…
…
…
இன்றைக்கு சென்னையில் ரஜினிகாந்த் அவர்கள்
செய்தியாளர்களை சந்தித்து தன்னுடைய அரசியல்
திட்டங்களை வெளியிட்டது தொலைக்காட்சிகளில்
பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது…
அரசியல்வாதிகள், விமரிசகர்கள் என்று பலரும்
பலவித கருத்துகளைக் கூறி வருகிறார்கள்.
ரஜினி இன்று செய்தியாளரிடைய பேசிய அதே
விஷயங்களை ஒரு கடித வாயிலாகவும் வெளியிட்டுள்ளார்.
பிபிசி செய்தித்தளம், அதனை ஒரு ட்விட்டர் மூலம்
வெளியிட்டுள்ளது. ரஜினி பேசியவற்றின் சாராம்சத்தை
தெரிந்து கொள்வதற்காக முதலில் அந்த கடிதம் கீழே –
….
———
முழு கடிதமும் கீழே –
———
…
…
….
இந்த தளத்தின் நண்பர்கள் பலருக்கும் இதுகுறித்து பல்வேறு
விதமான கருத்துகள் இருக்கலாம். அவற்றைக் குறித்து
அவர்கள் இந்த தளத்தில் பின்னூட்டங்களின் மூலம்
தெரிவித்தால், பொதுவாக இந்த விஷயத்தில்
எத்தகைய எண்ணங்கள் உருவாகின்றன என்று
தெரிந்துகொள்ள அது உதவியாக இருக்கும்.
என் கருத்து என்னவென்றும் சொல்லி விடுகிறேன்….
“ரஜினிகாந்த் அவர்களின் கருத்தையும், அவரது 3 அம்ச
திட்டத்தையும் -இன்றைய சூழ்நிலையில் – நான் வரவேற்கிறேன்.
தான் நினைப்பதை செயல்படுத்துவதற்கு இது அவருக்கு
உதவியாக இருக்குமென்று நான் நினைக்கிறேன்….
முக்கியமாக, அரசியல் கட்சியைத் துவங்கி,
தேர்தலை சந்திக்கும்போது, ரஜினி மீது –
“70 வயதில் – பதவி ஆசை” –
“தமிழர் அல்லாதவர்”
“திரைப்பட வாய்ப்புகள் முடிந்து விட்டதால்
அரசியலுக்கு வருகிறார்.. ”
– போன்ற குற்றச்சாட்டுகளை மற்றவர்கள் கூறுவதையும்,
அதற்கு அவர் தன்னையே பாதுகாத்துக்கொள்ள வேண்டிய
(self defence) சூழ்நிலையில் இருக்கக்கூடிய நிலை
உருவாவதையும் இது தவிர்த்து விடும்.
இன்னமும் கூட பல எண்ணங்கள் என் மனதில்
தோன்றுகின்றன… போகப்போக அவற்றையும் பார்க்கலாம்.
நண்பர்களின் கருத்துகளை வரவேற்கிறேன்.
.
——————————————————————————————————————————————————————
ரஜினி சட்டமன்றத்திற்கு போக மாட்டார்;
அவர் முதலமைச்சரும் ஆக மாட்டார் என்று
சொன்னால், மக்களின் ஆர்வம் குறைந்து விடாதா ?
அவர் கட்சியை ஜெயிக்க வைக்க ஆர்வம்
காட்டுவார்களா ? சந்தேகம் தான்.
சீமான் போன்ற வெறிப்பேச்சாளர்களின்
எதிர்ப்பு உரை இனி எடுபடாது என்கிற ஒரே ஒரு
காரணத்திற்காக நான் இதை வரவேற்கிறேன்.
ரஜினி புதிய கட்சியை ஆரம்பிப்பதன் நோக்கம்,
அவர் பதவியை ஏற்க மறுப்பதன் காரணம் ஆகியவை
முழுமையாக கடைசி மட்ட மக்கள் வரை
எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
காசு வாங்காமல் ஓட்டளிக்க
அவர்களை சம்மதிக்க வைத்தால்,
அதுவே மிகப்பெரிய வெற்றி தான்.
காசு கொடுத்து ஓட்டு வாங்கி விடலாமென்கிற
அரசியல் கட்சிகளின் மூர்க்க சித்தாந்தத்தை
உடைத்தெரிய ரஜினியால் முடிந்தால், அதையே
அவர் இந்த சமுதாயத்திற்கு செய்யும் மிகப்பெரிய
சேவையாக கருதலாம்.
ரஜினியின் தற்போதையை அரசியல் முடிவை வரவேற்பதாகவும், வாழ்த்துவதாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாக
செய்தி வெளியாகி இருக்கிறது.
ரஜினியின் முடிவிற்கு கிடைத்த முதல் பாசிடிவ் ரிசல்ட் இது.
நான் அறிகின்ற வரையில், கட்சி சாராத
பலரும் இதை வரவேற்கின்றனர். இந்த
அறிவிப்பை இறுதி என்று யாருமே எடுத்துக்
கொள்ளவில்லை.
மக்கள் மனதில் ஒரு எழுச்சியை ஏற்படுத்த,
ரஜினி எடுக்கின்ற முயற்சிகளின் ஒரு படி
என்றே நினைக்கின்றனர்.
நிச்சயமாக பொதுமக்களிடையே இதற்கு
வரவேற்பு இருக்கிறது.
ஆனால், ஊடகங்களில் பெரும்பாலானவை
இதற்கு எதிராகவே இருக்கின்றன.
ரஜினியை மட்டம் தட்டுவதிலும், கிண்டல்
செய்வதிலுமே அவை குறியாக இருக்கின்றன.
அந்த அளவிற்கு அவற்றின் மீது திமுக மற்றும்
ஆளும் அதிமுக செல்வாக்கு கொண்டுள்ளன.
ரஜினி இவற்றை எல்லாம் நம்பாமல்,
நேரடியாக மக்களுடன் தொடர்பு கொள்ளும்
வழிகளை மேற்கொள்வதே சிறந்த பலனை
உண்டு பண்ணும். ரஜினி நிறைய
சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு மக்களை
சந்திக்க வேண்டும்.
நண்பர்களுக்கு,
ரஜினியின் இன்றைய செய்தியாளர் சந்திப்பில்
நிகழ்த்திய உரையை வைத்துக் கொண்டு,
நியூஸ்-18, புதிய தலைமுறை, நியூஸ்-7
போன்ற செய்திச் சேனல்கள் அவர் ஏதோ
கட்சி ஆரம்பிக்கும் எண்ணத்தை கைவிட்டு
விட்டது போன்ற பிரமையை உண்டு பண்ணுவதில்
அதி தீவிரமாக முனைந்துள்ளன.
மேலே எழுத்து பூர்வமாக ரஜினி வெளியிட்டிருக்கும்
செய்தியை படித்துப் பாருங்கள். அத்தகைய எண்ணம்
எதுவுமே அதில் இல்லை… தான் கட்சியை துவக்க
கண்டிஷன் எதையும் அவர் போடவில்லை.
தான் எந்த நோக்கத்துடன் கட்சியை துவங்க
விரும்புகிறார் என்பதைத்தான் அவர் மீண்டும் மீண்டும்
தெளிவு படுத்துகிறார்.
மீடியாக்களில் ஆளும்/எதிர்க்கட்சிகளின் பணம்
விளையாடுகிறது. நீங்கள் சொல்வது போல்
நிறைய பேர் எதிர்பார்ப்பது, ரஜினி கூடிய விரைவில்
சுற்றுப்பயணங்களை தொடங்க வேண்டும்.
15 நாட்களுக்கு ஒரு முறை மாவட்டத் தலைநகர்களில்
பேசுவது என்று வைத்துக் கொண்டால்,
மக்களிடம் அவரது செய்திகள் அதிக அளவில்
சரியான விதத்தில் போய்ச்சேரும்.
” ஆட்சி சிறப்பாக நடைபெற,
மக்கள் வளர்ச்சிப்பணியில்
அனுபவம் வாய்ந்த பல்வேறு
துறைகளைச் சார்ந்த வல்லுனர்களை
தேர்ந்தெடுத்து, ஒரு ஆலோசனைக்
குழுவை உருவாக்கி, அவர்கள்
பரிந்துரைக்கும் ஆலோசனைகளை
அரசின் மூலம் செயல்படுத்துவதை
கட்சித் தலைமை உறுதி செய்ய
வேண்டும்…”
-இது தான் சிறந்த ஆட்சிக்கான
சரியான அணுகுமுறை. இந்த செய்திகள்
எல்லாம் அதிக மக்களிடம் போய்ச்சேர
நல்ல அரசியலை விரும்பும் மக்கள்
ஆர்வம் காட்ட வேண்டும்.
ஜாதி-மத வேறுபாடுகள் இல்லாத,
ஊழல் இல்லாத,
சிறந்த நிர்வாகத்தைக் கொண்ட
தமிழகம் உருவாக வேண்டுமென்று
வேண்டுவோம்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Both DMK and AIADMK does not want Rajini coming into politics for obvious reasons.
media houses like sun tv, puthia thalaimurai, news 7, thanthi tv, news 18 (all are supporters of
DMK ) does not want Rajini entering tamilnadu politics. DMK is really hungry for power which eluded them for the past 10 years due to the presence of Jayalalitha. DMK” sponsored”
tv channels want to create an impression that Rajini will not take the plunge. Rajini makkal manram
volunteers should take up the challenges created by these biased tv media and help rajini”s message reach the neutral voters .This is the right time for change and liberate the tamilnadu people from the clutches of dmk and aiadmk . IT IS NOW OR NEVER SITUATION. Let 2021
usher in a new govt under the leadership of Rajinikanth for the betterment of Tamilnadu.
இந்த பாயிண்டுகள் சிந்திக்கத்தக்கவை. ஆனால் ரஜினிக்கு மக்களை அந்த அரசியல் எழுச்சிக்குத் தயார் செய்யக்கூடிய சூழ்நிலை இப்போது இருக்கிறதா? ரஜினியை இஸ்லாமியர்கள் முழுவதுமாக நம்பமாட்டார்கள். (2021 தேர்தலில்). அப்போ இருப்பதில் 25% வாக்கு வங்கியை வைத்துக்கொண்டுள்ள திமுக வருவதற்கே வாய்ப்புகள் அதிகம். திமுக வருவது தமிழகத்திற்கு நல்லதல்ல.
நாந்தான் கட்சியின் தலைவர், என் தலைமையின் கீழ்தான் அரசு செயல்படும் என்று அரசியல் களம் புகுந்தால்தான் மக்களுக்கு கொஞ்சம் மன மாற்றம் ஏற்பட வாய்ப்பு ஏற்படும் என நினைக்கிறேன். இதற்கு முன்னால், ஜெ. பின்னாலிருந்து, ஓபிஎஸ் போன்றவர்களை முதல்வராக்கி ஆட்சியை நடத்தியிருக்கிறார். ஆனால் மக்களுக்கு ஜெ.தான் முதலமைச்சர் என்ற எண்ணம் உண்டு (ஓபிஎஸ் என்பது அவரின் பொம்மை என்று தெரியும்). ரஜினி ஆட்சியைப் பிடிக்காமலேயே, அந்த இடத்துக்கு வராமலேயே இந்த மாதிரி ஒரு அமைப்பை ப்ரொஜெக்ட் செய்கிறார். இது எப்படி மக்களைக் கவரும்?
பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.
ரஜினிகாந்த் பாஜகவில் சேர்ந்திருந்தால்
இதே புதியவன் சார் அவரை இந்திரன் சந்திரன்
என்றெல்லாம் கூறி ஆதரித்திருப்பார்.
என்செய்வது ரஜினிக்குத்தான் கொடுத்து வைக்கவில்லை;
கோபி… இப்படீல்லாம் சிந்திக்காதீங்க. பாஜகவில் எத்தனையோ லாஜிக்கே இல்லாமல் மத வெறியைத் தூண்டுமாறு பேசுபவர்கள் இருக்காங்க. அவர்களை ஒரு நாளும் ஆதரித்ததில்லை. ரஜினி வரணும் என்று நான் 96ல் ஜெ.வின் அராஜக ஆட்சிக்குப் பின் நினைத்தேன். அவர், அந்த மக்கள் மனநிலையைப் புரிஞ்சுக்காம கருணாநிதியை வளர்த்துவிட்டுவிட்டார்.
ரஜினி இந்திரன் சந்திரன் ரேஞ்சுலாம் இல்லை. தைரியமாக களமிறங்கி மக்களைச் சந்திக்கும்போதுதான் அவருடைய இமேஜ் உயரும். அதனை அவர் செய்ததாக எனக்கு நினைவில்லை.
YES. I endorse Mr.Tamilmani’s Views.
பொதுமக்கள் ஏற்று கொள்வார்கள் கட்சிக்காரர்கள் ஏற்று கொள்வார்களா,அவர்கள் இந்த செய்தியை மக்களிடம் கொண்டு சேர்ப்பார்களா, இதனால் அவர்களுக்கு என்ன லாபம் ”அரசியல் என்பதே வியாபாரம்” என்று நினைத்து வந்தவர்கள் சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்க நினைத்தவர்கள் என்ன செய்வார்கள்…