எங்கெங்கே போகிறது….இந்த வலைத்தளம் ..???


உலகில் மொத்தம் எத்தனை நாடுகள் இருக்கின்றன…?

ஐக்கிய நாடுகள் சபையின் பதிவின்படி சிறிதும் பெரிதுமாக
மொத்தம் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன…!

இதில் எத்தனை நாடுகளில்
தமிழர்கள் வாழ்கிறார்கள்…?

இதற்கு என்னிடம் சரியான விடை இல்லை.
பெறவும் முடியவில்லை.

– இந்த கேள்வியை இப்போது சற்று
மாற்றிக் கேட்கத் தோன்றுகிறது …

எத்தனை நாடுகளில் உள்ள தமிழர்கள்
இந்த விமரிசனம் வலைத்தளத்தை
படிக்கிறார்கள்…..?

சென்ற வாரம் எந்தெந்த நாடுகளிலிருந்தெல்லாம்
விமரிசனத்திற்கு வாசகர்கள் வருகிறார்கள் என்று wordpress
தளத்தி ன் dash-board சென்று விரிவாகப் பார்த்தேன்…

அதில் கிடைத்த விளக்கம் –
மயக்கத்தை தந்தது; ஆனந்த மயக்கம்…!!!

நீங்களே பாருங்களேன்…
கீழ்க்கண்ட இத்தனை நாடுகளிலிருந்து –
இந்த வலைத்தளத்திற்கு வாசகர்கள் வருவதாக
dash-board சொல்கிறது.

இவற்றில் சில – இதுவரை தமிழர்கள் இருப்பதாக
நாம் அறியாத தேசங்கள்…

…………———————————————————————————

ஆக  – இந்த புள்ளி விவரங்களின்படி மொத்தம் உள்ள
193 உலக நாடுகளில், குறைந்த பட்சம் 108 நாடுகளில்
தமிழர்கள் வசிக்கிறார்கள் – அவர்களில் பலர் விமரிசனம்
வலைத்தளத்தை படிக்கிறார்கள்.

இங்கு சில விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன் –

தமிழ்மணம் வலைத்தொகுப்பு தளம் ( tamilmanam.in )
செயல்பட்டுக் கொண்டிருந்தவரையில், தமிழ் வலைத்தளங்களின்
சங்கமத்திற்கென ஒரு இடம் இருந்தது… யார் யார் எழுதுகிறார்கள்..
எந்தெந்த தலைப்புகளில் இடுகைகள் வெளிவருகின்றன போன்ற
விவரங்கள் அனைவருக்கும் அன்றாடம் தெரிய வந்தது.

தமிழ்மணம் தளத்திற்குப் போய், இடுகைகளின் தலைப்புகளின்
தன்மைக்கேற்ப வாசகர்கள் தேர்ந்தெடுத்து வாசிக்க வழி வகை இருந்தது.
தமிழ்மணத்தின் செயல்பாடு நின்றுபோனதில் -அனைத்து வலைத்தள
எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் இடையே இருந்த ஒரு
அற்புதமான தொடர்பு அறுபட்டு விட்டது.

பல வலைத்தளங்களில் வருகைகள் (ஹிட்ஸ்)
வெகுவாகக் குறைந்து விட்டன என்று நண்பர்கள் மூலம் அறிகிறேன்.

நான் கூட துவக்கத்தில் கவலைப்பட்டேன்.
ஆனால், விமரிசனம் வலைத்தளம் ஒரு வாரம்-
10 நாட்கள் அளவிற்கு தடுமாறிய பின்னர்,
மீண்டும் – முன்னிருந்த அதே அளவிற்கு –
வாசகர்களின் வருகையை கொண்டிருக்கிறது.

என்ன – முன்பெல்லாம் சூடான தலைப்புகளை
தமிழ்மணத்தில் பார்த்துவிட்டு, நிறைய புதிய வாசகர்களும்
வருவார்கள். இப்போது புதிதாக வருபவர்களின்
எண்ணிக்கை கொஞ்சம் குறைந்திருக்கிறது.

நான் நண்பர்களிடம் சில விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன்.
நான் இங்கே எழுதுவது, பெயருக்கோ, புகழுக்கோ, விளம்பரத்திற்கோ
ஆசைப்பட்டு அல்ல -என்பது உங்களுக்கே தெரியும்.
( இன்று வரையில் என் பெயரையோ, புகைப்படத்தையோ
நான் இங்கே பிரசுரித்துக் கொண்டதில்லை…)

இந்த வலைத்தளத்தில் நான் எழுதுவது –
முழுக்க முழுக்க என் ஆத்ம திருப்திக்காக…
மனசாட்சியின் வெளிப்பாடாக மட்டும் தான்.

மனதில் தோன்றுவதை எல்லாம் இங்கே வெளிப்படையாக
எழுதுவதன் மூலமும் –

அற்புதமான, நன்கு சிந்திக்கக்கூடிய –
இந்த தள வாசக நண்பர்களுடன்
கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வதிலும்
நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

உங்களுக்கே தெரியும், மற்ற எந்த தளங்களையும் விட,
இங்கே தான் கருத்துப் பரிமாற்றங்கள் அதிகம்.
பின்னூட்டங்களின் மூலம், மறுமொழிகளின் மூலம் –
வாசக நண்பர்களிடமிருந்தும் பல சமயங்களில்
ஆழமான கருத்துகள் வெளிவருகின்றன. பல சமயங்களில்
இங்கே அற்புதமான, ஆழமான விவாதங்கள் நடைபெறுகின்றன.

எனவே, இதை என் வலைத்தளம் என்று சொல்வதை விட,
நம் அனைவருக்கும் பொதுவான ஒரு கருத்துமேடை என்று
சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்.

இங்கு எழுதுவதற்காக, நான் நிறைய படிக்கிறேன்.
பல தகவல்களை தேடிச்சென்று சேகரிக்கிறேன்.
இதற்காக நான் மிகுந்த நேரத்தை செலவழிக்கிறேன்.
நீண்ட நேரங்கள் உழைக்கிறேன்.

நான் இங்கே எழுதுவது அதிக நபர்களைச் சென்றடைவது –
எனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கிறது…
என் உழைப்பு வீண் போகவில்லை என்கிற திருப்தி
எனக்கு கிடைக்கிறது.

தமிழ்மணம் தள செயல்பாடு நின்றுபோன பின்பும் கூட,
ஏற்கெனவே பழகிய வாசக நண்பர்கள் அநேகமாக –
தினமும் இங்கே வந்து நான் என்ன எழுதி இருக்கிறேன்
என்று பார்ப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
நான் நிச்சயம் எதாவது எழுதி இருப்பேன் என்கிற
நம்பிக்கை அவர்களுக்கு. நானும், குறைந்த பட்சம்
தினமும் ஒரு இடுகை எழுதும் வழக்கத்தைக்
ஏற்படுத்தி கொண்டிருக்கிறேன்.

இந்த தளத்திற்கு, புதிய வாசகர்கள் வர வேண்டுமானால்,
தமிழ்மணம் போல் வேறு எதுவும் வலைத்தொகுப்பு
இல்லாத நிலையில் –

இந்த தளத்தைப்பற்றி அறியாதவர்களுக்கு இப்படி ஒரு வலைத்தளம்
இங்கே செயல்படுவது தெரிய வேண்டும்.

ஒரு தடவை இதை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தால்,
பிறகு தொடர்ந்து வருவதும், வராமல் இருப்பதும் அவர்களது
விருப்பம், ஆர்வத்தைப் பொறுத்தது.

எனவே, இந்த வலைத்தள நண்பர்களிடம் ஒரு வேண்டுகோளை
முன்வைக்கிறேன்.

http://www.vimarisanam.wordpress.com

-என்கிற தலைப்பில் ஒரு தமிழ் வலைத்தளம் இயங்கிக்கொண்டிருக்கிறது
என்பதை உங்கள் twitter, facebook, whatsapp – தொடர்புகளில்
உள்ள நண்பர்களுக்கு ஒருமுறை தெரியப்படுத்துங்களேன்….

இங்கே வருகின்ற, உங்களுக்குப் பிடித்தமான இடுகைகளில்
எதாவது ஒன்றை அவர்களுக்கு –

விமரிசனம் தள விலாசத்துடன் forward செய்யுங்களேன்.
அது புதிய நபர்களுக்கு இந்த தளத்தைப்பற்றிய
ஒரு அறிமுகத்தைக் கொடுக்கும். இதற்கான link வசதி
ஒவ்வொரு இடுகையின் கீழேயும் இருக்கிறது.

பெயரோ, புகழோ அல்ல –
நமது உழைப்பும் எழுத்தும், செயல்பாடுகளும் இன்னும் அதிக
நபர்களைச் சென்றடைய வேண்டும் என்பது மட்டுமே என் நோக்கம்.

உங்களுக்குப் பிடித்த இந்த தளத்தின் வளர்ச்சியை முன்னிட்டு,
இந்த உதவியைச் செய்வீர்களா நண்பர்களே …?

.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
31, ஜனவரி 2020

.
————————————————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to எங்கெங்கே போகிறது….இந்த வலைத்தளம் ..???

 1. புவியரசு சொல்கிறார்:

  விரைவில் 193 நாடுகளிலும் விமரிசனம் தளம்
  வாசம் செய்ய வாழ்த்துகள்.

  நண்பர்களிடம் அவசியம் எடுத்துச்செல்வோம்.

 2. Prabhu Ram சொல்கிறார்:

  சில நாட்களுக்கு முன்னால் American Samoa-
  என்கிற குட்டித்தீவில் வசிக்கும்
  தமிழர்களைப்பற்றி எழுதி இருந்தீர்கள்.
  இந்த மாதிரி இன்னம் பல நாடுகளை உங்கள்
  பட்டியலில் இப்போது பார்க்கிறேன்.
  இந்த மாதிரி இடங்களிலிருந்து யாராவது
  இங்கே பங்கெடுத்துக் கொண்டால்
  சுவாரஸ்யமாக இருக்குமென்று தோன்றுகிறது.
  இதைப் படிக்கும் உலகத்தமிழர்களை
  கேட்டுக் கொள்கிறேன்.நீங்களும் இங்கே
  உங்களைப்பற்றி, நீங்கள் வாழும் இடங்களைப்பற்றி
  எல்லாம் எழுதுங்களேன். உங்களைப்பற்றி
  நாங்களும் தெரிந்துகொள்கிறோம்.

 3. ஜிஎஸ்ஆர் சொல்கிறார்:

  சார் நீங்க இமெயில் சப்ஸ்கிரைப் விட்ஜெட் இனைத்தால் ஒருவேளை இன்னும் வாசகர் வட்டம் பெரிதாக வாய்ப்பிருக்கிறது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி ஜிஎஸ்ஆர்…
   இதுவரை இதைப்பற்றி நான் யோசித்ததில்லை.

   அவசியம் செய்கிறேன்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.