மொட்டையரின் ஆட்சியிலே….


இது லேட்டஸ்ட் செய்தி ( மட்டுமே…!!! ) –
விமரிசனத்தை, விசாரணை முடிந்த பிறகு தனியே
வைத்துக் கொள்ளலாம்.

( உ.பி.யில் சிலரது பெயர், விலாசம், புகைப்படத்துடன்
கூடிய பெரிய சைஸ் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இதில் பெண்களும் அடக்கம்….இவற்றால் தங்கள்
உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என்று சம்பந்தப்பட்டவர்கள்
அச்சம் தெரிவித்திருந்தனர்… இந்த நிலையில் – )

– ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில்
அவசரமாகக் கூடிய உயர்நீதிமன்றம்…

– உ.பி.அரசுக்கு கடும் கண்டனம்…

– உயர்நீதிமன்றம் தானாகவே முன்வந்து, விசாரணக்கு
எடுத்துக்கொண்ட வழக்கு…

—————————

பிரயாக்ராஜ் :

உ.பி.,யில், முதல்வர், ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ.க,
ஆட்சி நடைபெறுகிறது. இம்மாநில தலைநகர் லக்னோவின்
பல்வேறு இடங்களில், போலீசார் விளம்பர பலகைகள்
அமைத்துள்ளனர்.

அவற்றில், கடந்த டிசம்பரில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு
எதிரான போராட்டங்களின் போது, வன்முறையில் ஈடுபட்டதாக
குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம்
காணும் வகையில், அவர்களின் பெயர், புகைப்படம் மற்றும்
முகவரி ஆகியவை இடம்பெற்றுள்ளன.’ பொது மற்றும்
தனியார் சொத்துக்களின் சேதங்களுக்கு, அவர்கள் இழப்பீடு
வழங்க வேண்டும்.இல்லாவிட்டால், அவர்களின் சொத்துக்கள்
பறிமுதல் செய்யப்படும்’ என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த விளம்பர பலகைகள் குறித்து அறிந்த அம்மாநில
உயர் நீதிமன்றம், இதை தாமாக முன் வந்து வழக்காக
எடுத்துக்கொண்டது.

தலைமை நீதிபதி கோவிந்த் மாத்துார் மற்றும் நீதிபதி
ரமேஷ் சின்ஹா ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு,
நேற்று காலை இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்
கொள்ளப்பட்டது.

உ.பி.,யில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு
எதிராக நடந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட சேதங்களுக்கு,
வன்முறையில் ஈடுபட்டவர்கள் இழப்பீடு வழங்க வேண்டும்
என, விளம்பர பலகைகள் அமைக்கப்பட்ட மாநில அரசின்
நடவடிக்கையை, உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது.

அப்போது, ‘மாநில அரசின் இந்த நடவடிக்கை அநியாயமானது
என்பதுடன், சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட சுதந்திரம்
மீதான முழுமையான அத்துமீறல்’ என, மாநில அரசு மீது,
நீதிபதிகள் குற்றஞ்சாட்டினர்.

இந்த பிரச்னை குறித்து, அரசு தரப்பில் பதில் அளிக்க
நீதிபதிகள் உத்தரவிட்டனர். அட்வகேட் ஜெனரல் ஆஜராக
அவகாசம் அளிக்கும் படி, அரசு தரப்பில் கோரிக்கை
விடுக்கப்பட்டது.

நீதிபதிகள், வழக்கின் விசாரணையை,
இன்றைக்கு தள்ளி வைத்தனர்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2497276

.
——————————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல். Bookmark the permalink.

15 Responses to மொட்டையரின் ஆட்சியிலே….

 1. புதியவன் சொல்கிறார்:

  கா.மை. சார்.. இதில் எனக்கு மாற்றுக்கருத்து உள்ளது. போலீஸ் பிடியில் பிடிபடும் அனேகமாக அனைத்துக் கொள்ளையர்களும் முகமூடி அணிந்தே போஸ் கொடுக்கச் செய்கின்றனர். திருடனுக்கு என்ன தனி மனித சுதந்திரம்? அவன் மற்றவர்களின் சுதந்திரத்தை மதித்தானா? கலவரத்தில் ஈடுபடுபவர்களின் முழு விவரங்களையும் போட்டதில் தவறு எதையும் நான் காணவில்லை. ‘சட்டப்படி குற்றம்’ என்பதைப் பற்றி எனக்குத் தெரியாது, ஏனென்றால் ஹெல்மெட் , ஒன் வே முதல்கொண்டு பெரும்பான்மையான சட்டங்களை மீறுவதில் நாம் கில்லாடிகளாயிற்றே.

  சமீபத்தில் உ.பியில் பிரயாணம் செய்தபோது பலர், முதலமைச்சர் மிகவும் சிம்பிளான மனிதர் என்றே சொன்னார்கள்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   // கலவரத்தில் ஈடுபடுபவர்களின் முழு விவரங்களையும்
   போட்டதில் தவறு எதையும் நான் காணவில்லை.//

   இவர்கள் மீது அரசாங்க சொத்துக்களை எரித்தார்கள்
   என்று குற்றம் சாட்டி, புகைப்படத்துடன் போஸ்டர்
   ஒட்டப்பட்டிருக்கிறது.

   ஆளும் கட்சியின்/அரசின் ஏவல்படி,
   காவல் துறையால்குற்றம் சாட்டப்பட்டதால் மட்டும்
   ஒருவரை குற்றவாளி என்று தீர்மானித்து அரசே
   தண்டனையும் கொடுத்து விட முடியுமா…?

   பிறகு நீதிமன்றம் எதற்கு இருக்கிறது…?
   யார் ஒருவர் மீதும் சட்டப்படி வழக்கு தொடர்ந்து,
   நீதிமன்றத்தில் ஆதாரங்களுடன் நிரூபிக்கும்
   வரையில், அவரை குற்றவாளி என்று கூற முடியாது.
   அவரை “குற்றம் சாட்டப்பட்டவர்” என்று தான்
   கூற வேண்டும்.
   அதெப்படி இந்த சிம்பிள் லாஜிக் கூட உங்களுக்கு
   தெரியாமல் போனது…?
   உணர்வு…புத்தியை மிஞ்சுகிறது –
   இங்கே பெரும்பான்மையானவர்களிடம்
   இது தான் பிரச்சினை.
   நாட்டில் இன்று நிலவும் அமைதியின்மைக்கு
   இது தான் அடிப்படைக்காரணம்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    உங்களைப் பிடிக்காத எவராவது ஒருவர்
    பொய்யாக, நீங்கள் அவரை பிக் பாக்கெட்
    அடித்து விட்டீர்கள் என்று போலீசில்
    புகார் கொடுத்தால் –
    உடனே போலீஸ், உங்கள் புகைப்படத்துடன்
    ‘பிக் பாக்கெட் ஜாக்கிரதை’ என்று
    போஸ்டர் அடித்து ஒட்டும்போது தான்
    உங்களால் இந்த அவலத்தை
    புரிந்து கொள்ள முடியுமா…?

    .
    வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     இதற்கு நண்பர் புதியவன் அவர்களிடமிருந்து
     விளக்கம் வராது என்பதை உணர்கிறேன்.

     சங்கடமான கேள்விகள் எழும்போது, silent mode-க்கு
     செல்வது தானே அவரது வழி !

     whatsapp -ல் வரும் வெறுப்புணர்வைத் தூண்டும்
     செய்திகள் எல்லா தரப்பிலிருந்தும் வருகின்றன
     என்பது தான் உண்மை.

     முக்கியமாக ஆளும் தரப்பிலிருந்து தான் மதவெறியைத்
     தூண்டும் வதந்திகள் அதிகம் வருகின்றன
     என்பதை மனசாட்சியை மதிப்பவர்கள் உணர்வார்கள்.

     மதங்களிடையே வெறுப்பையும்,
     பிரிவினை உணர்வையும் யார் தூண்டினாலும்
     அவை வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியவை.
     அவற்றில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

     பிரிவினையைத் தூண்டும் செய்திகள் வந்தால்,
     அவற்றை தடுக்கவும், உருவாக்குபவர்கள், பரப்புபவர்கள்
     ஆகியோரை சிறையில் போடவும் சட்டத்தில் நிறைய
     இடம் இருக்கிறது.

     ஆதாரங்களோடு அவர்கள் மீது வழக்கு தொடுத்து
     உள்ளே தள்ள வேண்டியது தானே…?
     ஆட்சியில் இருப்பவர்களை
     இதைச் செய்வதிலிருந்து தடுப்பது யார் ?

     – தவறான செய்திகளையும், வதந்திகளையும்
     பரப்பத்தான் whatsapp அதிகமாக உதவுகிறது
     என்பது நூற்றுக்கு நூறு உண்மை.

     ஆனால் ஆளும் கட்சி, இதை தடை செய்யக்
     கோரவில்லையே; தடை செய்யும் முயற்சிகளிலும்
     ஆர்வம் காட்டவில்லையே ஏன் ?
     ஏனெனில் அது அவர்களுக்கும் பாதகமாகி விடும்.
     வதந்திகளை உருவாக்கும் அவர்களது இயந்திரமும்
     நின்று போய் விடும் என்பதால் தானே ?

     மதங்களை மறந்து –
     மனிதரை நேசிப்பது ஒன்றே தான்
     இந்த நாட்டை
     அமைதிக்கு இட்டுச்செல்லும் வழி.

     அதிகாரத்தில் இருப்பவர்களும்,
     அவர்களை அந்த இடத்தில் அமர்த்தியவர்களும்
     இதை புரிந்து
     கொள்ளும் நாளே –
     இந்த நாட்டின் விடிமோட்சத்திற்கான நாள்.
     இந்த விமரிசனம் தளத்தின் வாசக நண்பர்களும்
     இதைத்தான் நினைப்பார்கள் என்று நம்புகிறேன்.

     அந்த நாளும் வருமா ?

     .
     -காவிரிமைந்தன்

     • புதியவன் சொல்கிறார்:

      கா.மை. சார்… நான் கோத்ரா தீர்ப்பு சரி என்று நினைக்கிறேன். நீங்கள் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தீர்ப்பு சரி இல்லை என்று நினைக்கிறீர்கள். இது எல்லாம் அவரவர் பெர்செப்ஷனைப் பொறுத்ததோ? அல்லது அவரவர் ஆசையைப் பொறுத்ததோ?

      அதுபோலவே நம் இருவரின் ஆசையும் அரசியல் சட்டத்திற்கு எதிரானதாகத்தானே இருக்கிறது…. உங்களுக்கு ராஜீவ் கொலைவழக்குத் தீர்ப்பு, எனக்கு நீங்கள் சொல்லியது.

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      புதியவன்,

      எதற்கும் நான் மேலே எழுதியிருப்பவற்றை
      எல்லாம் இன்னொரு முறை படித்துக் கொள்ளவும்.
      எல்லாவற்றிற்கும் விளக்கம் தந்து விட்டீர்களா…
      என்றும் பார்த்துக் கொள்ளவும்…

      உங்கள் பதில் உங்களுக்கே சரியென்று
      தோன்றினால் சரி.
      மனிதருக்கு மனசாட்சியை விட பெரிய விஷயம்
      என்ன இருக்கிறது ?

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    இரண்டு வாரப் பயணத்திற்குப் பிறகு இப்போதுதான் இணையம் வந்தேன். சங்கடமோ இல்லையோ, பதிலளிப்பதில் எனக்குத் தயக்கம் இல்லை. அதுனால கா.மை. சார்.. எதையும் assume பண்ணிக்காதீங்க. வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணாமலா போஸ்டர் அடித்திருப்பார்கள்? ஓரிருவர் தவறுதலாக மாட்டிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் ரவுடிகள் பப்ளிக்காக எக்ஸ்போஸ் செய்யப்படவேணும் என்றே நான் விரும்புகிறேன் (தூத்துக்குடியில் கலவரம் செய்தவர்கள், போலீஸ் வாகனங்களின் மீது கல் எறிந்தவர்கள் உட்பட)

    நீதிமன்றங்கள்தாம் கடைசி என்ற நிலை உண்மைதான் என்றாலும் அதில் பல்வேறு மாற்றுக்கருத்துகள் உள்ளன. ஆ.ராசா கனிமொழி குற்றமற்றவர் என்பதை யாராவது நம்புவார்களா? கலைஞர் தொலைக்காட்சிக்காக 200 கோடி லஞ்சம் வாங்கியதை நிரூபிக்க முடியவில்லை என்பதால் அவர்கள் யோக்கியமானவர்களாக ஆகிவிடுவார்களா?

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     //நீதிமன்றங்கள்தாம் கடைசி என்ற நிலை
     உண்மைதான் என்றாலும் அதில் பல்வேறு
     மாற்றுக்கருத்துகள் உள்ளன.//

     – அந்தப்பட்டியலில் ‘கோத்ரா’ கலவரம் சம்பந்தப்பட்ட
     வழக்குகளின் முடிவுகளையும் நீங்கள்
     சேர்த்துக் கொண்டிருக்கலாம்… 🙂 🙂

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


     // ஆனால் ரவுடிகள் பப்ளிக்காக எக்ஸ்போஸ்
     செய்யப்படவேணும் என்றே நான் விரும்புகிறேன் //

     விரும்பலாம் தான் – ஆனால்
     துரதிருஷ்டவசமாக உங்கள் விருப்பம்
     அரசியல் சட்டத்திற்கு எதிரானதாக
     இருக்கிறதே … 🙂 🙂

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      // ஆனால் ரவுடிகள் பப்ளிக்காக எக்ஸ்போஸ்
      செய்யப்படவேணும் என்றே நான் விரும்புகிறேன் //

      நியாயம்…நானும் கூடத்தான் விரும்புகிறேன்.
      ஆனால் எப்படி…?

      உரிய முறையில்,
      சட்டபூர்வமாக,
      நீதிமன்ற நடவடிக்கைகளின் போது –

 2. Raja சொல்கிறார்:

  // சமீபத்தில் உ.பியில் பிரயாணம் செய்தபோது பலர்,
  முதலமைச்சர் மிகவும் சிம்பிளான மனிதர் என்றே
  சொன்னார்கள்.//

  கற்றாரை கற்றாரே காமுறுவர்; மொட்டைகளை
  ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு ரொம்பப்பிடிக்கும்.

  • புதியவன் சொல்கிறார்:

   இதுதான் சரியான பதிலா? இதற்கும் முஸ்லீம்கள் அனைவரும் டெரரிஸ்டுகள் என்று பலர் எழுதுவதற்கும் வித்தியாசம் உள்ளதா? இந்தச் சிந்தனைகள்தான் சமூகத்தைப் பிளக்கும் விஷக்கிருமிகள்.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    நீங்கள் எழுதியிருப்பது எனக்கான பதிலா அல்லது
    நண்பர் ராஜாவுக்கானதா…?

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

 3. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  வெள்ளிக்கிழமையன்று உச்ச நீதி மன்றம் அளித்த ஒரு தீர்ப்பு

  https://www.livelaw.in/top-stories/caa-protests-sc-stays-karnataka-hc-order-granting-bail-to-22-persons-arrested-for-alleged-violence-153568

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   மெய்ப்பொருள்,

   மிக்க நன்றி நண்பரே. சுப்ரீம் கோர்ட் இடைக்காலத்தடை
   தான் விதித்திருக்கிறது… அதுவும் இதுவரை
   பெயிலில் செல்லாமல் இருந்தால்…!!!

   கர்நாடகா உயர்நீதிமன்றத் தீர்ப்பு அழகாக வந்திருக்கிறது.

   இந்த செய்திகளுக்கெல்லாம் எந்த மீடியாவும்
   முக்கியத்துவம் கொடுக்கவில்லை பார்த்தீர்களா…?
   செஞ்சோற்றுக் கடனா ?
   அல்லது வேறு எதாவது நேர்த்திக் கடனா ..?

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.