( வீ ர்…? ) சாவர்க்கர் …. நல்லவரா..? கெட்டவரா…? (பகுதி-1)


சாவர்க்கர் நல்லவரா – கெட்டவரா என்கிற கேள்விக்கு
நான் பதில் சொல்வதை விட –

சாவர்க்கர் பற்றி நான் சேகரித்த தகவல்களை எல்லாம்
கீழே தொகுத்து தந்திருக்கிறேன்.

எல்லாவற்றையும் படித்து விட்டு நீங்களே முடிவு
செய்யுங்களேன் – சாவர்க்கர் எத்தகையவர் என்று….!

வீர் சாவர்க்கர் என்று அழைக்கப்படும் …
விநாயக் தாமோதர் சாவர்க்கர் பிறந்தது –
இன்றைய மஹாராஷ்டிரா,
நாசிக் மாவட்டத்தில், பாகூர்-ல்
பிறப்பு – 1883 மே 28
இறப்பு – 1966 பிப்ரவரி 26 ( 82 வயதில்…)

மராத்தியை தாய்மொழியாகக் கொண்டவர்.
பிறப்பால் – பிராம்மணர்…

ஹிந்துத்வா கொள்கையை உருவாக்கியதில்
பெரும்பங்காற்றிய சாவர்க்கர் பற்றிய –

– ஆச்சரியமான, பெரும்பாலானோர் அறியாத
ஒரு உண்மை – சாவர்க்கர் ஒரு நாத்திகர் என்பது.

ஆமாம் – ஹிந்து மதத்தின் அடிப்படை தத்துவங்களான,
கர்மா, மறுபிறப்பு, பக்தி – ஆகியவற்றில் அவருக்கு
நம்பிக்கை இருந்ததில்லை.

மாமிசம் சாப்பிடக்கூடாது, மது அருந்தக்கூடாது,
போன்ற கொள்கைகளில் அவருக்கு நம்பிக்கை இல்லை.

அதே போல், ஜாதிப் பிரிவுகளில் அவருக்கு நம்பிக்கை
இருந்தது இல்லை…சடங்குகளிலும் கூட…

பசுக்கள் பாதுகாப்பு குறித்து அவரது கருத்து –

“…A substance is edible to the extent that it is beneficial to man.
Attributing religious qualities to it gives it a godly status.
Such a superstitious mindset destroys the nation’s intellect.
(1935, Savarkaranchya goshti or tales of Savarkar,
Samagra Savarkar vangmaya, Vol. 2, p.559)

பிராம்மணராக இருந்தாலும் கூட –
சாவர்க்கர் – வெஜிடேரியன் அல்ல..
மீன், முட்டை – சேர்த்த உணவை அவரே
சமைத்துக் கொள்ளும் பழக்கம் அவருக்கு உண்டு.
சில சமயங்களில் விஸ்கி அருந்தும் வழக்கமும் உண்டு.

பூனாவில் B.A. கல்லூரிப்படிப்பை முடித்துக்கொண்டு,
மேற்கொண்டு சட்டம் படிக்க, இங்கிலாந்து சென்றார்.
அங்கே இந்திய சுதந்திரத்திற்கான பல அமைப்புகளுடன்
சேர்ந்து இயங்கினார்.


(1910-ல் சாவர்க்கர்….)

ஆயுதப்புரட்சியின் மூலமே இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து
விடுதலை பெற முடியும் என்று நம்பினார்.

லண்டனில் இருக்கும்போது, முதல் இந்திய சுதந்திரப்போர்
(1857 ) குறித்து அவர் எழுதிய ஒரு புத்தகம் –
“The History of the War of Indian Independence” பிரிட்டிஷ்
அரசால் தடைசெய்யப்பட்டது.

இதனையொட்டி, லண்டனில் சாவர்க்கர் கைது
செய்யப்பட்டு, இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார்.
கைதியாக இந்தியாவிற்கு கப்பலில் கொண்டு
வரப்பட்டபோது, கப்பல் Marseilles துறைமுகத்தில்
இருந்தபோது, பாத்ரூம் கண்ணாடியை உடைத்துக்கொண்டு,
கடலில் குதித்து தப்பினார்.
ஆனால், பின்னர் பிரெஞ்ச் அரசால் கைது செய்யப்பட்டு,
பிரிட்டிஷாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்தியா திரும்பிய அவருக்கு, இரட்டை ஆயுள் தண்டனை
(25 + 25 = 50 ஆண்டுகள் சிறைவாசம் ) விதிக்கப்பட்டு,
1911, ஜூலை 11-ந்தேதியன்று அந்தமானில் உள்ள
செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்டார்.

கைவிலங்கு அணிவிக்கப்பட்டு,
சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு,
முதல் 6 மாதங்களுக்கு – மிகக் கொடுமையான –
தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டார்.
முதலில் சில மாதங்களுக்கு -செக்கிழுத்து, எண்ணை
பிழியும் வேலை சிறையில் அவருக்கு தரப்பட்டது.

அந்தமான் சிறைவாசத்தின் கொடுமைகளைத்
தாங்க முடியாத சாவர்க்கர், பிரிட்டிஷ் அரசுக்கு
தன்னுடைய விடுதலையைக் கோரி பல தடவை
மனுக்கள் எழுதிக்கொடுத்தார்.

1913-ல் அவர் எழுதிக்கொடுத்த ஒரு கடிதத்திலிருந்து
சில பகுதிகள் –

– The latest development of the Indian politics and the
conciliating policy of the government have thrown open
the constitutional line once more.

Now no man having the good of India and Humanity
at heart will blindly step on the thorny paths which in the
excited and hopeless situation of India in 1906-1907
beguiled us from the path of peace and progress.

Therefore if the government in their manifold beneficence
and mercy release me, I for one cannot but be the
staunchest advocate of constitutional progress and –

loyalty to the English government which is the foremost
condition of that progress.

As long as we are in jails there cannot be real happiness
and joy in hundreds and thousands of homes of
His Majesty’s loyal subjects in India, for blood is thicker
than water;

but if we be released the people will instinctively raise
a shout of joy and gratitude to the government,
who knows how to forgive and correct,
more than how to chastise and avenge.

Moreover my conversion to the constitutional line
would bring back all those misled young men in India
and abroad who were once looking up to me
as their guide.

I am ready to serve the Government in any capacity
they like, for as my conversion is conscientious
so I hope my future conduct would be. By keeping me
in jail nothing can be got in comparison to what
would be otherwise.

The Mighty alone can afford to be merciful and
therefore where else can the prodigal son return
but to the parental doors of the Government?

Hoping your Honour will kindly take into notion these points.

V.D. SAVARKAR

——————–
தொடரும் ….

————————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to ( வீ ர்…? ) சாவர்க்கர் …. நல்லவரா..? கெட்டவரா…? (பகுதி-1)

  1. சைதை அஜீஸ் சொல்கிறார்:

    ஐயா
    ஒருவர் நல்லவரா கெட்டவரா என்பதை நாம் எப்படி முடிவெடுப்பது?
    அது ஒரு STATE OF MIND. இன்று நல்லதாக இருப்பது நாளை கெட்டதாகவும், கெட்டது மற்றொரு சந்தர்ப்பத்தில் நல்லாதாக மாறுவதும் தானே உண்மை!
    தேசத்தந்தை காந்தியையே அவரின் சொந்த மகனுக்கு பிடிக்காமல் போனது தானே சரித்திரம்.
    எறும்பு கடித்தாலே அழுதுகொண்டிருந்த ஒரு குழந்தை தான் பெரியவனான பின் தன் கையாலேயே இன்சுலின் ஊசி குத்திக்கொள்வதில்லையா அதுபோலத்தான் நல்லதும் கெட்டதும்.
    நாம் என்ன சொன்னாலும் எவரும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதால் நாம் என்ன சொன்னாலும் பிரயோஜனமில்லை என்பதே என் நிலை. (எப்படி புத்தர் ஆசையை ஒழிக்கவேண்டும் என்று ஆசைபட்டாரோ அதுபோலத்தான் நான் மேற்கூறிய ஸ்டேட்மெண்ட்டும்…
    எவரும் ஏற்கமாட்டார்…
    சொல்வது பிரயோஜனமில்லை…)

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      அஜீஸ்,

      இதில் என்னுடைய கோணம் என்னவென்பதைச்
      சொல்கிறேன்.

      1) சாவர்க்கர், தனிப்பட்ட முறையில் -( அவரது
      குடும்பத்தைப் பொருத்தவரையில் ) நல்லவரா –
      கெட்டவரா ? – என்று தீர்மானிப்பவர்கள்
      அவரது குடும்பத்தினர். அது அவர்களின் உரிமை.

      2) ஆனால், அவர் ஒரு பொதுமனிதர் என்பதால்,
      பொதுவாழ்வில் அவர் எப்படிப்பட்டவர் என்பதைக்
      குறித்து விவாதிக்கவோ, கருத்து கூறவோ –
      பொதுமக்கள் எல்லாருக்குமே உரிமை இருக்கிறது.

      3) அதுவும் அவருக்கு இந்த நிலையில் –
      இவ்வளவு ஆண்டுகள் கழித்து “பாரத ரத்னா” பட்டம்
      கொடுக்க வேண்டுமென்று ஆளும் கட்சியும்,
      அதற்கு அவர் தகுதியற்றவர்; கொடுப்பது தவறு என்று
      எதிர்க்கட்சிகளும் கூறி வரும் நிலையில்,
      அவரைக்குறித்து தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு
      குடிமகனும் தெரிந்துகொள்ள ஆவல் ஏற்படுகிற
      ஒரு சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

      4) எனவே தான், இயன்ற வரையில் அவரைப்பற்றிய
      விவரங்களை சேகரித்து இங்கே தருகிறேன்.

      நல்லவர்/தகுதி உள்ளவர் என்றோ – இல்லை என்றோ
      நாம் கூறுவதால், அரசு எடுக்கப்படப்போகும் முடிவில்
      எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதை
      நான் அறிவேன்….

      இது ஒரு செய்தியைப்பற்றிய பின்னணியை
      முழுவதுமாக தெரிந்துகொள்ளும் ஒரு
      முயற்சி – அவ்வளவே.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  2. செயராமன் சொல்கிறார்:

    இது சாவர்கர் நல்லவரா கெட்டவரா என்று பரிசீலிப்பதற்கான பல முக்கிய செய்திகளைதத் தரவில்லை. இங்கிலாந்தில் கர்சான்வில்லியைக் கொலை செய்யத்தூண்டினார் என்ற குற்றச்சாட்டிலும், நாசிக் கலெக்டர் ஜாக்சன் படுகாலையிலும் சதியாளராக இருந்தார் சாவர்க்கர் என்ற குற்றச்சாட்டிலும் தண்டிக்கப்பட்டு சாவர்க்கள் இங்கிலாந்திலிருந்து அந்தமான் கொண்டுசெல்லப்பட்டார்.சாவர்க்கரின் சகோதரர் மீது வழக்கு போடப்பட்டது குறித்து எரிச்சலடைந்து இருந்த சாவர்க்கர் கர்சன் வில்லி படுகொலையிலும்| , பிராமணர்களுக்குச் சமமாகஅனைத்து சாதியினைரையும் நடத்தும் சமூக உணர்வு கொண்டவராகவும், சிறந்த இண்டாலஜிஸ்ட் என்றும் பெயர்பெற்றிருந்த, மக்கள் அனைவராலும் போற்றப்பட்ட நாசிக் கலெக்டரை கொலை செய்ததிலும் சாவர்க்கருக்குப் பங்கு இருந்தது. இந்த கொலை வழக்குகளில் தான் சாவாக கருக்குத் தண்டணை வழங்கப்பட்டது. அவர் விடுதலை போரில் பங்கெடுத்து அதில் தண்டிக்கப்பட்டதாகப் பலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.