…
…
…
…
1944 -ல் வெளியாகி, தொடர்ந்து 3 தீபாவளிகளுக்கு –
ஒரே தியேட்டரில் – சென்னை பிராட்வேயில் –
110 வாரங்கள் ஓடி, இந்தியத் திரைப்பட சரித்திரத்தில் –
ஒரு புதிய சாதனையை ஏற்படுத்திய படம்….. ஹரிதாஸ்.
அதில் M.K.தியாகராஜ பாகவதரும், T.R. ராஜகுமாரியும்
இணைந்து பாடும், “மன்மத லீலையை வென்றார் உண்டோ…? ”
காட்சி, லட்சக்கணக்கான தமிழர்களின் உள்ளங்களை
கொள்ளை கொண்டது.
1944-ல் கருப்பு-வெள்ளையில் உருவாகிய இந்தப்பாடல் காட்சி,
இப்போது கிடைக்கிற தொழில் நுட்ப வசதிகளைக்கொண்டு,
வண்ணத்தில் உருமாற்றப்பட்டால் எப்படி இருக்கும்….?
கலர் படம் என்கிற தளம் இதை நமக்கு உருவாக்கி,
காணத் தந்திருக்கிறது…. அந்த தளத்திற்கு நன்றி
சொல்லிக் கொண்டு “மன்மத லீலை” பாடல் காட்சி கீழே –
…..
….
.
——————————————————————————————————————————————————————