ரஜினியும்….முதல்வர் பதவியும்…!!!நேற்றைய ரஜினி மக்கள் மன்ற செயலாளர்களின்
கூட்டத்தில் ரஜினிகாந்த் அவர்கள் சில கருத்துகளை
முன்வைத்து, அவற்றின் மீது மன்றச் செயலாளர்களின்
கருத்துகளைக் கேட்டதாகத் தெரிகிறது.
( இது பற்றி விளக்கமாகக் கூறும் காணொளியை
இடுகையின் கடைசியில் கீழே தந்திருக்கிறேன் … )

அவை –

1) தேர்தலில் போட்டியிட 60 % இடங்களை,
48-50 வயதிற்கும் குறைவான, பொருத்தமான நபர்களை
தேர்ந்தெடுக்க வேண்டும்…

2) மீதி 40 % இடங்களை, மூத்த அனுபவஸ்தர்களுக்கும்,
அரசியல் கட்சியைத் தொடங்கியதும் – பிற கட்சிகளிலிருந்து
வந்து சேரக்கூடியவர்களுக்கும், கூட்டணி கட்சியினருக்கும்
ஒதுக்கலாம்.

3) துவங்கப்போகும் புதிய அரசியல் கட்சியில்,
உருவாக்கப்படும் பதவிகளுக்கான காலம் தேர்தல் வரை தான்
இருக்கும். தேர்தல் முடிந்தவுடன் இந்தப்பதவிகள்
காலாவதியாகி விடும்.

மீண்டும் அடுத்த தேர்தல் வரும்போது தான்
இத்தகைய பதவிகள் உருவாக்கப்படும்….
( அதாவது கட்சிக்குள் பதவிக்கான அடிதடிச் சண்டைகள்,
போட்டி, கோஷ்டிகளை உருவாக்கிக் கொள்வது போன்றவை
தவிர்க்கப்படும்…!)

4) ஒருவேளை ரஜினியின் கட்சி, தேர்தலில்மக்களிடம்
அங்கீகாரத்தைப் பெற்று, பெரும்பான்மை பலம் பெற்று
ஆட்சியை அமைக்கக்கூடிய நிலை வந்தால் –
ரஜினி அல்லாத வேறு யாராவது பொருத்தமான நபர்
ஒருவரை முதல்வர் பதவியில் அமர்த்த வேண்டும்.

5) ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஆலோசனை கூறி வழிநடத்தும்
பொறுப்பை கட்சி ஏற்கும்… கட்சிக்கு ரஜினி தலைமை ஏற்பார்.
ஆட்சிக்கு துணைபுரிய அனுபவம் வாய்ந்த நிபுணர்களின் குழு
ஒன்று உருவாக்கப்படும்.

பொதுமக்களுக்கு அளிக்கப்படும் வாக்குறுதிகள்
நிறைவேற்றப்படுவதை கட்சித்தலைமை உறுதி செய்யும்.
தேவைப்படும்போது, ஆட்சியின் தலைமைப்பொறுப்பில்
இருப்பவர்களை மாற்றும் அதிகாரம் கட்சித்தலைமையிடம்
இருக்கும்…

இது கிட்டத்தட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாக
கட்டமைப்பைப் போன்றது. கம்யூனிஸ்ட் கட்சிகள்
ஆளும் நாடுகளில், கட்சித் தலைமை தான் எல்லாவற்றையும்
தீர்மானிக்கும். நிர்வாகத்திற்கென, தனிப்பட்ட நபர்களை,
அவ்வப்போது கட்சி தான் தேர்ந்தெடுக்கும்.

இந்த ஆலோசனை / விவாதங்களின்போது, ரஜினி கூறிய
ஆலோசனைகளில், ஒன்றைத்தவிர, மற்ற அனைத்தையும்
மன்றச் செயலாளர்கள் ஒருமனதாக ஏற்றுக் கொண்டு
விட்டதாகத் தெரிகிறது.

அவர்கள் ஏற்க மறுத்தது – ரஜினியைத் தவிர வேறு யாராவது
முதல்வர் பதவிக்கு முன்மொழியப்படுவார் என்கிற
கருத்தைத்தான்.

இது குறித்து, எந்தவித முடிவும் எடுக்க இயலாத நிலையில்,
இந்தக் கருத்து, ரஜினி மக்கள் மன்றத்தின் உறுப்பினர்களிடையே
எடுத்துச் செல்லப்பட்டு, அவர்களின் கருத்தும் கேட்கப்படும்
என்கிற நிலையில் கூட்டம் முடிவடைந்து விட்டதாக தெரிகிறது.

ரஜினி இந்த முடிவை எடுத்ததற்கான முக்கிய காரணம் –

1) தான் முதல்வர் பதவியில் அமர வேண்டும் என்கிற
ஆசை காரணமாகவே கட்சி ஆரம்பிப்பதாக எதிர்க்கட்சியினர்
கூறும் குற்றச்சாட்டுகளை பொய்யாக்க –

2) ரஜினி தமிழர் அல்ல… தமிழ்நாட்டின் முதல்வராக
தமிழர் ஒருவரைத்தான் ஏற்க முடியும் என்று சீமான் போன்ற
சிலர் தீவிரமாக எதிர்ப்பு தெரிவிப்பது …

இந்த நிலையில் – கூட்டம் முடிவடைந்த பிறகு,
செய்தியாளர்களிடம் பேசும்போது,
தனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு ஏமாற்றம் இருப்பதாகச்
சொன்னது, வேறு ஒருவரை முதல்வர் பதவியில் அமர்த்த
வேண்டும் என்கிற தன் ஆலோசனையை மன்றத்தினர்
ஏற்காததைப் பற்றியதாகத்தான் இருக்க வேண்டும்.

———————————-

ரஜினிகாந்த ஒரு நல்ல மனிதர்.
ஆன்மிக சிந்தனை உடையவர்.
மிக மிக எளிமையானவர்.
எல்லாருக்கும் பிடித்தமானவர்.
தன் தனிப்பட்ட மற்றும் பொதுவாழ்க்கையில்
எந்தவித புகார்களுக்கும் இடம் கொடுக்காதவர்.
வெளிப்படையாகப் பேசக்கூடியவர்….

– இந்த காரணங்களுக்காகத் தான் மக்கள் அவரை
விரும்புகிறார்கள். இதே காரணங்களுக்காகத்தான் அவர்
அரசியலுக்கு வரவேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.

– ரஜினி கட்சியை ஆரம்பித்து, அது மக்களின்
பெரும்பான்மை ஆதரவை பெற வேண்டுமானால்,
தலைமைப் பொறுப்பில் – முதல்வர் பதவியில் –
ரஜினி இருப்பார் என்கிற நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட்டால்
தான் முடியும்….

– ஒருவிதத்தில் இந்த கருத்துகள் இப்போது பொதுவெளியில்
வந்தது நல்லதே… இந்த யோசனைகளைப்பற்றி எல்லாம்
விவாதம் நடப்பதும் நல்லதே.

…………

…………

.
————————————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to ரஜினியும்….முதல்வர் பதவியும்…!!!

 1. உயிர்தோழன் you tupe channel சொல்கிறார்:

  பாண்டே சார்
  ரஜினி சொன்னமூன்றாவது விசயம் சரியே
  ஆனால்
  அவர் முதல்வராக அல்லாமல் வேறு ஒருவரை நியமித்தால்
  இவர் சீமனுக்கு பயந்துதான் இப்படிசெய்கிறார்என சொல்லத்தோன்றுகிறது

 2. புதியவன் சொல்கிறார்:

  தமிழகத்தில் மக்கள் ஆதரவு, கட்சியின் தலைமையைப் பொறுத்ததுதான். ரஜினியின் சிந்தனை வரவேற்பதற்குரியது…… ஆனால் ….. டூ டூ லேட் இல்லையோ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.