…
…
…
…
முதலில் துபாயிலிருந்து ஒரு நெருங்கிய நண்பர்
ஒரு வீடியோவை அனுப்பி இருந்தார். அதை
நான் இங்கே பதிவு செய்தால், எப்படி எதிர்கொள்வார்கள்
என்பது தெரியாததால் – செய்யவில்லை.
மக்களுக்கு பிடித்ததைத் தானே நாம் செய்ய வேண்டும்….!
இப்போது அமர்க்களமான இன்னொரு வீடியோ
ரிலீஸ் ஆகி இருக்கிறது.
Solmemes1 – என்கிற ட்ரம்பின் ரசிகர் ஒருவரே
ட்ரம்ப் அவர்களின் பராக்கிரமத்தை பாகுபலியுடன் ஒப்பிட்டு –
தயார் செய்து வெளியிட்டிருக்கிறார்….!!!
அதை அமெரிக்க அதிபரே தன்னுடைய ட்வீட்டில்
பெருமையுடன் forward செய்திருக்கிறார்….
இந்தச் செய்தியை பிபிசி செய்தித்தளமும் உறுதி
செய்திருக்கிறது…
( டிரம்ப்பை பாகுபலியாக சித்தரிக்கும்
மீம் காணொளி: அவரே டிவிட்டரில் பகிர்ந்தார் –
https://www.bbc.com/tamil/global-51602120 )
.
——————————————————
எனவே, நாமும் அதை இங்கே மறுபதிவு செய்து,
ஜென்ம சாபல்யம் அடைகிறோம்….
இதைக் காண்பவர் அனைவரும் பிறவிப்பயனை
எய்தவர் ஆவர் என்பதை உணர்ந்து மகிழ்க …!!!
இந்த மாமனிதரைப்பெற,
அமெரிக்க மக்கள் என்ன தவம் செய்தனரோ…!!!
———————
———————
.
—————————————————————————————————————————————————
அடேடே , பாரதியே ட்ரம்ப்பைப் பற்றி quote
செய்திருக்கிறாரே ! தலைப்பு பிரமாதம் சார்.
பாஜக வினர் கோட்டை விட்டு விட்டார்கள்.
ட்ரம்ப் ரசிகர் முந்திக் கொண்டு விட்டார்.
ஆனாலும் பாஜகவினர் வருத்தப்பட வேண்டாம்.
பாகுபலி போனால் என்ன ?
இன்னும் இந்த மாதிரி நிறைய சீன்’கள்
இருக்கின்றன. கொஞ்சம் யோசித்தால் புலப்படும்,
நமக்கும் ரசிக்க நிறைய விஷயங்கள் கிடைக்கும்.