பொதுவாக – பெண்கள் ….. ???
பொதுவாக, முன்பெல்லாம்,
பெண்களைப்பற்றிய எனது அபிப்பிராயம் –

பெரும்பாலான பெண்கள் அப்பாவிகள்…வெகுளிகள்…
இரக்க சுபாவம் கொண்டவர்கள்…
பயந்த சுபாவம் கொண்டவர்கள்….
வலிமை குறைந்தவர்கள்….
எளிதில் ஏமாந்து போகக்கூடியவர்கள்…

– என்பதாக இருந்தது. ( பெரும்பாலானவர்கள் என்று
சொல்லி இருப்பதை கவனிக்கவும்…! எல்லாரும் என்று
சொல்லவில்லை..!! )

நான் ரிடையர் ஆவதற்கு சில மாதங்கள் முன்னதாக
முதல் தடவையாக எனக்கு ஹார்ட் அட்டாக் வந்தது…

நான் அதிக காலம் இருக்க மாட்டேன் என்று
அப்போது தோன்றியது…!!!

நான் சாவைப்பற்றி கவலைப்படவில்லை.
ஆனால், உலகம் தெரியாத ஒரு பெண்ணை ( என்
மனைவியைத்தான் சொல்கிறேன்.. !!!) தனியே
விட்டு விட்டுச் செல்கிறோமே. அவள் என்ன பாடு
படப்போகிறாளோ என்பது மட்டுமே என் கவலையாக
இருந்தது… ( என் கவலை பணத்தைப்பற்றியது அல்ல.
அதற்குத் தேவையான ஏற்பாடுகளை நான் ஏற்கெனவே
செய்து விட்டேன்… )

இதற்கு மேல் தொடர்வதற்கு முன்பாக
இந்தக் கதையை படித்து விடுங்கள் ….

————————————

ஒரு பெண் – ஏதோ ஒரு வகையில் ஒரு தேவதைக்கு
உதவி செய்து, அது சாப விமோசனம் பெற உதவி புரிகிறாள்.

சாபவிமோசனம் பெற்ற அந்த தேவதை “எனக்கு உதவியதற்காக,
உனக்கு 3 வரங்கள் தர விரும்புகிறேன். வேண்டியதைக் கேள்”
என்கிறது.

கூடவே -” ஒரே ஒரு நிபந்தனை… உனக்கு நான் கொடுக்கும்
வரத்தின் பலன், உனக்கு கிடைப்பதைப்போல் 10 மடங்கு
அதிகமாக உன் கணவருக்கும் கிடைக்கும்” என்றும் சொல்கிறது.

“அதனாலென்ன..பரவாயில்லை” என்கிறாள் அந்தப் பெண்.

பிறகு அந்தப்பெண், முதல் வரத்தின் மூலம் நான் இந்த
உலகத்திலேயே மிகவும் அழகிய பெண் ஆக வேண்டும் என்று
கேட்கிறாள்.

தேவதை அவளை எச்சரிக்கிறது… “உன்னை விட உன்
கணவன் மிக அழகானவனாகி விடுவான்”

“அதனாலென்ன…. அவருக்கு இணையான அழகு படைத்தவளாக
நான் மட்டும் தானே இருப்பேன்” என்கிறாள்.
“ததாஸ்து” (அப்படியே ஆகட்டும்) – என்கிறது தேவதை.

அடுத்து, 2-வது வரமாக “உலகிலேயே பெரிய பணக்காரியாக
நான் ஆக வேண்டும்” என்று அந்தப்பெண் கேட்கிறாள்.

“உன் கணவன் உன்னைவிட 10 மடங்கு பணக்காரனாகி
விடுவான்” என்கிறது தேவதை.

“அதனாலென்ன.. என் கணவன் தானே பணக்காரன்
ஆகப்போகிறான்- நல்லது தான்… ” என்று அந்தப்பெண்
ஏற்றுக்கொள்ளவே… அதற்கும்”ததாஸ்து” சொன்னது தேவதை.

இப்போது 3-வதும், கடைசியுமான வரம்…

தேவதை சொல்கிறது…” இது கடைசி வரம்…உனக்கு
வேண்டியதை நன்கு யோசித்துக் கேள்”.

அந்தப்பெண்ணும், நன்கு யோசித்து….
தன் கடைசி வரத்தை கேட்கிறாள் –

“எனக்கு – “லேசான” – மாரடைப்பு வர வேண்டும்…” 🙂 🙂 🙂

——————————————————-

முதல் அட்டாக் வந்து 20 ஆண்டுகள் ஆகியும் உயிரோடு
இருக்கும் நபர் வேறு யாரும் இருக்கிறாரா… தெரியவில்லை…!!!

அதிருஷ்டவசமாகவோ, துரதிருஷ்டவசமாகவோ –
நான் இன்னும் இருக்கிறேன்.

ரிடையர் ஆன பிறகு,
எந்த விஷயத்திற்கும் -டென்ஷன் ஆவதை
அநேகமாக தவிர்த்து விடுகிறேன்.
என்

குடும்பத்திலேயே – யார் விஷயத்திலும் தலையிடுவதில்லை…
யாருக்கும் – அவர்களாகவே வலிய வந்து கேட்டாலொழிய
எந்தவித ஆலோசனையும் சொல்ல முற்படுவதில்லை…
( No unsolicited advice to anyone )
முடிந்தவரை – பற்றுகளை விட்டு விட்டு வாழ முயற்சிக்கிறேன் …

அதற்காக ஏதோ வெறுப்புணர்வு என்று நினைத்து விடாதீர்கள்.
அதெல்லாம் ஏதுமில்லை…
உறவினர்கள், நண்பர்கள், அக்கம்-பக்கம் என்று
எல்லாரிடமும் ஆனந்தமாக சிரித்துப்பேசி பழகுவேன்.
நிறைய அரட்டையடிப்பேன்.
என்ன – குடும்ப பிரச்சினைகள் எதையும் தலையில்
ஏற்றிக்கொள்வதில்லை… இந்தக் காதால் கேட்டு விட்டு,
அந்தக் காதால் விட்டு விடுவேன்…
நான் களத்தில் இல்லை என்று நினைத்துக்கொண்டு அவர்கள்
எத்தகைய முடிவை வேண்டுமானாலும் எடுக்கலாம்…!

அருகிலேயே இருந்துகொண்டு, ஆனால் உணர்ச்சிகளால்
தூண்டப்படாமல் – வாழும் நிலையில் –
வீட்டில்,எந்த டெலிபோன் அழைப்பு வந்தாலும்,
நான் எடுப்பதில்லை; வேறு யாராவது எடுக்கட்டும்.
அழைப்பு எனக்கு என்றால் சொல்வார்கள் என்றிருக்கிறேன்…!!!

இந்த உலகத்தை, என்னைச்சுற்றி இருக்கும் மனிதர்களை,
நட்புகளை, உறவுகளை நன்கு கவனிக்க முடிகிறது…
ஒவ்வொரு கேரக்டரையும்
நன்கு படிக்க முடிகிறது; புரிந்துகொள்ள முடிகிறது.

இப்போது பெண்களைப்பற்றிய என் assessment என்னவாக
இருக்கும் என்று நினைக்கிறீர்கள்…?

———–

பொதுவாக பெண்களை 2 வகைகளில் பிரிக்கலாம்
என்று தோன்றுகிறது…

ஒன்று – புத்திசாலிப் பெண்கள்…
இரண்டு – அதிபயங்கர புத்திசாலிப் பெண்கள்… 🙂 🙂

அபூர்வமாக, அதிசயமாக –
எங்கேயாவது ஒன்றிரண்டு அப்பாவிகள்…!!! 🙂 🙂

..

.
பின் குறிப்பு – மகளிர் தினம் வரும் வரையில் காத்திருப்பானேன்…
அன்று எங்கே இருப்போமோ… யார் கண்டது…!!! 🙂 🙂
இப்போதே சொல்லி விடுவது நல்லதல்லவா…!!!

.
——————————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to பொதுவாக – பெண்கள் ….. ???

 1. கலாகார்த்திக் சொல்கிறார்:

  அண்ணா நூற்றாண்டு காலம் நீங்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.அன்பு தங்கை.கலா கார்த்திக்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   அன்புச் சகோதரி கலா கார்த்திக் அவர்களுக்கு,

   உங்கள் மடல் வேறு எங்கோ சிக்கி இருந்தது.
   இப்போது தான் பார்த்தேன்.
   உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.
   (எவ்வளவு ஆண்டு என்பது எனக்கு
   முக்கியமல்ல – ஆனால், ஆரோக்கியமாக
   என்பதை மிகவும் விரும்புகிறேன்…! )

   .
   – நல்வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  தமிழில் பெண்களுக்கு உரித்தான குணங்களில் ‘மடமை ‘
  என வருகிறது .உண்மையிலே புத்திசாலியான பெண்கள்
  தங்களுக்கு தெரியும் என காட்டிக் கொள்வதில்லை .
  She stoops to conquer என ஆங்கிலத்தில் வரும் .

  மற்றபடி பெண்களுக்கு விட்டு கொடுத்து போகும் தன்மை
  குறைந்து வருகின்ற மாதிரி தோன்றுகிறது .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.