எதிர்ப்பவர்கள் எல்லாம் தேச விரோதிகளா….? ஊதப்படும் சங்கு ….!!!


—————————————–

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில்
“ஜனநாயகமும், எதிர்ப்பும்” என்ற பெயரில் கருத்தரங்கம்
நடந்தது. இதில் உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா
பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

அரசின் கருத்துகளுக்கு மாறுபட்ட அபிப்ராயம்
தெரிவிப்பவர்களை சமீபகாலமாக

” தேச விரோதிகள் ”

என அழைக்கும் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
தேர்தலில் 51 சதவீதம் வாக்குகள் பெற்று ஒரு கட்சி
வெற்றி பெற்றுவிட்டால், 49 சதவீதம் பெற்ற மற்ற
கட்சிகள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அக்கட்சியை
பற்றி பேசக்கூடாது என்பது அர்த்தம் அல்ல.

ஜனநாயகத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை
இருக்கிறது, பங்கெடுக்கலாம்.

எப்போதெல்லாம் சித்தாந்தங்களுக்கு இடையே
மோதல் ஏற்படுகிறதோ அப்போது எதிர்ப்பு உருவாகும்.
யாரோ ஒரு முரண்பாடான கருத்தை எடுத்துக்
கொண்டால் அவர் நாட்டை அவமதிக்கிறார் என்று
அர்த்தமல்ல. கேள்வி கேட்கும் உரிமை ஜனநாயகத்தின்
உள்ளார்ந்த பகுதியாகும்.

அமைதியான முறையில் எத்தனை காலம்
வேண்டுமானாலும் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்த
உரிமை உண்டு.

அரசாங்கங்கள் எப்போதும்
சரியானவை அல்ல.

அரசை எதிர்ப்பது என்பது தேசவிரோதம் என்று
அப்பட்டமாக முத்திரை குத்துவது ஜனநாயக
இயக்கத்தை வேண்டுமென்றே நிறுத்துகிறது.

நீதித்துறை எப்போதும் அச்சமற்று, சுதந்திரமாகச்
செயல்பட வேண்டும். எதிர்க்கவும், மாற்றுக்கருத்து
கூறவும் உரிமை இருக்கிறது, விமர்சிக்கக்கூட
உரிமை இருக்கிறது. நீதித்துறை கூட விமர்சனத்துக்கு
அப்பாற்பட்டது அல்ல.

—————–

பின் குறிப்பு – இப்படி மன்றங்களில் பேசுவதால்
மட்டும் பெரிதாக விளைவுகள் எதுவும் ஏற்பட்டு விடும்
என்று தோன்றவில்லை. சம்பந்தப்பட்டவர்களுக்கு
இதெல்லாம் தெரியாமலா செய்கிறார்கள்…?

மாறாக – இத்தகைய கருத்துகள், நீதிமன்ற தீர்ப்புகளில்
உத்திரவுகளாக வெளியானால் –
அது இந்த சமுதாயத்திற்கு பேருதவியாக இருக்கும்.

.
————————————————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to எதிர்ப்பவர்கள் எல்லாம் தேச விரோதிகளா….? ஊதப்படும் சங்கு ….!!!

 1. Jksmraja சொல்கிறார்:

  இது எல்லாம் ஆளும் வர்க்கத்தால் திடடமிட்டு பேசவைக்கப்படும் பேச்சு . எல்லா துறைகளையும் அடிமைகளாக மாற்றப்பட்டு விட்டது. சமீப கால தீர்ப்புகளை எல்லாம் பாருங்கள். இவர்கள் வெளியே பேசுவதற்கு நேர் எதிராக தீர்ப்புக்கள் இருக்கும்.

 2. Gopi சொல்கிறார்:

  காவிரிமைந்தன் சார் அதைத்தான் இப்படி
  மறைமுகமாகச் சொல்கிறாரோ ?

  கடைசி வரி-
  //மாறாக – இத்தகைய கருத்துகள், நீதிமன்ற தீர்ப்புகளில்
  உத்திரவுகளாக வெளியானால் –
  அது இந்த சமுதாயத்திற்கு பேருதவியாக இருக்கும்.//

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.