ஆர்.எஸ்.எஸ்.தலைவர் சொல்கிறார் – தேசியவாதம் பேசுவது தவறு -!!!


இது செய்தி –

https://www.hindutamil.in/news/india/540558-radicalism-disturbing-world-
peace-only-india-has-solution-bhagwat-2.html

——————-

தேசியவாதம் எனும் வார்த்தை முற்றிலும்
வித்தியாசமானது; ஆனால், பாசிஸம், நாசிஸத்தோடு –

தேசியவாதத்தைச் சிலர் ஒப்பிடுகிறார்கள் என்று
ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்
வேதனை தெரிவித்திருக்கிறார்.

ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின்
சார்பில் நடந்த நிகழ்ச்சியில் அந்த அமைப்பின் தலைவர்
மோகன் பாகவத் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

தேசியவாதம் எனும் வார்த்தை முற்றிலும் வித்தியாசமான
வார்த்தை. ஆனால், சிலர் தவறான அர்த்தம் கற்பிக்கிறார்கள்.

நான் இங்கிலாந்துக்கு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகச்
சென்றிருந்தேன். அப்போது ஆர்எஸ்எஸ் தொண்டர் ஒருவர்
என்னிடம் வந்து சில அறிவுரைகளை எனக்கு வழங்கினார்.

அதாவது இங்கிலாந்தில் ஆங்கிலத்தில்
‘நேஷனலிஸம்’ (தேசியவாதம்) என்ற வார்த்தையை
இங்கு பயன்படுத்தாதீர்கள்.
இங்கு நேஷனலிஸம் என்ற வார்த்தைக்கு
அர்த்தம் வேறுமாதிரி இருக்கிறது.

நீங்கள் இனத்தைப் பற்றிப் பேசலாம்,
தேசத்தைப் பற்றி பேசலாம், அதன் அம்சங்களைப் பற்றிப்
பேசலாம் ஆனால், தேசியவாதம் பற்றி பேசாதீர்கள்.

ஏனென்றால், தேசியவாதம் எனும் வார்த்தை
ஹிட்லரின் நாசிஸம், பாசிஸத்தோடு தொடர்புப்படுத்தி
இங்கிலாந்தில் பார்க்கப்படுகிறது என்று
என்னிடம் தெரிவித்தார்….!!!

————————–

இந்திய மக்களுக்கு இப்போதெல்லாம்
“தேசியவாதம்” (Nationalism ) என்று
சொன்னால், ஹிட்லரின் நினைவா வருகிறது…?

இத்தனை வருடங்களாக
அப்படித் தோன்றவில்லையே…
இப்போது மட்டும் ஏன்… !!!

.
————————————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to ஆர்.எஸ்.எஸ்.தலைவர் சொல்கிறார் – தேசியவாதம் பேசுவது தவறு -!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  பாஜக தேசியவாதம் பேசுவதில் தவறில்லை. ஆனா அவங்க ‘தேசியவாதம்’ என்பது ஹிந்துக்கள் மட்டும் என்பதுபோன்றுதான் பேசுகிறார்கள். ஹிந்து, ஹிந்து கோவில்கள், ஹிந்து வழிபாட்டு முறைகள் என்று.

  காங்கிரஸ், சிறுபான்மையினருக்கு மட்டும் ஆதரவாக இருந்தது உண்மைதான். அதற்காக பாஜக ஹிந்துக்களுக்கு மட்டும் என்ற புரிதலோடு பேச்சும் செயலும் இருக்கக்கூடாது. இப்படிப் பேசும் பாஜகவினர் யாராக இருந்தாலும் அவர்களை உடனே கண்டித்து தண்டனை கொடுத்தால்தான் நேஷனலிஸம் என்று பேசுவதில் அர்த்தம் இருக்கும்

  இஸ்லாமியர், கிறிஸ்துவர்களது வாக்குக்காக அவர்களை மட்டும் ஆதரிப்பது, அவர்களுக்குச் சாதகமாக நடந்துகொள்வது என்ற காங்கிரஸ், திமுக கொள்கைகளைப் போல பாஜக இந்துக்களுக்கு மட்டும் என்று நடந்துகொள்ளக் கூடாது

 2. sakthi சொல்கிறார்:

  Nationalism க்கு இப்படி ஒரு விளக்கம் கொடுத்த அதிமேதாவியை இப்போ தான் பார்க்கிறேன்.ஹிட்லர் சொன்னது Nationalism அல்ல National Socialism சுருக்கமாக Nazism .இது ஜேர்மனியில் ஆரம்பமானது. ஆனால் Fascism இத்தாலியில் இருந்து ஆரம்பமானது.
  எதுவும் தெரியாமலே மேடை ஏறுபவர்கள் இன்று நம் நாட்டில் அதிகமாகி விட்டனர்.

 3. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  ஆர் எஸ் எஸ் தலைவர் கொடுத்த நேஷனலிஸம் பற்றிய விளக்கம் சரியே .
  அவர் இங்கிலாந்து சென்ற போது ஒருவர் சொன்னதாக குறிப்பிடுகிறார் .
  இங்கிலாந்தில் நேஷனலிஸம் என்று சொன்னால் ஹிட்லர்தான்
  ஞாபகம் வரும் .

 4. Gopi சொல்கிறார்:

  // இங்கிலாந்தில் நேஷனலிஸம் என்று சொன்னால்
  ஹிட்லர்தான் ஞாபகம் வரும் . //

  அப்போ இந்தியாவில் – ?

 5. ஜிஎஸ்ஆர் சொல்கிறார்:

  சார்,
  பூவை புஸ்பம்னு சொல்லலாம், அவர் சொல்றமாதிரியும் சொல்லலாம்..

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.