா். அவா்கள் அனைவரும்
அளித்த தகவல்கள் எழுத்து பூா்வமாகவும், விடியோவாகவும் பதிவு
செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்தியன் 2 விபத்து வழக்கில் விசாரணை என்கிற
பெயரில் தன்னை காவல்துறை தன்னை துன்புறுத்துவதாக சென்னை
உயர் நீதிமன்றத்தில் கமல் ஹாசன் முறையீடு செய்துள்ளார்.

————————————————————————

மேற்படி செய்தி நமக்கு மிகவும் வியப்பூட்டுகிறது.

திரு.கமல்ஹாசனைப் போன்ற –
மிகப்பெரிய பணக்காரரும்,
புகழ்பெற்ற நடிகரும்,
சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவரும்,
அரசியல் கட்சித் தலவருமான ஒருவரை-

காவல்துறை எந்தவிதத்தில் துன்புறுத்த முடியும்….?

எந்தவித செல்வாக்கம் இல்லாத அன்றாடங்காய்ச்சி,
தொழில்முறை குற்றவாளி (regular offender ) என்றால்,
ஜட்டியோடு உட்கார வைக்கும் பழக்கம் கூட உண்டு தான்…..!!!

ஆனால், கமல்ஹாசன் அவர்களை இந்த விதத்தில் எல்லாம்
நிச்சயம் நடத்தி இருக்க மாட்டார்கள். அப்படி நடத்தியிருந்தால்,
அவரும் இதுவரை சும்மா விட்டிருக்க மாட்டார்.

காவல்துறை எந்த விதத்தில் இவரை துன்புறுத்துகிறது…?
தான் நீதிமன்றத்தில் எத்தகைய நிவாரணத்த எதிர்பார்த்து
இந்த மனுவை தாக்கல் செய்திருக்கிறார்…?

அவர் மீது குற்றம் காணும் முயற்சிகள்
ஏதேனும் நடக்கிறதா…? யாராவது பின்னணியில்
இருக்கிறார்களா…?

இந்த விவரங்களையும் சேர்த்து வெளியிட்டால் தானே –
செய்தியை சரியாகப் புரிந்துகொள்ள முடியும்…?

மேலும் இவருக்கு மீடியா பழகாத விஷயமா என்ன ?
ஒரு பேட்டி கொடுத்தால் – “சகலமும்” விளங்கி விடுமே…!!!

ஏன் செய்யவில்லை….???
இந்தப் புகாரின் பின்னணியில் ஏன் இத்தனை மர்மம்…?

—————————————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to கமல்ஹாசனின் விசித்திரமான புகார்…!!!

 1. natchander சொல்கிறார்:

  Kamal hasan had no patience
  No tolearance
  No sincerety
  No responsibility
  Even to undergo the routine enquery,,,,,
  Simple,,!!!

 2. புதியவன் சொல்கிறார்:

  ஒரு தளத்தில் படித்தேன்… கமலஹாசனை, விபத்து நடந்த சமயம் என்ன நடந்தது என்று நடித்துக்காண்பிக்கச் சொல்லி. பொதுவா, விசாரணை அதிகாரி, தன் மன விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் ஒருவரை நடத்தலாம். கமலஹாசன், தன் ஸ்டேடஸுக்குக் குறைவாக அந்த அதிகாரி(கள்) மரியாதைக் குறைவாக நடத்துகிறார்கள் என்று எண்ணியிருக்கலாம். ஆளும் அரசுகளுக்கு எதிராக இருப்பதால், அந்தச் சார்புடைய அதிகாரிகளும் குடைச்சல் கொடுத்திருக்கலாம் இல்லை கிடைத்த வாய்ப்பை உபயோகித்திருக்கலாம். அதனால் இதில் சிம்பிளாக கமலஹாசன்மேல் குற்றம் இருப்பதாக என் மனம் எண்ணவில்லை.

  எப்போதும் அரசியல் செய்யும் ஒருவர் நினைவில் வைத்திருக்கவேண்டியது…. நாம் நண்பர்களைவிட எதிரிகளை அதிகமாக்கிக்கொண்டால், அல்லது தீவிரமாக பிறரை எதிரியாக்கிக்கொண்டால், வாய்ப்பு கிடைக்கும்போது அவர்கள் தங்களைப் பழிவாங்கும் சந்தர்ப்பத்தை நாமே அவர்களுக்குக் கொடுக்கிறோம் என்பதை மனதில் வைத்துக்கொள்ளணும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.