( பகுதி-4 ) .. நினைக்கத் தெரிந்த மனமே… (மங்களா…)சந்திரலேகா அனுபவம் முடிந்து –
இரண்டு-மூன்று வருடங்களுக்குப் பிறகு நான் பார்த்த
இன்னொரு ஹிந்தி திரைப்படம் தான் நினைவிற்கு
வருகிறது. இப்போது நான் இன்னும் கொஞ்சம்
வளர்ந்து விட்டேன்…(9-10 வயது…? ). சுதந்திரமாக, தனியாக
ஊர் சுற்றத் துவங்கி விட்டேன்… சினிமா பார்க்கவும்…!!!

அடுத்து நான் பார்த்தது “மங்களா” …
அதிசயம் பாருங்கள் – இதுவும் ஹிந்தி படம்.
ஜெமினி வாசன் தயாரித்தது.

இந்த இடுகையில் “மங்களா” குறித்து கொஞ்சம்
சுவாரஸ்யங்கள் ….

சந்திரலேகா ஹிந்தியில் மாபெரும் ஹிட்’டானது வாசன்
அவர்களுக்கு மேலும் ஹிந்தி படம் தயாரிக்க வேண்டும்
என்கிற ஆர்வத்தை தூண்டியது.

ரிஸ்க் இல்லாமல் என்ன படம் செய்யலாம் என்று
யோசித்தவருக்கு, தான் ஏற்கெனவே தமிழில் எடுத்து
வெற்றி பெற்ற “மங்கம்மா சபதம்” நினைவிற்கு
வந்திருக்கிறது.


மங்கம்மா சபதம் 1943-ல் ஜெமினியால் தயாரிக்கப்பட்டது.
ரஞ்சன் ஹீரோ…


கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரிக்கப்பட்ட
அந்தப் படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா…?

பிற்காலத்தில் ஹிந்தி திரைப்படங்களில்
கொடிகட்டிப் பறந்த வைஜயந்திமாலாவின்
அம்மாவான, வசுந்தரா தேவி….!!!


வசுந்தரா தேவி பார்க்க நன்றாகவே இருப்பார்.
அவரை கதாநாயகியாக அறிமுகப்படுத்தி, 1943-ல்
பெண்களுக்கு பிடித்த மாதிரி ஒரு கதை தயாரித்தது
ஜெமினி நிறுவனம்.

சுருக்கமாக கதை சொல்ல வேண்டுமானல் –

தன்னை வலுக்கட்டாயமாக திருமணம் செய்துகொண்டு
வதைத்த ஒரு சக்தி வாய்ந்த ஆணை- ராஜகுமாரனை,
சவால் விட்டு, சபதம் எடுத்துக்கொண்டு, தன் அழகாலும்,
சாமர்த்தியத்தாலும் வீழ்த்தி,
அவனுக்குப் பிறந்த மகனைக்கொண்டே பழி தீர்த்துக்
கொள்ளும் கதை.

தந்தையும், மகனுமாக இரட்டை வேடங்கள் ஏற்று
நடித்த ஹீரோ cum வில்லன் ரஞ்சன்.

நான் உங்களுக்கு கதையை விளக்க வேண்டிய அவசியம்
கூட இல்லை… இந்த இரண்டு வீடியோ காட்சிகளையும்
பார்த்தால் போதும்… அந்தக்கால வசுந்தரா தேவியையும்,
ரஞ்சனையும் பார்க்கும் அனுபவத்தோடு,
முழு கதையும் உங்களுக்கு தெரிந்து விடும்….

….

————–

————–

1943-ல் வசுந்தரா தேவியை வைத்து தமிழில் எடுத்த படத்தை
1951-ல் ஹிந்தியில் எடுக்கும்போது – ஹீரோயினாகப்
போட்டால் எடுபடாது என்று தோன்றியதால்,

அப்போது தமிழிலும், தெலுங்கிலும், பாப்புலராகி வந்த
பானுமதியை ஹிந்தியிலும் அறிமுகப்படுத்தி எடுக்கலாமென்று
வாசன் தீர்மானித்தார்…

ஹிந்தியில் எடுக்கப்பட்ட “மங்களா” வில் பானுமதி ஹீரோயின்
ஆனார். ரஞ்சன், 2 வருடங்களுக்கு முன் வெளியாகியிருந்த
சந்திரலேகா ஹிந்தி படத்தின் விளைவாக ஹிந்தியிலும்
பாப்புலராக இருந்ததால், அவரையே ஹிந்தி மங்களாவிலும்
நடிக்க வைத்தார்.

ஹிந்தி மங்களா’விலிருந்து சில புகைப்படங்கள் –தொடர்ந்த வெற்றிப்படங்களால், தமிழிலும்- தெலுங்கிலும்,
தன் முத்திரையை பதித்திருந்த வாசன் அவர்கள் “மங்களா”
மூலம் ஹிந்தி திரையுலகிலும் ஜெமினி நிறுவனத்தை
பலமாக கால் ஊன்றி நிற்கச் செய்தார்.

—————-
தொடர்கிறது….
.
————————————————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to ( பகுதி-4 ) .. நினைக்கத் தெரிந்த மனமே… (மங்களா…)

 1. D. Chandramouli சொல்கிறார்:

  I didn’t get to see the movie’ Mangamma Sabhatham” when I was young. Your narration of the movie and knowing that the lead actors were Ranjan (my favorite star) and Bhanumathy (I love her singing style triggered my interest in it. Hopefully I can find this movie on YouTube. Thanks KM

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   சந்திரமௌலி சார்,

   நான் இருக்கும்போது –
   உங்களுக்கு ஏன் தேடுகிற சிரமம்… 🙂 🙂

   ஒரு இரண்டரை மணி நேரத்தை
   ஒதுக்கத் தயாராகிக் கொள்ளுங்கள் –
   இப்போதே படத்தைப் பார்க்கலாம்…!!!

   ரஞ்சன், பானுமதி நடிக்கும்
   ஹிந்தி ‘மங்களா’ விற்கான லிங்க் –   அல்லது தமிழ் ‘மங்கம்மா சபதம்’
   பார்க்க வேண்டுமா…?

   இதோ லிங்க் –


   .
   வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.