…
…
…
நிரம்ப ஆசாரமான வாழ்வு முறை…
சந்நியாசிகளுக்குரிய நியமங்கள் –
அத்தனையையும் தாண்டி –
மனிதத்தை, சிநேகிதத்தை,
மதிக்கும் ஒரு மிகச்சிறந்த மனோபாவத்தை
இங்கே பார்க்கிறோம்….
காஞ்சி பெரியவரும், அவரது பால்ய கால
பள்ளித்தோழரும் சந்தித்துக் கொண்ட வேளையில்
எடுக்கப்பட்ட ஒரு அபூர்வமான புகைப்படம் கீழே…
(அனுப்பி வைத்த நண்பர் சைதை அஜீஸ்’க்கு நன்றி…)
….
(புகைப்படம் தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டிருக்கிறது…)
….
இந்த சமயத்திற்கு மிகப்பொருத்தமான,
நான் நேற்று பார்த்த ஒரு செய்தியையும்
கீழே தருகிறேன்….
——————————————————————–
கேரளா மாநிலம் கசரகாட் மாநகராட்சிக்கு உட்பட்ட
கன்ஹங்காட்டில் உள்ள ஹிந்து கோயிலின் உள்ளே
முஸ்லிம்களின் நடமாட்டம் அதிகமாக இருந்தது.
பர்கா அணிந்த பெண்கள் சூழ்ந்து நிற்க, மேளம் முழங்க,
ராஜேஸ்வரி’க்கும் – விஷ்ணு பிரசாத்’ – க்கும் திருமணம்
நடந்தது.
ஹிந்து கோயிலில் முஸ்லிம்களின் வாழ்த்து மழையில்
அரங்கேறிய இந்த திருமணம் தான் அனைவரின் வைரல்
டாப்பிக்காக உள்ளது.
தஞ்சாவூரை சேர்ந்த சிறுமி ராஜேஸ்வரி மற்றும் அவரது
பெற்றோர் கேரளாவிற்கு குடியேறியுள்ளனர். சிறுமிக்கு
10 வயது இருக்கும் போது அவரது தாய் – தந்தை
இறந்துள்ளனர். இதனால் அனாதையாக தவித்த ஹிந்து
குடும்பத்தை சேர்ந்த சிறுமியை, முஸ்லிம் சமூகத்தை
சேர்ந்த அப்துல்லா – கதிஜா தம்பதியினர் தத்தெடுத்து
வளர்த்தனர்.
இவர்களுக்கு ஏற்கனவே 3 ஆண் குழந்தைகள் உள்ள
நிலையில் ராஜேஸ்வரியையும் மகளாக சேர்த்து வளர்த்து
வந்தனர். தாங்கள் ஒரு முஸ்லிம் சமூகத்தை
சேர்ந்தவர்களாக இருந்தாலும், சிறுமியை ஹிந்து
முறைப்படியே வளர்த்து வந்துள்ளனர்.
அவர்களின் வளர்ப்பில் படித்த ராஜேஸ்வரிக்கு தற்போது
22 வயது ஆனதால் அவருக்கு திருமணம் செய்துவைக்க
அப்துல்லா – கதிஜா தம்பதியினர் விரும்பினர்.
பிறப்பு முதல் ஹிந்துவாக வளர்ந்த ராஜேஸ்வரியின்
திருமணத்தையும் ஹிந்து முறையிலேயே நடத்த முடிவு
செய்தார். இதற்காக விஷ்ணு பிரசாத் என்ற இளைஞரை,
இருவரின் சம்மதத்துடனும் திருமணம் நிச்சயித்தனர்.
…
…
இதற்காக புடவை, தங்க ஆபரணங்கள் அணிந்து
முஸ்லிம்கள் மற்றும் ஹிந்துக்களின் ஆசியுடன்
ஹிந்து முறைப்படி திருமணம் நடந்தேறியது.
தன் மதத்தின் சாயல் இல்லாமலும், அதனை
வற்புறுத்தாமலும், சிறுமியின் சொந்த மத
அடையாளத்துடனேயே அவர்களின் வாழ்க்கையை
முழுமையாக்கிய அப்துல்லா – கதிஜா தம்பதியினரை
அனைவரும் பாராட்டினர்.
.
—————————————————————————————————————————————————————
புரியவில்லை.மேலே படத்தில் காஞ்சி பெரியவாவும் இஸ்லாமிய பள்ளித் தோழரும்.இந்தப் படத்தில் பத்மசிறீ விருது, குடியரசுத்தலைவர் ராம்னாத் கோவிந்தவிடம், பெற்ற இப்ரஹிம் சடார்(கன்னட காபிர்) காஞ்சி பெரியவருடன் இருக்கிறார்.கன்னட காபீர் பிறந்ததும் பெரியவா பிறந்ததும் ஒத்து வரவில்லை.பெரியவா பிறந்தது 1894 இல்,காபீர் பிறந்தது 1940 இல்.எப்படி பள்ளித் தோழனாக இருக்க முடியும்? அந்த வீடும் மேலே சுவரில் உள்ள படங்களும் கூட ஒத்துப் போகவில்லை.
சக்தி,
நண்பர் சைதை அஜீஸ் அவர்களிடம் ஏற்கெனவே
நான் இது குறித்து விவரம் கேட்டிருக்கிறேன்.
விளக்கத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
புகைப்படத்தை தற்காலிகமாக விலக்கி வைத்திருக்கிறேன்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்