டெல்லியின் “அந்த” மனிதர்களுக்கு இது சமர்ப்பணம் ..மனிதத்தை மறந்து,
“மதம்” கொண்டு –
வெறி பிடித்து ஆடி 38 உயிர்களை பலிவாங்கிய டெல்லியின்
“அந்த” மனிதர்களுக்கு –
இந்த இடுகையை சமர்ப்பிக்கிறேன்.

—————————-
இந்த புகைப்படங்கள் ஸ்பெயின், கார்டோபாவிலுள்ள
மசூதி – கதீட்ரல் என்று அழைக்கப்படும் ஒரு வித்தியாசமான
இடத்தினுடையவை…..

எப்படி வித்தியாசம்…?

துவக்க காலத்தில், எட்டாம் நூற்றாண்டு வரை, இது ஒரு சிறிய
கிறிஸ்தவ தேவாலயமாக இருந்தது. ( Catholic Basilica of
Saint Vincent of Lérins )

கி.பி.784-ஆம் ஆண்டில், இஸ்லாமிய (அப்துல் ரெஹ்மான்-I) கால
கட்டத்தில் இது ஒரு மிக பிரம்மாண்டமான மசூதியாக விரிவாக்கம்
செய்யப்பட்டது.

இந்த மசூதி, 16-வது நூற்றாண்டில், கிருஸ்தவர்களின் ஆட்சி காலத்தில்
மீண்டும் ஒரு ரோமன் கிறிஸ்தவ தேவாலயமாக மாற்றப்பட்டது.

இந்த மசூதி – கதீட்ரலின் விசேஷம் என்ன….?

இப்போதும் தொழுகை நேரத்தில் தன்னந்தனியாக ஒரு இஸ்லாமியர்
வந்து இந்த தளத்தில் பாங்கும் தொழுகையும் நடத்துகிறார்.

அவரை தொழுகையில் ஈடுபட அனுமதித்து –
அந்த நேரத்தில், கிறிஸ்தவர்கள் அமைதியாக அமர்ந்திருக்கிறார்கள்.

அவர் வந்து சென்றபிறகு மீண்டும் தங்கள் பிரார்த்தனையை
தொடர்கிறார்கள்…

உலகில் கற்றுக்கொள்ள எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன.

மத நல்லிணக்கம் அதில் மிக முக்கியமானது – அமைதியான,
நிம்மதியான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மிக மிக அவசியமானது…..!!!

இதுவரை இதை உணராதவர்கள்,
இப்போதாவது உணர்ந்து திருந்த வேண்டும்…
எல்லாருக்கும் பொதுவான “அந்த” இறைவன் அதற்கு உதவுவானாக…

….

….

.
——————————————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to டெல்லியின் “அந்த” மனிதர்களுக்கு இது சமர்ப்பணம் ..

 1. Ramnath சொல்கிறார்:

  அற்புதம்.

 2. கொச்சின் தேவதாஸ் சொல்கிறார்:

  மத நல்லிணக்க உணர்வு இந்தியா முழுவதும் இந்தியர்கள் அனைவருக்கும் இருக்கலேண்டும்.
  வாழ்க வளமுடன்

 3. Prabhu Ram சொல்கிறார்:

  பொருத்தமான, மிகவும் அவசியமான
  ஒரு கட்டுரை சார்.

 4. என் வழி சொல்கிறார்:

  intelligence failure என்று வர்ணிக்கப்படுகிறது.

  failure என்று எதைச் சொல்ல முடியும் ?

  அடுத்து என்ன நிகழும் என்று யூகித்து,
  அதற்கான உரிய எதிர் வினையாற்றவில்லையென்றால்

  அல்லது

  செயல்பட வேண்டிய ஒரு விஷயத்தை
  முன் கூட்டியே யூகித்துச் செயல்படத் தவறினால்

  அல்லது

  எடுத்துக்கொண்ட ஒரு காரியத்தில்
  தோல்வியுற்றால் அதை failure என்று சொல்லலாம்.

  ஆனால் –

  யாருக்கும் இது வேண்டுமென்று செய்யப்பட்டது
  என்று நினைக்கத் தோன்றாமல் –

  செயல் இப்படி இருக்க வேண்டும்,
  அதன் விளைவுகள் இப்படி இப்படி இருக்க வேண்டும்
  ஆனால்,
  வெளிப்பார்வைக்கு இது failure என்று தோன்ற வேண்டும்;

  என்று திட்டமிட்டு
  அது அதை அப்படியே நிகழ்த்திக் கொண்டால்
  அதை intelligence failure என்று சொல்வதா

  அல்லது

  Highly Intelligent Act என்று சொல்ல வேண்டுமா ?

 5. புவியரசு சொல்கிறார்:

  ‘என் வழி” சொல்வது தான் சரி.
  கிரிமினல் கன்ஸ்பைரசி-க்காக உள்ளே
  தள்ளப்பட வேண்டியவர்களை,
  ஜஸ்ட் ஃபெயிலியர் என்கிற கோணத்தில் பார்ப்பது,
  கொலைக்குற்றம் புரிந்தவர்களை ட்ராஃபிக் வயலேஷன்
  செய்தவர்களைப் போல் ட்ரீட் செய்வதாகவே இருக்கும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   என் வழி, புவியரசு –

   உங்கள் கருத்து தான் என் கருத்தும்.
   டெல்லி கலவரங்களின் பின்னால்,
   கடுமையான உள்நோக்கங்கள்
   இருந்திருக்கின்றன.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    காலம் அதையெல்லாம் வெளிப்படுத்தும்.

    தவறு செய்பவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.
    நம்புவோம். காத்திருப்போம்.

    .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.