இந்த “மாயா லோகம்” எங்கே இருக்கிறது ….?கீழே சில அற்புதமான இடங்களின் புகைப்படங்கள்.

நான் மிக நீண்ட காலத்திற்கு முன்னர்..
“அங்கே” சென்றபோது, இவை எதுவுமே இல்லை…
இவை எல்லாமே பிறகு உருவானவை..

இவை என்னென்ன…? எங்கே உள்ளன…?

இந்த அற்புதமான “மாயாலோக”த்தில் ஏற்கெனவே
வாழ்ந்து திரும்பியவர்களுக்கும் –
தற்போது அங்கேயே வாழ்ந்து கொண்டிருக்கும் –

“அந்த கொடுத்து வைத்த” நண்பர்களுக்கும் என்னைவிட
அதிகமாகத் தெரிந்திருக்கும்…

எனவே, அவர்களில் யாராவது முன்வந்து
பின்னூட்டத்தின் மூலம் சில வார்த்தைகளில் சொன்னால் –
இன்னும் சிறப்பாக இருக்குமென்று நினைக்கிறேன்.

……………………………………………………………………………………………………………….
—————————————————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to இந்த “மாயா லோகம்” எங்கே இருக்கிறது ….?

 1. murugadas சொல்கிறார்:

  சார், சிங்கப்பூரை போட்டோவில் மட்டும் பார்த்தால்
  போதாது; நேரில் போனால் தான் அந்த
  அனுபவத்தை ரசிக்க முடியும்.

 2. Rag சொல்கிறார்:

  இங்கே காட்டப்பட்டுள்ள படங்கள் எஸ்ப்ளேனேட் (Esplanade) , கார்டன்ஸ் பை ஆஃப் பே (Gardens by the Bay) ஹென்டர்சன் அலை பாலம் (Henderson Wave Bridge.

  எஸ்ப்ளேனேட் ஒரு துரியன் (Durian) வடிவ இசை ஆடிட்டோரியம். துரியன் இந்த பகுதியின் மிகவும் பிரபலமான பழமாகும், இது பலாப்பழம் போன்றது, ஆனால் மிகவும் மோசமான வாசனை. ரயில்கள், பேருந்துகள் மற்றும் டாக்சிகளில் இது தடைசெய்யப்பட்டுள்ளது ..
  எஸ்ப்ளேனேட் ஒரு துரியன் ஷெல் (Shel) போல வடிவமைக்கப்பட்டுள்ளது.
  இசை, கலை நிகழ்வுகள் இங்கே நடக்கின்றன. இது உண்மையில் சிறந்த ஒலியியல் கொண்ட கலை கூடமாகும் மற்றும் ஒரு சிறந்த அனுபவத்தை அளிக்கக்கூடியது . இங்கே எந்தவொரு நிகழ்விற்கும், டிக்கெட் விலைகள் மிக அதிகம். இந்திய கலை நிகழ்ச்சிகளும் இங்கே நடக்கின்றன.
  ஹென்டர்சன் அலை பாலம் மிகவும் கலை ரீதியாக வடிவமைக்கப்பட்டு சுவாரஸ்யமாக உள்ள இடம். சிங்கப்பூரில் க ட்டப்பட்டவை மிகவும் தனித்துவமானவை, நவீனமானதாகவும் மற்றும் காலப்போக்கில் மறக்கமுடியாதவையாகவும் இருக்க வேண்டும் என்பது அரசின் ஏற்பாடு.
  விரிகுடாவின் தோட்டங்கள் (Gardens by the Bay) மிகப்பெரிய கண்ணாடி கிரீன்ஹவுஸ் (மலர் டோம்) கொண்ட ஒரு ஈர்ப்பாகும். இது மெரினா பே சாண்ட்ஸ் ஹோட்டல் மற்றும் கேசினோவுக்கு அருகில் மீட்கப்பட்ட நிலத்தில் நிற்கிறது.
  தோட்டங்கள் மற்றும் தோட்டக் கலைத்திறன் மற்றும் தாவர இராச்சியத்தை ஒரு புதிய வழியில் முன்வைக்கிறது, உலகின் இந்த பகுதியில் அரிதாகவே காணப்படும் தாவரங்களுடன் பார்வையாளர்களுக்கு கல்வி கற்பிக்கும் வகையிலும் கு ளிர்ந்த, மிதமான காலநிலைகளில் உள்ள இனங்கள் முதல் வெப்பமண்டல காடுகள் வரை வாழ்விடங்களில் உள்ளவை இங்கு காணக்கிடைக்கும் – Orchids, Tulips போல.
  மலர் குவிமாடத்தின் (Flower dome) நுழைவு கட்டணம் கிட்டத்தட்ட ரூ .1000 செலவாகிறது.
  ஆனால் இது சுற்றுலாப்பயணிகள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்.
  15 ஆண்டுகால எனது அனுபவத்தில், சாலைகள், கட்டிடங்கள், பழைய குடியிருப்புகளை இடிப்பது, புதிய வீடுகள், பஸ் மற்றும் ரயில் வசதிகள், வணிக வளாகங்கள், புதுப்பிக்கப்பட்ட பள்ளிகள், மருத்துவமனைகள் போன்றவற்றில் பல முன்னேற்றங்கள் உள்ளன.ரசிப்பதறகு, கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கின்றன.
  பல பசுமையான இடங்கள் தொலைந்து போவதையும் நான் கண்டிருக்கிறேன். உடல் வசதிகள் அதிகரித்து வருகின்றன, மேலும் வயதானவர்களுக்கும் ஊனமுற்றோருக்கும் வாழ்க்கையை எளிதாக்குகின்றன.
  கூடவே வயதானவர்கள் (70+) இன்னும் டாக்ஸி, கிளீனிங் வேலை, வேறு வழியில்லாமால் செய்கிறார்கள்.
  குடிமக்களும் வேலையும் சம்பாத்தியமும் இல்லாமல் காலம் தள்ளுவது மிகவும் சிரமம்.
  வெளி நாட்டவராக வாழ்வதற்கு நல்ல வேலையும் நல்ல சம்பாத்தியமும் மிகவும் அவசியம்.

 3. sakthi சொல்கிறார்:

  Marina bay இல் உள்ள esplanade theatre / Mall/Arch/Library போன்றவை உள்ளே இருக்கிறது.
  மேல் இருந்து பார்த்தால் இரண்டு கண்களைப் போல் இருக்கும்.
  Marina City Park /Bay Garden
  Henderson Waves bridge  உயரமான நடைபாதை பாலம். ஒரு அலைபோல் காட்சி தரும்.

  சென்ற ஆண்டு விடுமுறைக்கு சென்ற போது பார்த்தது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   விவரமாக எடுத்துச் சொன்ன
   நண்பர்கள் Rag மற்றும் சக்தி
   ஆகியோருக்கு மிக்க நன்றி.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.