இதென்ன அக்கிரமம் – இவரா பைத்தியம்….?என்ன அக்கிரமம் –
இவரைப்போய் பைத்தியம் என்று சொல்லலாமா…?

கர்னாடகாவைச் சேர்ந்த – பாஜகவின் முக்கிய தலைவர்,
முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் தற்போதைய எம்.பி.
திரு.அனந்த குமார் ஹெக்டே.

அவர் நேற்று பெங்களூரில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில்
பேசிய விவரங்கள் இன்றைய நாளேடுகளில் வெளியாகி
இருக்கின்றன….கீழே –

——————————————-

பெங்களூருவில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில்
அனந்தகுமார் பேசியதாவது:-

” காந்தி தலைமையிலான சுதந்திர போராட்டம்
ஒரு நாடகம்.

ஒட்டுமொத்த சுதந்திர போராட்டமும் ஆங்கிலேயர்களின்
ஆதரவு மற்றும் ஒப்புதலுடனேயே நடந்தது.

இந்த தலைவர்கள் என்று
அழைக்கப்படுபவர்களில்
எவரும் ஒருமுறை கூட
போலீசாரால் தாக்கப்படவில்லை.

அவர்களின் சுதந்திர இயக்கம் ஒரு பெரிய நாடகம்.
அது நேர்மையான போராட்டமே இல்லை. சுதந்திரம் பெற
ஒரு ஒப்புதலுக்கான போராட்டம் மட்டுமே.

காந்தியின் உண்ணாவிரத போராட்டம்,
சத்தியாகிரகம் ஆகியனவும் நாடகம்.

காந்தியின் சாகும் வரை உண்ணாவிரதம்,
சத்தியாகிரக போராட்டத்தால் நாட்டுக்கு
சுதந்திரம் கிடைத்ததாக காங்கிரசை
ஆதரிப்போர் கூறி வருகிறார்கள்.
அது உண்மையல்ல.

சத்தியாகிரகம் காரணமாக ஆங்கிலேயர்கள்
நாட்டை விட்டு வெளியேறவில்லை.

விரக்தி அடைந்து தான் ஆங்கிலேயர்கள்
சுதந்திரம் அளித்தனர்.

வரலாற்றை படிக்கும்போது எனது ரத்தம்
கொதிக்கிறது. அத்தகையவர்
நமது நாட்டில் மகாத்மா ஆகிவிட்டாரே…”

இவ்வாறு அனந்தகுமார் ஹெக்டே பேசினார்.

https://www.maalaimalar.com/news/national/2020/02/03143017/1284000/Mahatma-Gandhi-freedom-struggle-a-drama-said-BJP-MP.vpf

——————————————-

இவரது பேச்சை குறித்து கர்நாடகாவைச் சேர்ந்த
காங்கிரஸ் தலைவர் பிரிஜேஷ் காலப்பா,
லோக் சபா சபாநாயகர் திரு.ஓம் பிர்லா அவர்களிடம்
ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

” அரசியல் சட்டப்பிரிவு 102-ன் கீழ், பைத்தியக்காரர்கள் –
அதாவது மறை கழன்றவர்கள் – பாராளுமன்ற
உறுப்பினராக இருக்க முடியாது என்பதால்,

அனந்தகுமார் ஹெக்டே, இனியும் பாராளுமன்ற
உறுப்பினராகத் தொடர தகுதியுள்ளவரா என்பது
குறித்து முடிவு செய்ய, பாராளுமன்ற சபாநாயகர் –

திருவாளர் ஹெக்டே அவர்களின் மனநலம் /
மூளை நலம் குறித்து ஆராய, உடனடியாக
முழு மருத்துவப் பரிசோதனைக்கு
ஏற்பாடு செய்ய வேண்டும்”

-என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

——————————-

நம் பார்வையில் –
இது பெரிய அநீதியாகவே தென்படுகிறது.

தன் கட்சியின் கொள்கைகளைப்பற்றி,
வெளிப்படையாகவும், விவரமாகவும்
ஒருவர் பேசினால் –

அவரை மனநலம் குன்றியவர் என்று
குறை கூறுவது எந்த விதத்தில் நியாயம்…?

தன் கட்சியின் கொள்கைகளை
தைரியமாகவும், வெளிப்படையாகவும்
இது போல் பொதுவெளியில் பேச
ஹெக்டே அவர்களுக்கு
முழு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்….!!!

.
——————————————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to இதென்ன அக்கிரமம் – இவரா பைத்தியம்….?

 1. Ezhil சொல்கிறார்:

  சார், நம்ம நாட்டில எல்லோருக்கும் பேச்சு சுதந்திரம் இருக்கு… அதனால இவரையோ இல்லை இவரைப்போன்றவர்களையோ பேசக்கூடாது என்று சொல்லக்கூடாது… அவ்வாறு செய்தால் தான் அவருடைய கட்சியின் கொள்கைகளும், உண்மை முகங்களும் எல்லோருக்கும் தெரிய வரும் …

 2. gopi சொல்கிறார்:

  சார், உங்கள் எழுத்தில் “சோ” தெரிகிறார் 🙂

 3. புவியரசு சொல்கிறார்:

  பாஜகவில் அநேகமாக எல்லாரும் ஹெக்டே
  போன்றவர்கள் தான். சிலர் இப்படி வெளிப்படையாக
  கொட்டி விடுகிறார்கள். மற்றவர்கள் புத்திசாலித்தனமாக
  மறைத்துக் கொள்கிறார்கள். இவர்கள் எல்லாரும்
  இதே மனப்போக்கு உடையவர்கள் தான்.
  அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் காந்தியை எப்படி
  ஏற்றுக்கொள்வார்கள். ?

 4. Ramnath சொல்கிறார்:

  சார், இது எப்படி இருக்கு ?

 5. புதியவன் சொல்கிறார்:

  அனந்தகுமார் ஹெக்டே உளறியிருக்கிறார் என்று சொல்லிக் கடந்துவிட வேண்டியதுதான். ஆனால் இது பாஜகவின் கொள்கை என்று சொல்வது கொஞ்சம் அதீதமாகத் தெரியலை?

  நம்ம பெரியாரும், தமிழ் காட்டுமிராண்டிகளின் மொழி என்று சொல்லியிருக்கிறார். அதற்காக, அதுதான் திமுகவின், திகவின் கொள்கை என்று சொல்லிடமுடியுமா? ப்ல நேரத்தில் கூட்டத்தின் தாக்கத்தாலோ அல்லது உள்ளே செல்வதின் தாக்கத்தாலோ இல்லை தங்களின் இயல்பினாலோ உளறுவது எல்லாம் கட்சி கொள்கை என்று சொல்லிடமுடியுமா?

 6. Gopi சொல்கிறார்:

  இவர்களை அந்த கட்சி ஊக்குவிக்கிறதே:
  சென்ற காந்தி பிறந்த நாளன்று, காந்தி படத்தை
  சுட்டாரே ஒரு உ.பி. பாஜக பெண் தலைவி,
  அவரை கட்சி என்ன செய்தது ?
  சாத்வி என்றொரு காவி இருக்கிறதே.
  அது உளறாத உளறலா ? அதற்கு எம்.பி.சீட்
  கொடுத்து தேர்ந்தெடுத்திருக்கிறார்களே.
  கோலி மாரோ கோலி மாரோ என்று ஒரு
  மத்திய துணையமைச்சரே கத்தினாரெ
  டிவியில் நீங்கள் பார்க்கவில்லையா ?

 7. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  அனந்த குமார் ஹெக்டே சரியாகவே பேசியுள்ளார் .
  இந்து மகா சபா , ஆர் எஸ் எஸ் , ஜனசங் மற்றும் இப்போதுள்ள
  பா ஜ க வினரின் கொள்கை இதுவே .

  வீர் சாவர்க்கர் ‘ யார் இந்து ‘ என எழுதிய நூல்தான் ஆரம்பம் .
  ஒரு காலத்தில் இந்திய தேசம் சிறந்து விளங்கியது .
  மிலேச்சர்களின் வருகையால் சீரழிந்து விட்டது .
  நாம் பழைய பெருமையை அடைய வேண்டும் .
  அதற்கு ஒரே வழி – இந்து , இந்தி , இந்துஸ்தான்
  ஒரே மதம் , ஒரே மொழி , ஒரே தேசம் எனலாம் .
  முஸ்லிம் கிறிஸ்டியன் கணக்கில் கிடையாது .
  இதை ஆதரிப்பவர் தேச பக்தர் . மற்றவர்கள் தேசவிரோதி .

  வரலாறு அதன்படி திருத்தி எழுதுகின்றார்கள் .
  இதன்படி நேரு , காந்தி போன்றவர்கள் தேச விரோதிகள் .
  கோட்ஸே ,மன்னிப்பு கடிதம் எழுதிய சாவர்க்கர் தேச பக்தர் .
  ஆங்கிலேயரை ஆதரித்த ஆர் எஸ் எஸ் தேச பக்தர் .

  இவர்கள் சொல்லும் இந்தி நூறு ஆண்டுகள் முன்பு இல்லை .
  இருந்தது இந்துஸ்தானி – பெர்சிய லிபியில் எழுதப்பட்டது .
  இப்போது உருது என்பது முஸ்லிம்கள் மொழி என்றாகி விட்டது .

  நேருவை குறை சொல்லி சொல்லி நேருதான் இந்தியாவை
  குட்டிச்சுவர் பண்ணி விட்டார் என்று நினைக்க வைக்கிறார்கள் .

  இப்போது காந்தியின் முறை !

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.