…
…
…
அரசியல் வேறு – மதம் வேறு…
அரசியலையும். மதத்தையும் கலக்காதீர்கள்…
கலக்க விடாதீர்கள்.
மத உணர்வுகளால் தூண்டப்பட்டு,
தேர்தல்களில் ஓட்டு அளிக்காதீர்கள்….
மற்றபடி யார், எந்த கட்சிக்கு ஓட்டளித்தாலும்
கவலைப்பட ஏதுமில்லை –
இது தான் நாம் திரும்பத் திரும்ப
சொல்லி வந்த கருத்து.
இன்று நாட்டின் தலைநகர் டெல்லியில்
சட்டமன்றத்திற்கான தேர்தல்கள் நடந்து முடிந்து,
exit poll முடிவுகள் வெளியாகி இருக்கின்றன.
அநேகமாக எல்லா எதிர்பார்ப்புகளும்
ஒரே மாதிரி இருக்கின்றன….
…..
…..
மத உணர்வுகளுக்கு இடம் அளிக்காமல்
மனசாட்சிப்படி ஓட்டளித்த
டெல்லி மக்களுக்கு நமது
உளமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்….!!!
.
————————————————————————————————————————————————————-
மத வெறியர்களுக்கு டெல்லி மக்கள்
நல்ல பாடம் புகட்டி இருக்கிறார்கள்.
சாதாரண பாடம் அல்ல “செருப்படி.”
இந்த மதவெறியர்களைப் பார்த்து,
நம்பிக்கையிழந்து நொந்து போயிருக்கும்
நாட்டின் இதர பகுதிகளில் உள்ள மக்களுக்கும்
இதன் மூலம் ஒரு நம்பிக்கை, பிடிப்பு வரும்.
மக்கல் ஒன்று சேர்ந்தால் இவர்கள் ஒன்றும்
வீழ்த்த முடியாதவர்கள் அல்ல என்கிற
உண்மை இப்போது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது.
நியுஸ்லாண்டிரி என்ற பத்திரிக்கை பிஜேபி அரசின் சார்பாக 10,000 இணையத்தளங்களும், 6 லட்சம் வாட்ஸ்சப் குழுக்களும் உள்ளதாக கணக்கு எடுத்துள்ளது.
இவர்களின் வேலையே, மூளை சலவை அயிட்டங்களை பற்றி எழுதி இந்துக்கள் மத்தியில் வைரல் ஆக்கிக்கொண்டே இருப்பது.
பிஜேபிக்கு ஆதரவான ஆயிரக்கணக்கான தளங்களில், சில இணையதளங்களை பாருங்கள். Swarajyamag, OPIndia, Postcards, tfipost- இவைகள் இந்தியாவின் Top 3000 websites-ல் உள்ளவை. அதனை அர்த்தம்- பல லட்சம் பேர் இதனை தொடர்ந்து பார்க்கிறார்கள் என்பதாகும்.
எவ்வளவு பெரிய போராட்டங்கள் நடத்தினாலும், அதை நொடியில் பிஜேபி பிரச்சாரத்துக்கு ஆதரவாக மாற்றி பரப்புவார்கள்.
பாக்கிஸ்தான் கொடி, பாகிஸ்தான் கோசம், வன்முறை, என்பதாக மாக் செய்து வெளியிடுவார்கள்.
இந்துக்களை நொடியில் சென்றடையும் வகையில் இவர்கள் வைத்துள்ள இணையதளம் டு பேஸ்புக் டு பிஜேபி வாட்ஸாப்ப் டூ குடும்ப வாட்ஸாப்ப் கட்டமைப்பு மூலம் கோடிக்கணக்கான இந்துக்களுக்கு இந்த செய்தியை பரப்பிவிடுவார்கள்.
இந்த பிரச்சாரம் செய்வதில் எந்த அளவு விஷ நெஞ்சுடையவர்கள் என்று பாருங்கள். சில நாட்களுக்கு முன் டெல்லி ஷாஹீன் பாக் போராட்டத்தில் கலந்துகொண்ட ஓரு பச்சிளம் குழந்தை இறந்துவிடுகிறது. உடனேயே இதற்கு ஓரு பெயர் சூட்டுகிறார்கள் குர்பானி ஜிகாத் என்று. லவ் ஜிகாத் போல, குர்பானி ஜிகாதில் முஸ்லிம்கள் இறங்கி விட்டார்கள். இவர்கள் தாய்மார்களே அல்ல ஜிகாதிகள் என்று கட்டுரை எழுதுகிறார்கள்: https://www.opindia.com/2020/02/shaheen-bagh-infant-death-caa-protests-jihad-qurbani-video/amp
இன்று வரை தமிழ்நாட்டு அளவிலேயோ, இந்தியாவிற்கோ, ஒரு ஒருங்கிணைந்த போராட்ட அமைப்பு உருவாகவில்லை என்பதும் மிகவும் கவலைக்குரியது.
Sithalapakam Velan,
நீங்கள் சொல்லும் செய்தியில் பெரும்பாலானவற்றை
நானும் அறிவேன். அதனால் தான் என் இடுகைகளில்
மீண்டும் மீண்டும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி
எழுதுகிறேன்.
ஆனாலும், மதப்பற்று உள்ள அப்பாவி ஹிந்துக்கள்
நிறைய பேர் இருக்கிறார்கள். மதப்பற்று உடைய
அத்தகையவர்களை, மத வெறியர்களாக மாற்றுவதற்கென்றே
இத்தகைய கும்பல்கள் வேலை செய்கின்றன.
மதப்பற்று வேறு, மதவெறி வேறு
என்பதை இந்த அப்பாவி மக்கள் உணர வேண்டும்.
“மதப்பற்று” தவறு அல்ல – ஆனால் “மதவெறி” தவறு.
அது பெருந்தீமையை உண்டாக்கும்.
நாட்டில் அமைதியையும், ஒற்றுமையையும்,
வளர்ச்சியையும் முன் நிறுத்த
இவற்றை உணர்ந்தவர்கள் மிகக்கடுமையாக
உழைக்க வேண்டும்.
இந்த தேசம் நம் எல்லாருக்குமானது.
இங்கே அனைவரும் சமம்.
இந்த தேசத்தில் அனைத்து மதங்கள், மொழிகள்,
இனங்களுக்கும் இடம் உண்டு –
என்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
நல்லதே நடக்க வேண்டுவோம்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Very true sir.