கடவுளையும் விடாத வங்கிக் கொள்ளையர்கள்…
….

கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கி
இந்த கதிக்குப் போகும் என்று முன் கூட்டியே உணர்ந்து
விட்டதா திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில்
தேவஸ்தானம் …?

அது மட்டும், தாங்கள் டெபாசிட் செய்திருந்த
ரூ.1,300 கோடியை – அக்டோபர் மாதமே
திரும்பப் பெற்று விட்டது எப்படி….?

ஆனால், ஸ்ரீ பூரி ஜெகந்நாதர் கோயில் நிர்வாகம்
யெஸ் வங்கியில் ரூ.547 கோடி டெபாசிட் செய்து விட்டு
இப்போது பணத்தை திரும்ப எடுக்க முயன்று,
முடியாமல் சிக்கலில் இருப்பதாக செய்தி
வெளிவந்திருக்கிறது.

யெஸ் வங்கியில் பணத்தை எடுப்பது இப்போது
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விட்டதால்,
டெபாசிட் பணம் இப்போதைக்கு கிடைக்க வாய்ப்பில்லை
என்று தெரிகிறது….

ஒரு சின்ன சந்தேகம்…
இப்படி, இந்த கோவில்களின் கோடிக்கணக்கான ரூபாய்
பணத்தையெல்லாம் பொதுத்துறை வங்கியில் டெபாசிட்
செய்யாமல் யெஸ் பேங்க் போன்ற தனியார் வங்கிகளில்
டெபாசிட் செய்ததற்கான காரணம் என்ன…?

ஆளும்கட்சிகளால் அந்தந்த கோவில்களில் நியமிக்கப்பட்ட
தேவஸ்தான கமிட்டி மெம்பர்களும் யெஸ் வங்கியின்
முன்னாள் தலைவர் ராணா கபூரின் “உரிய” கவனிப்பிற்கு
உள்ளாக்கப்பட்டது தான் காரணமா…?

அந்த “ராணா” கவனித்துக் கொண்டது இன்னும் யார் யாரை…?
சொந்த மனைவிக்கே 600 கோடி ரூபாய் கொடுக்கக்கூடியவர்,
இன்னும் யார் யாருக்கெல்லாம் எத்தனையெத்தனை கோடி
கொடுத்திருப்பார்…?

திருப்பதி கோவிலின் பெயரில் இன்னும் சுமார்
11,000 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறதாம்..
அது எந்தெந்த வங்கிகளில் என்பது அந்த திருப்பதி
வெங்கடாசலபதிக்கே தெரியுமோ- தெரியாதோ…!!!

“சிவன் சொத்து குல நாசம்” என்பார்கள்;
ஒருவேளை, இவை வைணவக் கோவில்கள் என்பதால்,
அந்த வார்த்தை இங்கே பொருந்தாது என்று
நினைத்துக் கொண்டார்களோ…?

இந்தப் பாவிகள் – அந்தக்கடவுளால், புலனாய்வுப்பிரிவுகளின்
கடைக்கண் பார்வைக்கு உட்படுத்தப்படும் காலமும் வருமோ…?

——————————-

பின் குறிப்பு – உண்மையில் எழுத வேண்டியது,
இதே வங்கியைப்பற்றி, வேறு தலைப்பில்,
பல திடுக்கிடும் தகவல்களுடனும், புள்ளி விவரங்களுடனும் ….
– குற்றம் நடந்தது எப்படி, யார் யார் பொறுப்பு,
ரிசர்வ் வங்கிக்கோ, அரசுக்கோ – இதில்
எந்தெந்த வகையில் சம்பந்தம்..
கோடிக்கணக்கான பணத்தை அடித்துக் கொண்டு
போனவர்கள் யார் யார், அதில் பங்கு/கமிஷன்
பெற்றவர்கள் யார் யார் என்பதைப்பற்றி எல்லாம் தான்.

ஆனால், எழுதுவதற்கான சுதந்திரத்தை இன்று இழந்து
நிற்பதால், மிக சீரியசான ஒரு விஷயத்தை –
இப்படி காமெடியாக சொல்கிறேனே – என்கிற
வேதனையோடு இதை எழுதி இருக்கிறேன்.

இன்னமும், தனித்து நிற்கும் தைரியமும், மனசாட்சியும் உள்ள –
ஒரு சில தொலைக்காட்சி சேனல்கள் மட்டும், இயன்ற வரை
விவரங்களை தந்து கொண்டிருக்கின்றன. அவற்றைப்
பார்த்து நிலவரங்களை தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்.

.
—————————————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to கடவுளையும் விடாத வங்கிக் கொள்ளையர்கள்…

 1. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  அப்படியே அது எந்தெந்த தொலைக்காட்சிகள் என்பதையும் சொல்லிட்டீங்கன்ன, ஒரு நாலு நாள் அவற்றை முடக்கிவிடலாமே ஐயீ

 2. kalakarthik சொல்கிறார்:

  உண்மைதான் அண்ணா .எதையும் எழுத பயப் படும் நிலைதான்

 3. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  திருப்பதி கோவில் வெறுமனே பணம் மட்டும்
  டெபாசிட் செய்யவில்லை .
  பணம் மட்டுமே ரூ 12,000 கோடி .
  அப்புறம் தங்கம் குத்துமதிப்பாக ஒரு 10 டன் !
  பார்க்க https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/ttd-cash-deposits-in-banks-crosses-rs-12000-crore-mark/articleshow/69025887.cms?from=mdr

 4. புதியவன் சொல்கிறார்:

  //எழுதுவதற்கான சுதந்திரத்தை இன்று இழந்து
  நிற்பதால்// – வாட்சப் குழுக்களில் வரும் பல செய்திகள் பிரிவினையைத் தூண்டுவதாக உள்ளது வருத்தத்துக்குரியது.

 5. Gopi சொல்கிறார்:

  புதியவன் – அப்படியானால், பாஜக மதவெறியாளர்களின்
  மெசேஜுகள் எதைத் தூண்டுவதாக இருக்கின்றன ?
  கோலி மாரோ கோலி மாரோ எப்படி ?

  • புதியவன் சொல்கிறார்:

   You haven’t understood this Gopi. கா.மை சாருக்குப் புரிந்திருக்கும். முன்பு மதவழிபாடு முடிந்ததும் அரசியல் பேச்சு மசூதிகளில் இருக்கும் (அதிலும் வெள்ளிக்கிழமை. இது வெளிநாடுகளிலும் உண்டு). பிறகு அரசியல்வாதிகள். அவர்களின் வெறுப்புப் பேச்சுகள் வாட்சப் தளத்தில் சிலர் பரவிவிட ஆரம்பித்தனர். அதன் பிறகு வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுக்கள், செய்திகள், போலி ஸ்டாடிஸ்டிக்ஸ் (2050ல் இந்துக்கள் 40% ஆகிவிடும் என்பதுபோல), போலிச் செய்திகள் (சமீபத்தில் எனக்கு வந்தது. 27 இஸ்லாமியர்கள் ஆம் ஆத்மி கட்சியினால் தில்லியில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்று. உண்மை என்றே நான் நம்பினேன். பிறகு கம்யூனிச சிந்தை உள்ள என் உறவினனுக்கு அனுப்பி, அவன், முழு விவரத்தையும் கொடுத்த பிறகு, இது போலிச் செய்தி என்று தெரிந்தது. ).. இதெல்லாம் இந்தியாவிற்கு நல்லதல்ல என்பதே என் எண்ணம். ராஸி படம் அனைவரும் காணவேண்டும். எப்போதுமே குப்பைகள்தாம் கண்ணில் படும். இந்தியர்கள் அனைவரிலும் நல்லவர்கள் பெரும்பான்மை உள்ளனர். நாம் இந்தியர்களை மத ரீதியாக அணுகக்கூடாது. சக மனிதனாக அணுகணும். இதோட இந்த சப்ஜெக்டுக்கு முற்றுப்புள்ளி வச்சுக்கறேன்.

 6. Gopi சொல்கிறார்:

  ‘வாட்சப்பை’ தடை செய்ய வேண்டியது தானே ?
  பாஜகவை எது தடுக்கிறது ? தடை செய்து விட்டால்,
  தங்கள் சொந்த பிரச்சாரத்தை செய்ய முடியாதே
  என்பது தானே ?

 7. Rajs சொல்கிறார்:

  சிவன் சொத்து குல நாசம் – let us keep our faith. The deity in the abstract – meaning of sivam.

 8. Gopi சொல்கிறார்:

  // இந்தியர்கள் அனைவரிலும் நல்லவர்கள்
  பெரும்பான்மை உள்ளனர். நாம் இந்தியர்களை
  மத ரீதியாக அணுகக்கூடாது. சக மனிதனாக
  அணுகணும். //

  இந்த உணர்வு –

  // வாட்சப் குழுக்களில் வரும் பல செய்திகள்
  பிரிவினையைத் தூண்டுவதாக உள்ளது //

  என்பதை எழுதும் முன்னரே இருந்திருக்க வேண்டும்.
  இருந்திருந்தால் என் கேள்விக்கு அவசியமே
  இருந்திருக்காது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.