…
…
…
இந்தியாவின் தலைநகர்…டெல்லி –
அற்புதமான வளர்ச்சி…
பள்ளிக்கூடத்து பசங்கள் கையிலெல்லாம் துப்பாக்கி…
நேற்று ஒருத்தன் –
இன்று ஒருத்தன் –
ரோட்டிலேயே சுட்டுப் பழகுகிறார்கள்…
…

இந்த எருமை’க்கு
இன்னும் 18 வயது
ஆகவில்லையாம்…. பாவம் பச்சிளம் பாலகன்…அறியாக் குழந்தை..!!!
…
அடுத்த டோக்கியோ ஒலிம்பிக்ஸில், குறைந்த பட்சம்
ஒரு தங்கப்பதக்கம் நிச்சயம் – துப்பாக்கி சுடுதலில்…!!!
என்ன… தினமும் ஒருவராக சுட்டுப்பழகும்
இந்த பசங்களையெல்லாம் அதற்குள் ஒன்றுசேர்த்து
ஒரே டீமாக உருவாக்க வேண்டும்.
அவர்களுக்கு ட்ரெயினிங் கொடுப்பது ஒரு பிரச்சினையே
இல்லை. வாயிலேயே ட்ரெயினிங் கொடுக்க நிறைய
தலைவர்கள் இருக்கிறார்கள்.
( எல்லா பயல்களுக்கும் சரியாக 18 வயது முடிய
2-3 மாதங்கள் இருக்கின்றன… மைனர்கள் – வழக்கு
தொடர்வதோ, தண்டனை கொடுப்பதோ கேள்விக்குறி
தான்…யோசிக்காமலா தேர்ந்தெடுப்பார்கள்…? )
அவரை விதை போட்டால் துவரையா முளைக்கும்..?
அனுபவிக்க வேண்டியது தான்.
—————————————————————-
பிற்சேர்க்கை –
இன்றைய தலைப்புச் செய்தியான …
இந்தக் கழுதை’க்கும் இன்னும் 18 வயது ஆகவில்லையாம்…!!!
…
.
————————————————————————————————————————————————————
இந்த நிலைக்கு யார் காரணம் ?
நண்பர் பிரபு ராம்
இந்த நிலைக்கு நிச்சயமாக காரணகர்த்தா காங்கிரஸ் கட்சியே!
ஒழுங்கு மரியாதையா நாட்டை ஆண்டிருந்தால் ஏன் இவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்?
Known devil is better than unknown anjel என்பது எவ்வளவு உண்மையாகிவிட்டது பாருங்க.
காவிரிமைந்தன் ஐயாதான் பாவம்.
இந்த ஏஞ்சல்-ஐ நாம் சிபாரிசு செய்துவிட்டோமே என்று இப்போ ரொம்ப மெனக்கெடுகின்றார்.
அஜீஸ்,
2014-ல் ஊழல் காங்கிரஸ் ஆட்சி
ஒழிய வேண்டுமென்று
நான் எழுதினேன்.
ஆனால், 2019-ல்… ?
இவர்களும் சரியாக இல்லை
என்று தெரிந்தபோது –
நான் ஆதரித்தா எழுதினேன்….?
எதிர்க்கவில்லையா…?
மீண்டும் மாற்றம் வேண்டுமென்று
எழுதவில்லையா …?
ஒவ்வொரு தேர்தலிலும்
அப்போதைய நிலவரத்தை
எடைபோட்டுத்தான் முடிவெடுக்க வேண்டும்.
அதைத்தான் நான் செய்தேன்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
ஐயா
தங்களின் மீது எந்த காழ்ப்பும் எனக்கு கிடையாது.
தாங்கள் எதார்த்தத்தை எழுதுகிறீர்கள். பலமுறை எதார்த்தங்கள் நம்மை ஏமாளிகளாக்கி விட்டு நம்மையே ஏளனமாக பார்த்து சிரித்துக்கொள்கின்றன.
நாமும் அவற்றிலிருந்து விடுபட்டு அடுத்த எதார்த்தத்துக்கு மாறி சென்றுவிடுகின்றோம்.
அஜீஸ்,
10 வருடங்களுக்கும் மேலாக என்னை
பார்த்து வருகின்ற நீங்கள் நிச்சயமாக
என்னை சரியாகப் புரிந்து கொண்டிருப்பீர்கள்
என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு.
நான் விளக்கம் எழுதியது,
முக்கியமாக – என்னைப்பற்றி,
நான் எழுதிய பழைய இடுகைகளை
படிக்காதவர்கள் – சரியான நிலையை
புரிந்து கொள்ள வேண்டும்
என்பதற்காகத்தான்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
சார் இப்பெல்லாம் இந்த மாதிரி குற்றவாளிகள் தீவிரவாத செயல்களை செய்துவிட்டு பாரத் மாதா கீ ஜெய் என்று சொல்லுவதன் மூலம் இத்துத்துவா கொள்கைக்குள் நுழைந்து தங்களை ஒரு சூப்பர் ஹீரோவாக காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார்கள், இந்த மன வியாதி எந்த அளவுக்கு பரவியிருக்கிறது என்பதற்கு இன்று கண்ட ஒரு செய்தியை பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன், உத்திரபிரதேசத்தில் கணவன் மணைவிக்குள் சண்டை இறுதியில் மணைவி கொல்லப்படுகிறாள், அதன் பின்பும் அந்த கணவன் அவளின் தலையை வெட்டி எடுத்து 1 1/2 கிலோமீட்டர் தூரம் தூக்கி சென்றிருக்கிறான், போலீஸ் பார்த்ததும் அவன் சொன்னது பாரத் மாதா கீ ஜெய் மற்றும் தேசிய கீதத்தை பாடியதாக செய்தியை கண்டபோது இதை எப்படி எடுத்துகொள்வது என்றே தெரியாத நிலையில் நான்
ஜிஎஸ்ஆர்,
நல்ல வேளையாக தமிழகத்தில்
இன்னும் இந்த வியாதி பரவவில்லை
என்பதை நினைத்து திருப்திப் பட்டுக்
கொள்ளுங்கள்… 🙂 🙂
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
.
சிவ பக்தர்களுக்கு ஏதேனும் நடந்தால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். அவர்களுக்கு எங்களின் மொழி புரியவில்லை என்றால் தோட்டாக்களின் மொழி புரியும்….டில்லி பிரச்சாரக் கூட்டத்தில் யோகி ஆதித்யநாத்.
வழி காட்டும் தலைவர்கள்.
“மழித்தலும் நீட்டலும் வேண்டா
உலகம் பழித்தது ஒழித்து விடின்.”
இந்த குறளை உத்திரப் பிரதேசத்து
மூர்க்கருக்கு யாரேனும் மொழிபெயர்த்து
சொல்வரா ?