…
…
…
பிரிட்டிஷ் அரச பரம்பரை அண்மைக்காலங்களில்
மற்றவர்களை சந்திக்கும்போது, நடந்துகொள்ளும்
முறையில் ஒரு வித்தியாசத்தை இந்த காணொளியில்
காணலாம்…..
இந்தியப் பண்பாட்டு முறைக்கு மாறி விட்டார்கள்…!!!
கை குலுக்குவதை நிறுத்தி விட்டு, வணக்கம் சொல்லத்
துவங்கி விட்டார்கள்…( காரணம் கொரானா’வாக
இருந்தாலும் கூட…!!! )
….
….
இந்தியாவிற்கு சென்று வந்த பிறகு கைகுலுக்குவதை
நிறுத்தி விட்டேன் என்று நேற்று சொல்லி இருக்கிறார் –
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்….!!!
அவருக்கும், நமது இந்திய(வட…?) தலைமைக்கும்
சேர்த்து நாம் சொல்ல விரும்புவது – கூடவே இந்த
“கட்டிப்பிடிக்கும்” கலாச்சாரத்தையும் விட்டு விடலாமே…
ஒரே சந்திப்பில், 5 நிமிடங்களுக்குள் 6 தடவை
ஆரத்தழுவிக்கொள்வது எதில் சேர்த்தி..?
(காதலர்களாக இருந்தாலொழிய… 🙂 🙂 )
.
—————————————————————————————————————————————————-
கட்டிப்பிடிக்கும் கலாச்சாரம் இந்திய கலாச்சாரம் கிடையாது. இந்திய, இந்துக் கலாச்சாரம், கை கூப்புவதோடு முடிந்துவிடுகிறது. மேற்கத்தைய கலாச்சாரம் வலிமையான கை குலுக்கல், மற்றும் லைட்டான கட்டிப் பிடிப்பு (ஆரத்தழுவுவது). அரபுக் கலாச்சாரம் முகமன்கள் பல கூறியபிறகு, இரு கன்னங்களிலும் லைட்டாக முத்தமிட்டுக்கொள்வது. (ஒரே பாலினரிடம்). ஜப்பான், தென் கொரிய கலாச்சாரம் தலையை மிகவும் குனிந்து வணங்குவது. கை கொடுப்பது அல்ல
//கட்டிப்பிடிக்கும் கலாச்சாரம் இந்திய கலாச்சாரம் கிடையாது.//
என்ன புதியவன் சார்,
மோடிஜிக்கு கூடவா இதே ரூல் 🙂