…
…
…
…
….
அந்தக்கால செய்திகள் குறித்த
சில விஷயங்களை தேடிக்கொண்டிருந்தேன்.
ஒரு சுவாரஸ்யமான பழைய காட்சி.
சின்ன வயதில், எஸ்.எஸ்.ராஜேந்திரனின் படம் ஒன்றில்
பார்த்திருந்தது நினைவிற்கு வந்தது…
பழனியில் நடைபெற்ற திமுகவின்
சமுதாய சீர்திருத்த மாநாடு.
அறிஞர் அண்ணா, பேராசிரியர் அன்பழகன்,
நாவலர் நெடுஞ்செழியன்,கலஞர் கருணாநிதி, என்.வி.என்.
கே.ஏ.மதியழகன் போன்ற திமுகவை உருவாக்கிய
அத்தனை தலைவர்களும் -எம்.ஜி.ஆர் கூட –
நேரடியாக மேடையில் தோன்றிப் பேசும் காட்சி…
இதை – தான் உருவாக்கிய “தங்கரத்தினம்” என்கிற
தன் சொந்தப்படத்தினூடே இணைத்திருந்தார் SSR.
1960-ல் SSR டைரக்ஷனிலேயே வெளிவந்தது இந்தப் படம்.
வீடியோ, டிவி போன்ற எதுவுமே இல்லாத காலம் அது.
இந்த மாதிரி மாநாடுகள் எல்லாம் நேரில் போய்
பார்த்தால் தான் உண்டு. எனவே, மாநாட்டுக் காட்சிகளை
புத்திசாலித்தனமாக, திரைப்படத்தின் ஒரு காட்சியாக
இணைத்த இந்த விஷயம் –
-அந்தக் காலத்தில் திமுகவினரால் பரபரப்பாக
பெரிதும் பேசப்பட்டது… திரைப்படத்திற்கு இதுவே
ஒரு நல்ல விளம்பரமாகவும் அமைந்தது.
அந்தக் காட்சியை நண்பர்களும் பார்த்து ரசிக்க
கீழே தந்திருக்கிறேன்.
( எஸ்.எஸ்.ராஜேந்திரனே பின்னணியில்
குரல் கொடுத்திருக்கிறார்…. )
……….
…………
.
————————————————————————————————————————————————————-