…
…
…
வியாழக்கிழமை காலை நடைபெற்ற ரஜினி மக்கள் மன்ற
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில்,
1) ரஜினி பேசியது என்ன…?
2) “ஒரு விஷயத்தில் எனக்கு திருப்தி இல்லை” என்று
ரஜினி செய்தியாளர்களிடம் கூறிய அந்த விஷயம் என்ன…?
– என்று வியாழன் இரவு விவாதங்கள் நடத்தாத
தமிழக செய்தி தொலைக்காட்சிகளே இல்லை.
கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என்பதை சரியாகத்
தெரிந்துகொள்ளாமலே அந்த விவாதங்களில்
ஆளாளுக்கு உளறியவை அபத்தத்திலும் அபத்தம்.
கடைசியாக, இரவில், செய்தியாளர் திரு.ரங்கராஜ் பாண்டே
அளித்திருக்கும் ஒரு செய்திப்பேட்டியில் –
திரு.ரஜினிகாந்த் 3 முக்கிய யோசனைகளை
தனது மன்றத்தினர் முன் வைத்திருக்கிறார் என்று
ஓரளவு விவரமாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
நானும் விசாரித்த வரையில் –
ரங்கராஜ் பாண்டே கிட்டத்தட்ட சரியான தகவல்களைத்
தந்திருக்கிறார் என்று சொல்லலாம்.
விமரிசனம் தள வாசகர்களுக்காக,
அந்த செய்திப் பேட்டி கீழே –
…..
….
.
————————————————————————————————————————————————————
சரியான தகவல்களைச் சேகரிக்கும் அளவிற்கு
பொறுமையோ, சாமர்த்தியமோ இல்லாத
சில உதவாக்கரைகள், டிவி டிபேட்டில்
எல்லாம் தெரிந்தவர்கள் போல் உளறினார்கள்.
யானையைப் பார்த்த குருடர்கள் சொல்வதைப்போல்
தான் இருந்தது அது.
மீடியாக்கள் ரஜினிக்கு
எதிராக செயல்படுகின்றன என்கிற குற்றச்சாட்டு
உண்மையே. ஆனால் அது ஏன் என்பது தான்
வெளிப்படையாகத் தெரியவில்லை.
Most of the media are owned by DMK or their alliance partners. They are always biased and are
strong critics of Rajini.. They think Rajini will be a stumbling block for their party coming back to power in 2021 . That is why they are opposing Rajini.