M.P.யில் ஒரு வடிவேலு வழக்கு …..


நம்ம வழக்கை சுலபமாக புரிந்து கொள்ள –
முதலில் வடிவேலு வழக்கை
ஒருமுறை பார்த்து விடுவோம்…

இப்போ நம்ம வழக்கு –

இது உலக கழிப்பறை தினமான இன்றைக்கு
வெளியாகியிருக்கும் ஒரு செய்தி –

ம.பி.,யில் 4.5 லட்சம் கழிப்பறைகளை காணோம்
( https://www.dinamalar.com/news_detail.asp?id=2477625 )

————-

போபால் : மத்திய பிரதேசத்தில் துாய்மை இந்தியா
திட்டத்தின் கீழ் 540 கோடி ரூபாய் மதிப்பில்
கட்டப்பட்டதாக கூறப்படும் 4.5 லட்சம் கழிப்பறைகள்
காணாமல் போனதால் அதிகாரிகள் அதிர்ச்சி
அடைந்துள்ளனர்.

கடந்த 2012ம் ஆண்டு மாநிலத்தில் எடுக்கப்பட்ட
ஆய்வில் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும்
62 லட்சம் பேர் கழிப்பறை வசதிகள் இல்லாமல்
இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ்
மத்திய அரசிடம் இருந்து 540 கோடி ரூபாய் நிதியை
பெற்று அவர்களுக்கு 4.5 லட்சம் கழிப்பறைகள் கட்டிக்
கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அண்மையில் துாய்மை இந்தியா
திட்டத்தின் மாநில இயக்குநர் தலைமையில் சமீபத்தில்
ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சுமார் 21 ஆயிரம் தன்னார்வலர்கள் உதவியுடன்
நேரில் சென்று நடத்தப்பட்ட அந்த ஆய்வில் –

கட்டிமுடிக்கப்பட்டதாக கூறப்படும் 4.5 லட்சம்
கழிப்பறைகளும் நிஜத்தில் இல்லாதது தெரியவந்தது.
புதிய கழிப்பறைகளுக்கு முன் மக்கள் நிற்கும்
புகைப்படங்கள் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
அவை அனைத்தும் போலியானவை என்பதும்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கட்டிமுடிக்கப்பட்டதாக கூறப்படும் கழிப்பறைகளுக்கு
ஆன 540 கோடி ரூபாய் நிதி எங்கு சென்றது என்ற
மிகப்பெரிய கேள்வியை அதிகாரிகள் தற்போது
தீவிரமாக ஆய்ந்து வருகின்றனர்….

மத்திய பிரதேசத்தில் – 2005 நவம்பர் முதல்
2018 டிசம்பர் வரை 13 ஆண்டுகள் பாஜக ஆட்சியில்
இருந்தது….

டிசம்பர் 2018 முதல் காங்கிரஸ் ஆட்சி
செய்து வருகிறது….!!!

ஏன் சார் அப்போ அந்த
4.5 லட்சம் டாய்லெட்டு’களை-
யார் சாப்பிட்டிருப்பார்கள்…?
உங்களுக்கு எதாவது தோன்றுகிறதா…?

.
————————————————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to M.P.யில் ஒரு வடிவேலு வழக்கு …..

 1. sakthi சொல்கிறார்:

  2015 இல் CAG வெளியிட்ட அறிக்கை Hindustantimes இல் வந்தது.அதன் மேல் நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை.
  https://www.hindustantimes.com/india/india-s-25-million-missing-toilets-there-on-paper-only-says-cag/story-2vp96xHhnOppI8IAqV8D4L.html

 2. D Chandramouli சொல்கிறார்:

  I love Vadivelu’s hilarious comedy. After Nagesh, Vadivelu without aping any veterans went on to create his own brand of comedy, with a straight innocent face and ethnic look but creating lasting and roaring laughter. People of all ages needed Vadivelu’s antics to release them from day today stresses and strains of life. Very unfortunate Vadivelu chose to enter political arena and burnt his fingers. But it was too late for him to realize that politics is not his cup of tea. It appears that he is unable to bring out his style of comedy for unknown reasons. Every one faces ups and downs, and so is Vadivelu. We can only hope he concentrates only on his comedy and not succumb to insisting on becoming a hero. TV channels that show continuous comedy scenes even now depend on Vadivelu’s old movies only for their survival. Would Vadivelu get a real break to prove his mettle as he is still sorely needed by many of his fans?

 3. R.Gopalakrishnan சொல்கிறார்:

  Mr.Chandramouli, now the matter is not about Vadiavelu’s comedy. But about the toilets supposed to be
  built in MP for which Rs,540 Cr allotted by the BJP Govt. Where is the money gone and all the toilets are vanished.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   R.Gopalakrishnan,

   ஓம் சாந்தி; ஓம் சாந்தி:ஓம் சாந்திஹி….. 🙂 🙂

   நமக்கு இவ்வளவு பழக்கமான ஊழலைக்கண்டு
   இப்படி பதட்டப்படலாமா…? !!!

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.