…
…
…
துக்ளக் பத்திரிகையை ஆரம்பித்தது ஏன்.. எப்படி, ?
ஏற்கெனவே எழுதி இருக்கிறார்…
இங்கே நேரடியாக, பேட்டியிலும் சொல்கிறார்…
இன்னும் பல முக்கிய கேள்விகளுக்கும்
பதில் சொல்கிறார் ஆசிரியர் “சோ” அவர்கள்….
….
பகுதி-1
…
….
பகுதி-2
…
….
சாதாரணமாக சோ மாதிரி ஒரு சரவெடி கிடைத்தால்,
பேட்டியை அமர்க்களப்படுத்தி விடலாம்…
ஆனால் இது – சவ்வ்…
காரணம் -பேட்டி கண்டவரின் தூர்தர்ஷன் பின்னணி …!
நிகழ்ச்சி சுவாரஸ்யமானதாக இருந்தாலும் கூட,
அதை ப்ரசண்ட் பண்ணுவதில் தூர்தர்ஷன்-காரர்கள்
இருக்கிறார்களே…தாங்கள் நடத்தும் விதத்திலேயே
அதை நமுத்துப்போன பட்டாசாக்கி விடுவார்கள்.
பேட்டி என்றால், கேள்வி கேட்பவரிடம் ஒரு சுறுசுறுப்பு,
விறுவிறுப்பு இருக்க வேண்டாமா…? மளிகைக்கடைக்கு
போய் து.பருப்பு என்ன விலை, க.பருப்பு என்ன விலை,
புளி கிடைக்குமா என்று விசாரிப்பதைப்போல் கேட்டால் …?
அது பேட்டியாகவா இருக்கும்…?
சோ சாரிடமிருந்து நிறைய தகவல்கள் கிடைப்பதால் தான்
இதை இங்கே பதிவு செய்திருக்கிறேன் என்பதை
நண்பர்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்…….!
.
————————————————————————————————————————————————————
சோ, அவருடைய வாழ்க்கை நினைவுகளை குமுதம் இதழில் எழுதியபோது இதனைப் பதிவு செய்திருக்கிறார். சிறிய வயதில் சோ கொஞ்சம் அதீதமாக நடந்திருக்கிறார். அவருடைய நேர்மை, விமர்சனம் வேறு பழகும் தன்மை வேறு என்று நடந்து கொள்ளும் தன்மை ஆகியவற்றால்தான் அவருக்கு அரசியல் எதிரிகள் இல்லை.