ஜக்கி என்னும் பரமார்த்த குரு ….!!!


இந்த செய்தியை தமிழில் மொழிபெயர்த்துத்தர
எனக்கு விருப்பமில்லை. எனவே indiatoday
செய்தித் தளத்தில் வந்ததை அப்படியே
ஆங்கிலத்தில் தருகிறேன்….!!!

….

இந்தக் கருத்தை சொல்லக்கூடிய ஞானம்
அவருக்கு எப்படி வந்தது … ?
கேள்விப்பட்டதா….? எனக்குத் தெரிந்து
மகப்பேறு மருத்துவ நிபுணர்கள், விஞ்ஞானிகள் யாரும்
இத்தகைய கருத்தைச் சொன்னதில்லை…

எங்கேயாவது படித்ததை வைத்தா …?
அப்படி எங்கேயும் படிக்கக்கிடைப்பதாகவும் தெரியவில்லை…

இந்த மாதிரி விஷயங்களில் –
அனுபவ ஞானமும் இருக்க வாய்ப்பில்லை.

பின் எப்படி…? நிச்சயம் அறிவுக்கொழுந்து தான்
பிறவி ஜீனியஸ் …!!!!

சொல்வதையெல்லாம் அப்படியே நம்பக்கூடிய,
மாங்கா மடையர்கள் சீடர்களாக இருந்தால் –

யார் வேண்டுமானாலும் இந்த மாதிரி
அதி அற்புதக் கருத்துகளைச் சொல்லலாம்.

ஸ்ரீலஸ்ரீ சுவாமி நித்யானந்தா இல்லையா என்ன …?

.
————————————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to ஜக்கி என்னும் பரமார்த்த குரு ….!!!

 1. kalakarthik சொல்கிறார்:

  அண்ணா ,இவர்கள் எல்லாம் ஒரு மனிதர்கள் என்று இவர் கருத்துக்களை பற்றி பேசுவதே அபத்தம்.ஆனாலும் லட்ச கணக்கான மக்கள் இவரை ஏற்று கொள்வதற்கான காரணம் வெளியில் சொல்ல முடியாது.யார் வேண்டுமானாலும் சத்குரு ஆகலாம் .என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற கேவலமான நிலையில் நம் நாடு இருக்கிறது.வேதனை

 2. mekaviraj சொல்கிறார்:

  Watch this video and the comments to understand this crook better:

  Every single time he divert the interviewer attention to somewhere else and don’t give any direct answer.

  Add short (BS) stories to makeup his point.
  Anyone who interviews will get confused and drift away from the actual question asked by themselves

 3. rramanisankar சொல்கிறார்:

  Nadira Suleman (USA) gave birth to 6 boys and 2 girls (octuplets) in 26 January 2009. For the infants 8 types milks , the mother supposed to produce according to our Jaggi.

 4. sakthi சொல்கிறார்:

  ஆட்சியில் இருப்பவர்கள் காலில் விழுந்தால் அவர் எதை வேண்டுமானாலும் சொல்வார்.
  ஆனாலும் அவர் சொன்னதில் ஓரளவு உண்மை இருக்கிறது.. அவருடைய பேச்சில் இரட்டைக் குழந்தை பிறந்து ஒன்று ஆண் குழந்தையாகவும் மற்றது பெண் குழந்தையாகவும் இருந்தால் ,இருபக்கம் சுரக்கும் பாலில் வேறுபாடு இருக்கும் என்பதாகும்.(Video Youtube)

  இதுபற்றிய ஆய்வுகளை Michigan State University /Harvard University 2012 இல் மேற்கொண்டது. அவர்களின் ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டதை கொஞ்சம் அதிகப்படுத்தி சொல்லி இருக்கிறார். அவர்கள் சொன்னது ஆண் குழந்தைக்கு ஒருவிதமாகவும் பெண்குழந்தைக்கு இன்னொரு விதமாகவும் பால் சுரக்கும் என்பதாகும். ஆய்வுகள் இன்னமும் முழுமையடையவில்லை.
  (Daughters produce more calcium in their milk/ Sons produce milk with higher fat and protein, but lower sugar concentrations ) ஆணும் பெண்ணுமாக இரட்டைக் குழந்தை பிறந்தால்……ஆய்வுகள் இன்னமும் முடியவில்லை.

  இதை அவர் மாற்றி மிகைப்படுத்தி சொல்லி இருக்கிறார்.

 5. புவியரசு சொல்கிறார்:

  // இரட்டைக் குழந்தை பிறந்து ஒன்று ஆண் குழந்தையாகவும் மற்றது பெண் குழந்தையாகவும் இருந்தால் ,இருபக்கம் சுரக்கும் பாலில் வேறுபாடு இருக்கும் என்பதாகும்.(Video Youtube) //

  இந்த வாதமே முட்டாள்தனமானது. உங்கள்
  ஸ்டேட்மென்டுக்கு உங்களால் ஆதாரம் காட்ட முடியுமா ?
  எந்தக் குழந்தைக்கு எந்த மார்பு என்று
  யார் கண்டுபிடிப்பது?
  தாயா ? குழந்தையா ?
  எப்படி தீர்மானிப்பது ? முடியுமா ?

 6. புவியரசு சொல்கிறார்:

  2012-ல் ஆய்வறிக்கை தந்தார்கள் என்கிறீர்கள்.
  //ஆய்வுகள் இன்னமும் முடியவில்லை.//
  என்றும் சொல்கிறீர்கள்.
  8 வருடங்களாக முடிக்க முடியாத ஒரு ஆய்வை
  நீங்கள் எப்படி ஆதாரமாக சொல்ல முடியும் ?
  rramanisankar எழுப்பி இருக்கும் கேள்விக்கு
  உங்கள் விளக்கம் என்ன ?

 7. sakthi சொல்கிறார்:

  YouTube காணொலி ஜக்கி வெளியிட்டது.அதில் அவர் சொன்னதை சொல்லி இருந்தேன்.ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டதையே ஜக்கியும் சொன்னார்.அவர் twins என மிகைப்படுத்தி சொல்லியிருக்கிறார். அதையே சொல்லி இருந்தேன்.

  Katie Hinde, PhD, evolutionary biologist at Harvard University ஆய்வறிக்கையை படித்திருந்தேன்.அவர்கள் சொல்லி இருந்ததையும் தந்திருந்தேன்.ஆண் குழந்தை/பெண் குழந்தை பற்றியே ஆய்வில் சொல்லப்பட்டுள்ளது.ஆய்வு என்பது மிக நீண்ட பயணம்.

  ஆத்திரப்பட வேண்டாம் புவியரசு.எனக்கும் அந்த ஆய்வுக்கும் எந்த தொடர்பும் கிடையாது.நான் டாக்டரும் அல்ல.படித்ததை தந்திருந்தேன்.அவ்வளவுதான்.

  விளக்கமும் ஆதாரமும் என்னிடம் கேட்டால் எப்படி? கேட்க வேண்டியது Katie Hinde, விடம் தான்.படித்ததை சொல்வது தவறா?

  • mekaviraj சொல்கிறார்:

   sakthi, உங்களமாதிரி என்னமாதிரி jagadish அவர்கள் சாதாரண மனிதர்தான் …என்ன ஒன்னு வாயால நல்ல வடை சுட தெரிந்தவர். வெளிநாடுகளில் வரும் இம்மாதிரியான செய்திகளை தனக்கு ஏற்றார்போல் மாற்றி சொல்வதில் வல்லவர் (என்னமோ இவர்தான் அதை கண்டுபிடித்தது போல பேசுவார்)

   நீங்க சொல்லும்போதுகூட அதை எதில் படித்தீர்கள் என்று சொன்னீர்கள் அல்லவா? அதை அவர் ஒரு போதும் செய்வதில்லை. அவ்ளோ தான் விசயம்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.