…
…
…
…
ஜூன் 2, 1953 -அன்று பிரிட்டிஷ் அரசியாக பொறுப்பேற்ற
ராணி எலிசபெத்-II – இன்று வரை, கிட்டத்தட்ட 67 ஆண்டுகளாக
அதே பொறுப்பில் நீடிக்கிறார்.
ஒரு வித்தியாசமான வீடியோ எனக்கு கிடைத்தது.
குயின் எலிசபெத் தொடர்ச்சியாக பதவி வகித்த காலத்தில்,
அமெரிக்க ஜனாதிபதிகள் 13 பேர் மாறி விட்டார்கள்.
அவர்கள் அனைவருடனும் பிரிட்டிஷ் அரசி,
வெவ்வெறு வயதில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்-
வரிசையாக வரும் ஒரு சுவாரஸ்யமான வீடியோ ….
(இறுதியில் வரும் விளம்பரம் சிரிப்பை வரவழைக்கும்…! )
நண்பர்களின் பார்வைக்காக அதை கீழே பதித்திருக்கிறேன்.
…
…
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதமர்கள்
அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கின்ற நிலையில்,
எப்போதும் அரசி தான் பிரிட்டனின் முகமாகப் பார்க்கப்
படுகிறார்.
நம் நாட்டில் ஜனாதிபதிகள் மறைமுகமாக
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்…
அவருக்கென்று எந்த விசேஷத் தகுதிகளும் தேவையில்லை..
அவ்வப்போது ஆட்சியில் இருக்கின்ற கட்சிகளின்
கடாட்சத்தை அவர் பெற்றிருக்க வேண்டும்… அவ்வளவே..!!!
பொது மக்களுக்கும் – அவருக்கும் எந்தவித
சம்பமும் இருப்பதில்லை.
பிரிட்டனின் அரசமைப்பில் முக்கியமாக நாம்
கவனிக்கக்கூடிய சில விஷயங்கள் இருக்கின்றன.
நாட்டின் முகமாக இருப்பவர் எப்போதும் அந்த நாட்டின்
அனைத்து மக்களாலும் நேசிக்கப்படுபவராக, மதிக்கப்படுபவராக
இருக்கிறார்.
பிரிட்டிஷ் அரசியல்வாதிகளும் சரி, பொதுமக்களும் சரி…
எப்போது வேண்டுமானாலும், அரசைக் கலைத்து விட்டு,
குறைந்த பட்ச கால அவகாசத்திற்குள் (ஒரு மாதத்திற்குள்..? ) –
பொதுத்தேர்தலை நடத்தி புதிய அரசை அமைக்க தயாரான
மன நிலையில் இருக்கிறார்கள்.
முக்கியமான விஷயங்கள் என்று வரும்போது,
நாட்டு மக்கள் அனைவரின் கருத்தும் referendum மூலம்
பெறப்பட்டு, அதற்குத் தகுந்தபடி முடிவெடுக்கப்படுகிறது.
நமது முறையிலும் எதாவது மாற்றங்கள் வந்தால்
தேவலையோ…???
.
———————————————————————————————————————————————————
முன்னர் இருந்த விக்டோரியா மகாராணி 64 ஆண்டுகள் பதவியில் இருந்தார். எலிசபெத் மகாராணியின் குடும்பத்தில், டயானாவுக்கு இருந்த பாகிஸ்தானிய ஹஸ்னத் கான் நட்பினால், கரும் புள்ளி ஏற்பட்டது போல்,விக்டோரியா மகாராணிக்கும் இந்தியாவை சேர்ந்த அப்துல் கரீமினால் கரும் புள்ளி இருந்தது.