முன்பெல்லாம் நாம் இப்படித்தானே இருந்தோம்… ?


இது செய்தி –
———————

குல்லாவுடன் அக்னிவேஷ்-
காவித் தலைப்பாகையுடன் மௌல்வி!-

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான
போராட்டங்களில் “இதுதான் இந்தியா” என்று
பறைசாற்றும் பல செயல்கள் நடைபெற்று
வருகின்றன.

அந்த வகையில் கேரளாவின் கண்ணூரில்
சுவாமி அக்னிவேஷ், இந்திய யூனியன் முஸ்லிம்
லீக் இணைந்து நடத்திய –
“அரசியலமைப்பைக் காப்போம்”
என்ற பேரணியில் நடந்த ஒரு காட்சி நாடு
முழுவதும் நேர்மறை எண்ண அலைகளைப் பரப்பி
வருகிறது.

இந்த மேடையில் பேசும்போது –
சுவாமி அக்னிவேஷ் தனது காவித் தலைப்பாகையை
கழற்றி தன்னோடு மேடையில் இருந்த இந்திய யூனியன்
முஸ்லீம் லீக் கண்ணூர் மாவட்டத் தலைவர்
வி.கே. அப்துல் காதர் மௌலவிக்கு அணிவித்தார்.

மௌலவியின் குல்லாவை கழற்றி தான் அணிந்து
கொண்டார். இந்தக் காட்சி இந்திய யூனியன் முஸ்லிம்
லீக்கின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட, அது பல்கிப்
பரவி வருகிறது.

சம்பந்தப்பட்ட நிகழ்வின் காணொளி கீழே –

—————————————————-

இன்றைய சூழ்நிலையில் வேண்டுமானால் இது
அதிசயமாகத் தோன்றலாம். கடந்த சில வருடங்கள்
முன்பு வரை, முன் எப்போதும், நாம் இப்படித்தானே
உறவாக இருந்து வந்தோம்….?

ஆட்சி மாறியதால், இப்போது இந்தக்காட்சியே
ஒரு அபூர்வ நிகழ்ச்சியாகி விட்டது…!!!

.
————————————————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to முன்பெல்லாம் நாம் இப்படித்தானே இருந்தோம்… ?

 1. Prabhu Ram சொல்கிறார்:

  முன்பெல்லாம் = 6 வருடங்களுக்கு முன்பு எல்லாம் 🙂

 2. புதியவன் சொல்கிறார்:

  //கடந்த சில வருடங்கள் முன்பு வரை, முன் எப்போதும், // – இப்படி நடந்தது எனக்குத் தெரிந்து 40 வருடங்களுக்கு முன்புதான். எப்போது சிறுபான்மை என்று சொல்லி அவர்களுக்கு மட்டும் வாக்கு வங்கி என்ற நோக்கில் நிறைய சலுகைகள் காட்டப்பட்டதோ, அப்போதே சமூகத்தில் விரிசல் விட ஆரம்பித்துவிட்டது. எப்படி மண்டல் கமிஷன் மக்களைப் பிரித்ததோ அதுபோல இதுவும் மனதளவில் நிகழ ஆரம்பித்துவிட்டது. பிறகு பாஜக இதனை முன்னெடுக்கத் தலைப்பட்டவுடன் அவர்களுக்கான ஆதரவு பெருக ஆரம்பித்தது. பாஜக தலைவர்களைத் தீர்த்துவிடுவதால் இதனைச் சமாளிக்கலாம் என கோவை குண்டுவெடிப்பு நிகழ்ந்ததும் தமிழகத்தில் அதன் ஆதரவுத் தளம் ஆரம்பித்தது.

 3. Ramnath சொல்கிறார்:

  புதியவன் செயற்கையாக காரணம் கற்பிக்க
  முயற்சிக்கிறார். இது முழுக்க முழுக்க
  பாஜக ஆட்சிக்கு வந்த பின் ஏற்பட்ட பிரச்சினை தான்.
  மதத்தின் அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்த
  (ரிலீஜியஸ் போலரைசேஷன் ) அவர்கள் நோன்பு
  மேற்கொண்டிருக்கிறார்கள். புதியவன் போன்றவர்கள்
  அதில் தேன் குடித்த வண்டாக மயங்கி விழுகிறார்கள்.
  மதஒற்றுமையிலும், நல்லிணக்கத்திலும்
  அவர்களுக்கு சுதந்திரத்திற்கு முன்பும் சரி,
  பிறகும் சரி – நம்பிக்கை இருந்ததே இல்லை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.