…
…
…
சாதாரணமாக, இரவில் படுக்கப் போகும் முன்னர்
இரவு 12.30 மணிக்கு மேல் ஒரு மணிநேரம்,
பழைய ஹிந்தி, தமிழ் பாடல்களை தொலைக்காட்சியில்
தேடி, பார்ப்பது என்னுடைய தினசரி வழக்கங்களில் ஒன்று.
நள்ளிரவு நேரங்களில் பழைய ஹிந்தி
திரைப்படப்பாடல்களை ஒளிபரப்புவதற்கென்றே
சில சேனல்கள் இருக்கின்றன.
—————-
( பகுதி- 6 ) .. நினைக்கத் தெரிந்த மனமே… – பார்க்க….
—————-
பகல் நேரங்களில் செய்தி தவிர வேறு எதற்காகவும்
டிவி பக்கமே போக மாட்டேன். ஒரு நாள் இரவில்
அப்படி தேடிக்கொண்டிருந்தபோது, நடுவில் கிடைத்த
ஒரு சேனலை எதேச்சையாகப் பார்க்க நேரிட்டது.
பார்த்தால், விஜய்காந்த் அமர்க்களமாக ஹிந்தியில்
விட்டு விளாசிக்கொண்டிருந்தார்.. கேப்டன் பிரபாகரன்
ஹிந்தி டயலாக் பேசுவது மிகவும் தமாஷாக இருந்தது.
பிறகு இன்னொரு நாள்,
வேறோரு சேனலில் சூர்யா, பிறகு அஜீத், விஜய், அர்ஜுன்
என்று பல ஹிந்தி சேனல்களில், தமிழ் நடிகர்கள் எல்லாம்
ஹிந்தியில் பிய்த்து உதறிக்கொண்டிருந்தார்கள்…
ஹிந்தியில் ஒரு நாளைக்கு 6-7 சினிமாக்கள் கூட திரையிடும்
சேனல்கள் நிறைய இருக்கின்றன…. அவற்றிற்கு தீனி போட
சேனல்காரர்களுக்கு புதிது புதிதாக படங்கள்
வேண்டியிருக்கின்றன.
எனவே,
இப்போதெல்லாம் ஹிந்தி சேட்டிலைட் சேனல்கள்
ஆக்ஷன் தமிழ்ப்படங்களை தங்கள் டிவியில் வெளியிட
ரைட்ஸ் வாங்கி கம்ப்யூட்டர் உதவியுடன் வெகு சுலபமாக
ஹிந்தியில் ‘டப்’ செய்து அவர்கள் சேனலில் போட்டு
விடுகிறார்கள். ஒரே படத்தை இடைவெளி விட்டு,
திரும்பத் திரும்ப 5-6 தடவை கூட போடுவார்கள்.
சுமார் ஐந்து லட்சம் ரூபாய் செலவில்,
டப்பிங் எளிதாக முடிந்து விடுகிறது. சில சரித்திர
மற்றும் பேய்ப்படங்களுக்கும் டிமாண்ட் இருக்கிறது.
குடும்பப்படங்களை சீண்டவே மாட்டார்கள்….
அதற்குத்தான் ஏகப்பட்ட சீரியல்கள் வெளிவருகின்றனவே…!!!
எனவே தமிழ்ப்படங்களுக்கு ஹிந்தி டப்பிங்குக்கு என்று ஒரு
தனி மார்க்கெட் உருவாகி நல்ல விலையும் கிடைக்கிறது.
ஒவ்வொரு சேனலுக்கும் தனித்தனியே விற்கிறார்கள்.
இப்போதெல்லாம் நீங்கள் சர்வசகஜமாக ஹிந்தி சேனல்களில்
தமிழ்க் கதாநாயகர்கள் ஹிந்தியில் பேசி நடிப்பதை பார்க்கலாம்.
தொடரும்….
——————————————————
1965-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
“ஹல்லோ மிஸ்டர் ஜமீன்தார் ”
ஜெமினி, சாவித்திரி நடித்தது.
கே.ஜே.மஹாதேவன் தயாரித்து இயக்கியது.
ஏதோ சட்டப்பிரச்சினை காரணமாக, இந்தப்படம்
நீண்ட நாட்கள் வரை தமிழ் நாட்டில் திரையிடப்படவே இலை.
சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் திரையிடப்பட்டு
பாடல்களுக்காகவும், காமெடி-க்காகவும் நன்றாகவே ஓடியது.
இந்தப் படத்திற்கு இசை -விஸ்வநாதன், ராமமூர்த்தி…
இந்தப்படத்திலிருந்து எனக்குப் பிடித்த
இரண்டு இனிமையான பாடல்களை கீழே தருகிறேன்.
கவிஞர் கண்ணதாசனின் அற்புதமான வரிகள்…
———–
இளமைக் கொலுவிருக்கும்….
இனிமைச் சுவையிருக்கும்…
இயற்கை மணமிருக்கும் பருவத்திலே…
பெண் இல்லாமல் சுகமில்லை உலகத்திலே…
அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ…
அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ…
பெண் இயற்கையின் சீதனப் பரிசல்லவோ…
பெண் இல்லாமல் சுகமில்லை உலகத்திலே…
…
…
காதல் நிலவே…கண்மணி ராதா –
நிம்மதியாகத் தூங்கு….
கனவினில் நானே மறுபடியும் வருவேன்…
கவலையில்லாமல் தூங்கு….
….
…
.
————————————————————————————————————————————————
நான் மிகவும் எதிர்பார்த்த – சொந்தமும் இல்லே ஒரு பந்தமும் இல்லே – பாட்டை காணோமே அய்யா
அதற்கென்ன எழில் …
சேர்த்து விட்டால் போச்சு … 🙂 🙂
( நான் பார்த்த கோணம் வேறு…
நீங்கள் வேறு கோணத்தில் பார்க்கிறீர்கள் …!!!)
…
…
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
மிக்க நன்றி அய்யா