“நினைவில் இருக்கிறதா.. “மஹா…..பாரத்”…!!!


தனியார் தொலைக்காட்சிகள் எதுவும் இல்லாத காலமது…

அக்டோபர் 1988 முதல் ஜூலை 1990 வரை 94 வாரங்கள்,
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், காலை விடியும்
பொழுதிலிருந்தே – இந்தியா முழுவதும், அனைத்து
வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு, ஆவலுடன்
ஒரு நிகழ்ச்சிக்காக காத்திருந்த காலம் அது.
ஹிந்தி தெரியாதவர்கள் கூட மிகுந்த ஈடுபாட்டுடன்
பார்த்த ஒரு நிகழ்ச்சி.

தூர்தர்ஷன் இதுவரை ஒளிபரப்பிய நிகழ்ச்சிகளிலேயே
அதிக பட்சம் ஆடியன்சைப் பெற்ற “மஹாபாரத்”….!!!

வியாசர் எழுதிய அந்த காப்பியத்திற்கு
தொலைக்காட்சிக்காக வடிவமைத்து, வசனம் எழுதியவர்
ஒரு இஸ்லாமியர் – ரஹி மாசூம் ராஜா (Rahi Masoom Raza)
உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்து உருது கவிஞர்…!!!
இசையமைப்பாளர் – ராஜ்கமல்.
தயாரிப்பாளர் B.R.சோப்ரா…

பிரபல ஹிந்தி திரைப்படப் பாடகர் மஹேந்திர கபூர்
பாடிய டைட்டில் பாடலுடன் (title song) ஒவ்வொரு வாரமும்
அற்புதமாக, கம்பீரமாகத் துவங்கும் அந்த எபிசோட்.

அந்தப் பாடலை உணர்வுபூர்வமாக, ரசனையுடன்
இப்போது ஒரு பொதுமேடையில், நினைவுபடுத்திப் பாடும்
ஒரு காணொளி கிடைத்தது – கீழே –

….

….

.
——————————————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.