…
…
…
கர்நாடகா, சென்னபட்னாவைச் சேர்ந்தவர்,
அன்றாடங்காய்ச்சி- பூ விற்றுப் பிழைப்பவர்
ஒருவர், திடீரென்று ஒரு பலத்த அதிர்ச்சிக்கு
உள்ளாகி இருக்கிறார்…. கனவோ, கற்பனையோ,
சினிமா கதையோ என்று தான் தோன்றும் நமக்கு.
ஆனால் அத்தனையும் உண்மை.
…
…
புர்ஹான் என்கிற பூ விற்றுப் பிழைக்கும் ஒருவர் –
தனக்கு ஏற்பட்ட நோய்க்கு சிகிச்சை பெற பணமின்றி
தவித்து வருகையில், திடீரென்று ஒரு நாள்,
கடந்த டிசம்பர் 2-ந்தேதியன்று, வங்கி அதிகாரிகள்
அவர் வீட்டிற்கு விஜயம் செய்து, ஒரே நாளில்
அவர் 30 கோடி ரூபாயை தன் மனைவியின்
கணக்கில் போட்டது எப்படி என்று மிகத்தீவிரமாக
விசாரித்திருக்கின்றனர்.
மனைவியையும் அழைத்துக்கொண்டு,
இருவரின் ஆதார் கார்டுகளுடன் –
வங்கிக்கு விசாரணைக்கு நேரில் வரும்படி
உத்திரவிட்டு விட்டு சென்றிருக்கின்றனர்.
புர்ஹானின் மனைவி ரெஹானா என்பவருக்கு,
ஸ்டேட் பாங்கில் ஒரு ஜன்-தன் கணக்கு இருக்கிறது.
அதில் அவர் பெயரில் வெறும் 60 ரூபாய் மட்டுமே
நிலுவையில் வைத்திருந்திருக்கிறார்.
மனைவியோடு வங்கிக்கு சென்ற அவர்
தெரிந்து கொண்டது – அவரது மனைவியின் கணக்கில்
திடீரென்று ஒரு நாள் 30 கோடி ரூபாய் வரவு
வைக்கப்பட்டிருக்கிறது. தோண்டித் துருவி விசாரித்தும்
வேறு தகவல்கள் எதுவும் வரவில்லை.
தன் மனைவியின் கணக்கில் 30 கோடி ரூபாயை
அவருக்கே தெரியாமல் – யார், ஏன், எதற்காக போட்டு
வைத்திருக்கிறார்கள் என்று புரியாமல் குழம்பிப்
போயிருக்கிறார் மனிதர்.
வங்கி அதிகாரிகள் வேறு அவரை பல விதங்களிலும்
குடைந்துவிட்டு, சில வெற்று தாள்களை நீட்டி,
அவர்களை கையெழுத்து போடும்படி வலியுறுத்தி
இருக்கிறார்கள். கையெழுத்துப் போட மறுத்து விட்ட
புர்ஹானும் அவரது மனைவியும், வருமான வரி
அலுவலகத்திற்குச் சென்று புகார் கொடுத்ததாகவும்,
ஆனால், அவர்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை
என்றும் கூறுகிறார்கள்.
பிறகு காவல் துறையில் சென்று புகார்
கொடுத்திருக்கிறார்கள். அவர்களது புகாரை பதிவு
செய்துகொண்ட சென்னபட்னா டவுன் போலீஸ் ஸ்டேஷன்
அந்த புகாரின் அடிப்படையில் ஒரு வழக்கை –
( for forgery and impersonation under the IPC
besides the Information Technology Act for cheating
and impersonation ) ஜனவரி 9-ந்தேதி பதிவு
செய்திருக்கிறார்கள்.
பின்னர், வங்கி அதிகாரிகள், அவர் மனைவியில் பெயரிலான
அந்தக்கணக்கு ( 30 கோடி ரூபாய் பணத்துடன் )
முடக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.
———-
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக
அறிவிக்கப்பட்ட பின்னர், நாடு முழுவதும், பல்லாயிரம்
வங்கிக்கணக்குகளில் இதுபோல் அநாமதேயர்களால்
பல ஆயிரம் கோடி ரூபாய்களுக்கான போலி
பரிவர்த்தனைகள் நடைபெற்றிருப்பதாக செய்திகள்
உலவுகின்றன.
இத்தகைய பல கணக்குகளை வங்கிகள் முடக்கி
வைத்திருப்பதாகவும் செய்திகள் சொல்கின்றன.
டிமானடைசேஷன் அறிவிக்கப்பட்டு மூன்றரை ஆண்டுகள்
ஆன நிலையிலும், இந்த மாதிரி செய்திகள் இன்னமும்
தொடர்வது ஆச்சரியம் அளிக்கிறது….
இத்தகைய கணக்குகளில் ஏன் மேல் நடவடிக்கைகள்
எதுவும் எடுக்கப்படவில்லை…? வெறுமனே கணக்குகளை
முடக்கி வைத்தால் மட்டும் போதுமா…?
fraud செய்தவர்கள் யாரென்று கண்டுபிடித்து,
சம்பந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல்
நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டாமா…?
நாடு முழுவதும், அனைத்து வங்கிகளிலுமாக –
இந்த மாதிரி இன்னும் எத்தனை கணக்குகள்
இருக்கின்றன…? மொத்தம் எத்தனை கோடி ரூபாய்
சம்பந்தப்பட்டிருக்கிறது…?
அதில் போட்டு, குறுகிய கால இடைவெளிக்குள்,
திரும்பவும் எடுக்கப்பட்டு விட்ட தொகை எவ்வளவு,
இன்னமும் முடக்கப்பட்டு இருக்கும் தொகை எவ்வளவு
என்பது குறித்த விவரங்கள் எதையும் சம்பந்தப்பட்ட
வங்கிகள் இன்றுவரை ஏன் வெளியிட மறுக்கின்றன….?
இது போல் இன்னும் எத்தனை
fraud பரிவர்த்தனைகள் நடைபெற்றிருக்கின்றன….?
இந்த ரகசியங்கள் எல்லாம் – ஏன்..,
யாருக்காக பத்திரமாக பாதுகாக்கப்படுகிறது ….?
.
———————————————————————————————————————————————————-
எனக்கு புரியாத ஒரு விசயம்,60 ரூபாய் கணக்கில் இருக்கும் ஒருவர் எப்படி ஆன்லைனில் சேலை வாங்கினார்?அவர் பொலீசாருக்கு சொன்னது.
சில தினங்களுக்குப் பின்னர் பொலீசாரிடம் சொன்னது, அவரை ஒருவர் அழைத்து 15 கோடியை தன் பெயருக்கு மாற்றும்படியும் மிகுதி 15 கோடியை எடுத்துக் கொள்ளும்படியும்,தானே அந்தப் பணத்தை மனைவியின் பெயரில் போட்டதாகவும் கூறி இருக்கிறார்.
ஏதோ குழப்பமாக இருக்கிறதே!
சக்தி,
நான் அந்த விவகாரங்களுக்குள் போகவில்லை…
போனால் main issue திசை மாறிப் போய் விடும்.
இந்த வழக்கு தனி அல்ல …
இது போல் இன்னும் எத்தனையோ வங்கிகளில்,
எத்தனையோ கணக்குகளில் பணம் போடப்பட்டு
இருக்கிறது. குறைந்த இடைவெளியில் மீண்டும்
எடுக்கப்பட்டும் இருக்கிறது.
இவற்றில் சில, சம்பந்தப்பட்ட கணக்குதாரர்களுக்கு
தெரிந்தும் பலவற்றில் தெரியாமலேயும்.
இத்தனையும் – எந்தவித சந்தேகமும் இன்றி,
கருப்புப்பண பறிமாற்றம் தான்…!
ஒருவரின் வங்கிக்கணக்கில் டிஜிடல் முறையில்
பணப்பறிமாற்றம் செய்யப்பட்டால், அந்த இன்னொரு
முனையில் உள்ள கணக்கு எது, எந்த வங்கியிலிருந்து
வந்தது, அதன் சொந்தக்காரர் யார் என்பது
கண்டுபிடிக்க முடியாத மஹா ரகசியமா…?
அவிழ்க்க முடியாத முடிச்சா…?
மூன்றரை ஆண்டுகள் ஆன பின்பும் இவை
ஏன் கண்டுபிடிக்கப்படவில்லை; அவற்றிற்கு
காரணமானவர்கள் மீது ஏன் நடவடிக்கை
எடுக்கப்படவில்லை…?
இந்த மாதிரி இன்னும் எவ்வளவு கணக்கு/
வழக்குகள் இருக்கின்றன…? இது குறித்த எந்த
விவரமும் மூன்றரை ஆண்டுகளாகியும்
வெளியிடப்படாதது ஏன்…?
சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளின் துணையின்றி,
இவை நடக்க வாய்ப்பு இருக்கிறதா…?
அப்படி எத்தனை வங்கி அதிகாரிகள் மீது
நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது…?
கருப்புப்பணத்தை ஒழிப்பதற்காக கொண்டு வரப்பட்ட
திட்டமே, பல கருப்பர்களுக்கு ( கறுப்பு
பணக்காரர்களுக்கு )கருப்பை வெள்ளையாக்க
உதவி இருக்கிறதா…?
இவை எதற்கும் என்னிடம் விடையோ, விளக்கமோ
இல்லை; சம்பந்தப்பட்டவர்கள் யாரும் இது குறித்து
விளக்கமும் தரப்போவதில்லை….
யோசிக்க முடிந்தவர்கள் – யோசிக்க வேண்டும்.
இந்த இடுகையின் நோக்கம் – அவ்வளவே.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
கா.மை. சார்…. வருமான வரி போன்ற எல்லாச் சட்டங்களும் அப்பாவிகளான நமக்கு மட்டும்தான். ப.சி குடும்பத்தின் சார்பில் 1000 கோடி ரூபாய் துபாயில் இன்வெஸ்ட் செய்யப்பட்டிருக்கு என்று நான் பத்து வருடங்களுக்கு முன் கேள்விப்பட்டேன். எனக்கு எது புரியவில்லை என்றால்,
1. எவனையும் பிடித்து, உனக்கு முதல்ல முதல் போட எங்கிருந்து பணம் வந்தது என்று நொங்கு எடுக்க யாரும் முனைவதில்லை. முனைந்தால் அனேகமா எல்லா அரசியல்வாதிகள், மந்திரிகள், கவுன்சிலர் முதல்கொண்டு, அனைவரும் உள்ளேதான் இருக்கணும். ஏதோ செய்தி படித்தபோது காங்கிரஸ் அழகிரிக்கு 200 கோடிக்கு மேல் பிஸினெஸ் சொத்து இருக்காம். அடப்பாவி… உழைத்து ஓடாகத் தேய்ந்தாலும் 1 கோடி சேர்க்க முடியாத பல கோடி இருக்கும்போது (படித்து நல்ல வேலைல இருப்பவங்க) அரசியல் அல்லக்கைகள் எப்படி கோடீஸ்வரராக ஆகிறார்கள்?
2. இந்த கேஸில், 30 கோடியையும் உடனே மக்கள் நல நிதியில் (பிரதம மந்த்ரி இல்லைனா இராணுவம்), எங்கிருந்து பணம் வந்தது என்று கண்டுபிடித்து அவனை சிறையில் போட முடியாதா? நீங்கள் சொல்லியபடி இதுபோல் லட்சக்கணக்கான பணம் பதுக்கல்காரர்கள் இருக்கிறார்கள். தற்போதுள்ள சட்டங்கள், நீதிமுறைகள் இவர்களை எதுவும் செய்ய இயலாது. நம் நாட்டு நீதி முறைகள் இந்தியாவின் நலனுக்கு உண்டானவை கிடையாது.