( பகுதி- 6 ) .. நினைக்கத் தெரிந்த மனமே…


வட இந்தியாவில், முன்பெல்லாம்
தமிழ்ப் படங்களுக்கென்று பெரிய மார்க்கெட் ஒன்றும் கிடையாது.
தமிழகத்திற்கு வெளியே ரொம்ப சிறிய மார்க்கெட் தான்.
கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் கொஞ்சம் உண்டு….

அதை விட்டால் –
வழக்கமாக மும்பையில் 2-3 நபர்கள் இருப்பார்கள்.
அவர்கள் தான் entire North India என்று விநியாக உரிமை
வாங்குவார்கள். ( பிற்காலத்தில் Eastern India என்று
ஒரு பகுதி தனியாகப் பிரித்து கொடுக்கப்பட்டது…)

சென்னையில் படம் ரிலீசாகி 3-4 மாதங்களுக்குப் பிறகு,
அவர்களுக்கு ஒரு ப்ரிண்ட் கொடுக்கப்படும்.
அந்த ப்ரிண்டை வைத்துக்கொண்டு, அடுத்த 6 மாதத்திற்கு
அவர்கள் எங்கு வேண்டுமானாலும், எவ்வளவு ஷோ
வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம். பிறகு பிரிண்டை
தயாரிப்பாளருக்கே திருப்பி அனுப்பி விட வேண்டும்.

அவர்கள் வாங்கும் முன்னரே படங்கள் தமிழ்நாட்டில்
ரிலீசாகி, ரிசல்ட்டும் கிடைத்திருக்கும் என்பதால் –
அவர்கள், நல்ல படங்களை மட்டும் தான் வாங்குவார்கள்.

அதிக பட்சமாக 40-50 ஆயிரம் ரூபாய்க்கு போகும்.
அந்த 6 மாத காலத்திற்குள்ளாக அவர்கள் தமிழர்கள்
குறிப்பிடத்தக்க அளவில் வசிக்கும் மும்பை, புனா,
அஹமதாபாத், பரோடா, கல்கத்தா, டெல்லி போன்ற
இன்னும் பல நகரங்களில், திரையிட்டுக் கொள்வார்கள்.

மும்பையில் மாதுங்கா, தாராவி போன்ற பகுதிகளில்
ஆயிரக்கணக்கான தமிழர்கள் இருப்பதால்,
ஒரு தியேட்டரில் மட்டும் தினமும் 3 காட்சிகள் என்கிற
வகையில், ஓரிரு வாரங்கள் ஓடும். மும்பையில்
திரையிடப்பட்ட பிறகு அந்தப்படம் “பூனா”விற்கும்,
மற்ற நகரங்களுக்கும் போகும்.

அந்த விநியோகஸ்தரின் பிரதிநிதி (film representative)
என்று ஒருவர் அந்த 6 மாதத்திற்கும் படப்பெட்டியுடனே,
அது போகும் ஊர்களுக்கெல்லாம் சுற்றிக்கொண்டிருப்பார்.

பூனாவில் ஞாயிற்றுக்கிழமை காலைக்காட்சியாக மட்டும்
தமிழ்ப்படம் ஒரே ஒரு தியேட்டரில் திரையிடப்படும்.

பூனாவையொட்டிய கர்க்கியில் (நாங்கள் வசித்த இடம்)
ஒரு காட்சியும், தார்போடி என்கிற தமிழர்கள் வசிக்கும்
இன்னொரு பகுதியில் ஒரு காட்சியுமாக, ஒரே ஞாயிறில்
3 காட்சிகளையும் முடித்துவிட்டு, பெட்டியை தூக்கிக்கொண்டு
ரெப்ரெசென்டேடிவ் கிளம்பி விடுவார்.

பூனாவில் படம் வெளியிடுவது தனி அனுபவம்.
காலை 9 மணிக்கு கர்க்கியில், 10.30 மணிக்கு பூனாவில்,
12 மணிக்கு தார்போடியில் காட்சிகள்.

இருப்பது ஒரே ப்ரிண்ட்.
எனவே, முதலில் கர்க்கி தியேட்டரில் படம் 3 ரீல்கள்
ஓடியவுடன் அதைத் தூக்கிக்கொண்டு, ஒரு நபர் அடுத்த
பூனா தியேட்டருக்கு சைக்கிளில் பறப்பார். அங்கே 10.30
மணிக்கு துவங்கி 3 ரீல்கள் ஓடியவுடன் அதைத்
தூக்கிகொண்டு அதே ஆசாமி தார்போடி’க்கு பறப்பார்.
இதே மாதிரி ஒவ்வொரு 3 ரீல்களுக்கும் ஒரு ஆசாமி
ரிலே ரேஸ் ….!!!

ஒரு ரீல் என்பது 1000 அடிகள்… 11 நிமிடங்கள் ஓடும்.
3 ரீல்களுக்கு – 33 நிமிடங்கள். எனவே, படம் துவங்கி
35-40 நிமிடங்களில் முதல் ஆசாமி கிளம்பி விடலாம்….!!!

இப்போது….? அன்றைக்கும், இன்றைக்கும் –
கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத நிலை…

உலகம் பூராவுமே தமிழ்ப்படங்களுக்கு நல்ல மார்க்கெட்.

தமிழ்ப்படங்கள் ஓடும் ஏரியாவும் விரிவடைந்து விட்டது.

தவிரவும் புதிதாக, எதிர்பார்க்காத ஒரு ஏரியாவும் உண்டாகி
விட்டது.

அது என்ன புதிய மார்க்கெட்…?
அது ஒரு காமெடியான விஷயம்..
ஹிந்தியில் “தப்பட் தோட்கர் கிரா” என்று சொல்வார்கள்.
அதாவது “கூரையை பிய்த்துக் கொண்டு வந்து விழுந்ததாம்..”
தமிழ்ப் படங்களுக்கு அப்படி ஒரு புதிய மார்க்கெட்
கூரையை பிய்த்துக் கொண்டு வந்து குதித்தது
சில வருடங்களுக்கு முன்னர்….

அடுத்த பகுதியில் விவரமாகச் சொல்கிறேனே…

—————————————————-

சில பாடல்களை எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது.
அதே போல், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரி,
மறக்கவும் முடியாது …

எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகிய இருவருக்கும்
ஒரே சமயத்தில் பெயரும், புகழும் கிடைக்க காரணமாக
இருந்த படங்களில் ஒன்று “மந்திரி குமாரி”.
1950-ல் வெளிவந்தது – சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பு.

இசையமைப்பாளர் ஜி.ராமனாதன் அவர்களின்
கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்டு
உருவாக்கப்பட்ட 2 பாடல்கள் கீழே –


வாராய் நீ வாராய் …
திருச்சி லோகநாதன், ஜிக்கி –
…..

….
உலவும் தென்றல் காற்றினிலே ….
திருச்சி லோகநாதன், ஜிக்கி –
…..

.
——————————————————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to ( பகுதி- 6 ) .. நினைக்கத் தெரிந்த மனமே…

  1. மெய்ப்பொருள் சொல்கிறார்:

    மு க எழுதிய முதல் பாடல் !

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.