என் விருப்பம் – 37 ( நினைவில் நிற்கும் நிஜ வரிகள் …)


இன்றைய என் விருப்பம் பகுதியில்,
சிறு வயது முதலே என் நெஞ்சில் பதிந்து
நிலைத்து நிற்கும் வரிகளைக் கொண்ட
நிஜமான தத்துவங்களைப் பேசும் சில பாடல்களை –
இங்கே தர விரும்புகிறேன்….

————————-

முதல் 4 பாடல்களும் கவிஞர் கண்ணதாசனின்
சிந்தனையில் உதித்தவை.
கடைசிப்பாடல் – பாரதியின் படைப்பு ….

————-

ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே

சூறைக் காற்று மோதினால் – தோணி ஓட்டம் மேவுமோ?
வாழ்வில் துன்பம் வரவு –
சுகம் செலவு, இருப்பது கனவு –
காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்?

———-
கே.வி.மஹாதேவன் இசையில்,
திருச்சி லோகநாதனின் குரலில் –
தை பிறந்தால் வழி பிறக்கும் படத்தில் –

….

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை

எங்கே வாழ்க்கை தொடங்கும் –
அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது

பாதையெல்லாம் மாறி வரும்; பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்

—-
P.B. ஸ்ரீனிவாஸ்; எம்.எஸ்.விஸ்வநாதன்
நெஞ்சில் ஒரு ஆலயம் –

….

….

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்
வாழை போல தன்னைத் தந்து தியாகி ஆகலாம்
உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்

ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம்
உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம்
யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்
மனம்… மனம்… அது கோவில் ஆகலாம்

மனமிருந்தால் பறவைக்கூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்
துணிந்து விட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்
குணம்… குணம்… அது கோவில் ஆகலாம்

சுமைதாங்கியில், பி.பி.ஸ்ரீநிவாஸ்
இசை – எம்.எஸ்.வி.

——–

——–

மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனை இருக்கும்

வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவது இல்லை

எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.

ஏழை மனதை மாளிகை ஆக்கி
இரவும் பகலும் காவியம் பாடு

நாளை பொழுதை இறைவனுக்கு அளித்து
நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு

உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்து பார்த்து நிம்மதி நாடு

———
சுமைதாங்கியில் – P.B.ஸ்ரீநிவாஸ்,
இசை – எம்.எஸ்.வி.

——–

மனதிலுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும்,
மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்…..

——–
கல்கி’யின் -கள்வனின் காதலி திரைப்படத்தில்,
பானுமதி, டி.எம்.எஸ். – இசை –
இசை -கோவிந்தராஜுலு நாயுடு & கண்டசாலா

.
————————————————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to என் விருப்பம் – 37 ( நினைவில் நிற்கும் நிஜ வரிகள் …)

  1. PK சொல்கிறார்:

    Excellent choice!

  2. D. CHANDRAMOULI சொல்கிறார்:

    Dear KM
    Every one of these songs is a gem. Kannadasan’s lyrics in simple words convey deep philosophical solution-oriented thoughts. Trichy Loganathan must have stayed on for a longer period. His beaming voice gives added majesty to his songs. The entry of TMS must have eclipsed the careers of some of his contemporaries like CS Jayaraman, Trichy Loganathan and a few others. AM Raja by his own exit helped bring in PB Srinivas, though their voices were totally different. For Gemini Ganesan, no one other than AM Raja would be apt. But PB Srinivas got the chance to replace AM Raja for Gemini!! However, for some songs, PB Srinivas’ proved to be the best. Some of these sixties’ songs make us re-live those glorious days!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.