‘பிச்சை எடு; பிரச்சினை தீரும்” – சத்குரு சொன்னாராம்…!!!

கீழே இருப்பது இன்றைய செய்தியிலிருந்து –

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர்
கோவையில் பிச்சை எடுத்து வருகிறார்.

தொழிலதிபர் கிம் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர்.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியா
வந்திருக்கிறார். இந்தியா வந்த அவர் நிம்மதி வேண்டி
கோவை ஈஷா யோக மையம் சென்றிருக்கிறார்.
சிறிது காலம் அங்கே தங்கியிருந்த பிறகு –

வெளியே வந்த இவர் தற்போது கோவையில் –
ரயில்நிலையம், கலெக்டர் அலுவலகம் என்று
மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்குச் சென்று பிச்சை
யெடுத்து வருகிறார்.

மக்கள் கொடுக்கும் 5 மற்றும் 10 ரூபாய்களைப்
பெற்றுக்கொண்டு, அதில் உணவுகளை வாங்கி உண்டு
மகிழும் கிம், காசு கொடுக்கும் மக்களை இருகரம் கூப்பி
நன்றி தெரிவிக்கிறார்.

இது குறித்து விசாரித்த போலீசாரிடம்
`பிச்சையெடுப்பதன் மூலம் மன அழுத்தம் குறையும்’
என்று தனது ஆன்மிக குரு சொன்ன அறிவுரைப்படி
பிச்சையெடுப்பதாக கிம் தெரிவித்துள்ளார்.

இதைப்பார்த்த லோக்கல் பிச்சைக்காரர் ஒருவர் –
” போச்சுடா…இந்த தொழில்லையும் வெள்ளைக்காரன்
போட்டிக்கி வந்துட்டானா……….” என்று கூறினார்.

பி.கு. கிம் தனது குருவின் ஆலோசனைப்படி,
பிச்சையெடுக்க புறப்படும் முன்னர்,
தன் சொத்துக்களை எல்லாம் ஆசிரமத்தின் பெயருக்கு
எழுதி வைத்து விட்டாரா என்பது பற்றியெல்லாம்
இந்த செய்தியில் ஏதும் குறிப்பிடப்படவில்லை
என்பது குறிப்பிடத்தக்கது …. 🙂 🙂

.
————————————————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to ‘பிச்சை எடு; பிரச்சினை தீரும்” – சத்குரு சொன்னாராம்…!!!

 1. புவியரசு சொல்கிறார்:

  செய்தியை விட பின் குறிப்பு
  சுவாரஸ்யமாக இருக்கிறதே : 🙂

 2. Gopi சொல்கிறார்:

  சார், குரு பொல்லாதவர்; பெரிய பெரிய இடங்கள்
  எல்லாம் அவர் அங்கிக்குள்ளே அடங்கி இருக்கிறாகள்;
  சபித்து விடப்போகிறார் ஜாக்ரதை.

 3. புதியவன் சொல்கிறார்:

  சார்… இந்தச் செய்தியில் ஒரு அர்த்தம் இருக்கிறது.

  நம் அகம்பாவம் அழியும்போதுதான், நாம் பிறர் கஷ்டங்களை உணரத் தலைப்படுவோம். பிறரது கஷ்டங்களை உணரும்போதுதான் நம்மில் அன்பு கருணை என்ற ஊற்று சுரக்க ஆரம்பிக்கும். அதன் பிறகுதான் மற்றவர்களைப் புரிந்து அனைத்தும் நமக்கே என்ற எண்ணம் மாறி, அனைத்தும் நமக்கும் பிறருக்கும் அதிலும் எளியவர்களுக்கும் என்ற எண்ணம் சித்திக்கும்.

  எதற்கு கடற்கரையைச் சுத்தம் செய்வது, எளிய குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பது, ஆலயங்களைச் சுத்தம் செய்வது என்றெல்லாம் செய்கிறார்கள்? அப்படிச் செய்பவர்களில் பலர் விளம்பரத்துக்குச் செய்தாலும், அவை சமூகத்துக்கு நாம் நம்மால் முடிந்த அளவு திருப்பித் தரவேணும் என்ற தத்துவத்தை நமக்கு உணர்த்துவது.

  முன்பெல்லாம் பிராமணர்கள் சொத்து சேர்க்கக்கூடாது, அவர்கள் உஞ்சவிருத்தி அதாவது பிறர் மனையில் தேவையான அளவுக்கு மட்டும், அன்றைய தினத்துக்கு மட்டும் பிச்சை (அதாவது உணவை ஏற்றுக்கொள்வது, அரிசி பருப்பு போன்றவை மட்டும்) எடுக்கவேண்டும் என்ற விதி உண்டு. நான் அப்படி உஞ்சவ்ருத்தி செய்தவர்களை சிறிய வயதில் கண்டிருக்கிறேன். தாய்லாந்தில், புத்த குருமார்கள் பித்தளைப் பாத்திரங்களில் அவ்வாறு அன்றைய தினத்துக்கான அரிசியை பிற வீடுகளுக்குச் சென்று பெற்றுக்கொள்வதை (அதே உஞ்சவ்ருத்தி கான்சப்ட்) கண்டேன். ஏர்போர்ட்டை நோக்கி பஸ் சென்றுகொண்டிருந்ததால் டக் என்று புகைப்படம் எடுக்க விட்டுவிட்டது.

  மற்றபடி ஜக்கி அவர்களின் ஆடம்பரமான ஆன்மீகத்துக்குள் செல்ல விருப்பமில்லை. அது பணக்காரர்களுக்கான பொழுதுபோக்கு.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.