…
…
…
அய்யோ பாவம் நிதிஷ்குமார் என்றால் …
அடுத்த பாவம் ஸ்டாலினா…?
CAA, NRC, NPC விஷயத்தில் தனக்கு எதிராகப் பேசிய
ஐக்கிய ஜனதா தளத்தின் துணைத்தலைவர் பிரசாந்த்
கிஷோரை, தன் போக்கு பிடிக்கவில்லையென்றால்,
தாராளமாக கட்சியை விட்டு வெளியேறலாம் என்று
நேற்று சொன்னார் பீஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார்…
பதட்டத்தில் – ஒரு பின்னணியையும் உளறி விட்டார்…
பாஜக தலைவர் அமீத் ஷா சொன்னாரே என்று தான்
உங்களை என் கட்சியில் சேர்த்துக்கொண்டேன் என்று…!
சொல்லி 18 மணிநேரம் கூட ஆகவில்லை. பி.கிஷோர்
இன்னும் எதாவது வம்பு பண்ணி விடப்போகிறாரே
என்கிற பயத்தில், கட்சியை விட்டு நீக்கி உத்திரவும்
போட்டு விட்டார். பாஜக ஆதரவில் தான் பீஹாரில் ஆட்சி
நடத்திக்கொண்டிருக்கும்போது, பிரசாந்த் கிஷோர்
இப்படி எல்லாம் பேசினால், தன் நாற்காலி பறிபோய்
விடுமே என்கிற பயம் நிதிஷ்ஜி-க்கு….
எல்லாரும் சிரிக்கிறார்கள்…
பாஜக தலைவர் அமீத்ஜீ சொல்லி, பிரசாந்த் கிஷோரை
ஐக்கிய ஜனதா தளத்தில் சேர்த்து நேரடியாக
துணைத்தலைவராகவும் நியமித்தார் என்றால் அதற்கென்ன
அர்த்தம்….? அமீத்ஜீ, தன்னை ஆட்டுவிக்கிற நிலையில்
தான் இருப்பதாக – நிதிஷ்ஜியே ஒப்புதல் வாக்குமூலம்
கொடுத்திருக்கிறாரே…!
கொஞ்சம் யோசித்தால், இன்னொரு கேள்வி எழுகிறது.
அமீத்ஜி, பி.கிஷோரை ஐ.ஜ.தளத்தில் சேர்த்துக்கொள்ளும்படி
நிதிஷ்ஜியிடம் ஏன் சொல்ல வேண்டும்…? அதுவும்
எடுத்த எடுப்பிலேயே கட்சியின் அதிகார பீடத்தில்,
அதன் துணைத்தலவராக…?
தன்னுடைய ஆளை நிதிஷ்குமார் கட்சியில் வைக்க
வேண்டும்.. அதன் உள்விவகாரங்களைப்பற்றி எல்லாம்
தனக்கு ரிப்போர்ட் வரவேண்டும் என்பதைத் தவிர
வேறு என்ன காரணமாக இருக்க முடியும்…?
தன்னை வெளியேற்றியதற்கு, “உங்கள் நாற்காலியை
பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்- நிதீஷ்ஜி ” –
என்று சொல்லி வெறியேற்றி இருக்கிறார் பி.கிஷோர்.
…
…
சட்டமன்ற தேர்தல்கள் நெருங்கி வருவதால், இருக்கிற
ஒரே பலமான கூட்டணியான பாஜகவை எந்த விதத்திலும்
பகைத்துக் கொள்ள முடியாது நிதிஷ்ஜியால்…!!!
இது இருக்கட்டும் –
இங்கே ஸ்டாலின் அவர்கள் எப்படி வந்தார் என்கிறீர்களா…?
அடுத்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்று
ஆட்சியைக் கைப்பற்ற என்னென்ன உத்திகளை
மேற்கொள்ள வேண்டும் என்று ஆராய்ந்து ஆலோசனை
கூற, பிரசாந்த் கிஷோரின் கம்பெனியுடன், திரு.ஸ்டாலின்
ஒப்பந்தம் போட்டிருக்கிறார். இப்போது
அவர்கள் சொல்லும் ஆலோசனைப்படி தான் திமுக
இயங்குகிறது…
பிரசாந்த் கிஷோர், ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலில்
வெற்றி பெற்று, தமிழக முதலமைச்சராக ஆட்சிக்கட்டில்
அமர கீழ்க்கண்ட ஆலோசனைகளை கூறி இருக்கிறார்.
ஸ்டாலினும் – பி.கே.காட்டிய பாதையில்
போய்க்கொண்டிருக்கிறார்….
…
…
இப்போது திடீரென்று நிதிஷ்குமார் – பிரசாந்த் கிஷோர்
அமீத்ஜி-யின் ஆள் என்று சொன்ன பிறகு – எந்த அளவிற்கு
பி.கேயை ஸ்டாலின் நம்ப முடியும்…? அமீத்ஜியுடன்
கலந்து ஆலோசிக்காமலா, ஸ்டாலினுக்கு ஆலோசனை
சொல்வார் பி.கே…?
பாஜக தலைவர் அமீத்ஜி, திமுக தலைவர் ஸ்டாலின்
தேர்தலில் வென்று தமிழக ஆட்சியை கைப்பற்றுவதையா
விரும்புவார்…?
பி.கேயை நம்பி, திமுகவின் அத்தனை விவரங்களையும்
அவர் கம்பெனியிடம் கொடுத்தாயிற்று… இப்போது
அவையனைத்தின் காப்பியும் அமீத்ஜி-யின் டேபிளில்
இருக்கும்…!!!
அப்படியானால் ……அடுத்த பாவம் –
திருவாளர் ஸ்டாலின் தானே…? இப்படி தன் குடுமியை –
தானே பாஜக தலைவரிடம் ஒப்படைத்த திமுக தலைவரின்
நிலை – அய்யோ பாவம் தானே…?
அமீத்ஜி-யின் நமட்டுச்சிரிப்பை நம்மால்
இங்கிருந்தே பார்க்க முடிகிறதே…!!!
.
——————————————————————————————————————————————————-
If PK is closed to Amit Shahji, then why should he speak against CAA-NPR-NRC and get
dismissed from JD(U). Kudos for connecting it with DMK – your fav
பி.கே. சொல்லிக் கொடுத்து தானா
ஸ்டாலினுக்கு தேர்தல் உத்திகள் தெரிய வேண்டும் ?
கலைஞரிடம் கற்றுக்கொள்ள முடியாததையா
இனி பி.கே.யிடம் தெரிந்துகொள்ளப்ப்போகிறார் ?
பிரசாந்த் கிஷோரை ஒப்பந்தம் செய்தது
திமுகவுக்கு பாதகங்களையே கொண்டு வரும்.
எப்படியாவது முதலமைச்சர் நாற்காலியை
பிடித்துவிட வேண்டும் என்கிற வெறி –
தவறான வழிகளில் கொண்டு செலுத்துகிறது.