டாக்டர் சு.சுவாமி …தன் கட்சி ஆட்சியையே “ஊழலோ-ஊழல்” என்கிறார்…. !!!


மொத்த 100 % ஏர் இந்தியா பங்குகளையும் தனியாருக்கு
விற்கப்போவதாக நேற்று (27-ந்தேதி) மத்திய அரசு அறிவித்த
முடிவை, பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும்,
பொருளாதார நிபுணரும், பாராளுமன்ற உறுப்பினருமான
டாக்டர் சுப்ரமணியன் சுவாமி கடுமையாக எதிர்த்திருக்கிறார்.

முதலில் முன் கதை –

கடந்த 2 வருடங்களாக – ஏர்-இந்தியா நிறுவனத்தை,
கடவுளே வந்தாலும் சரி செய்ய முடியாது; நஷ்டத்தில்
ஓடுவதை எவராலும் தடுக்க முடியாது என்று தொடர்ந்து
சொல்லி விட்டு, அதன் பங்குகளை விற்பதாக
அறிவித்தது; முதலில் 50 சதவீதத்திலிருந்து துவங்கி,
கடைசியாக 76 % வரை விற்பதாக அறிவித்தது.
ஆனால் யாரும் வாங்க முன்வரவில்லை;
காரணம் …..?  முழுவதும் படித்தால்
ஒருவேளை  தெரிய வரலாம்…!

இந்த நிலையில் கடந்த வாரம், டாவோசில் நடந்த
உலகப்பொருளாதார மாநாட்டில், செய்தியாளர்களிடம்
பேசும்போது மத்திய அமைச்சர் திரு.பியூஸ் கோயல்
அவர்கள் சரியான நிர்வாகத்தில் இயங்கினால்
ஏர்-இந்தியா ஒரு தங்கச்சுரங்கம்; பணமாகக் கொட்டும்
நிறுவனம் என்று கூறினார். தான் மட்டும் மத்திய
மந்திரியாக இல்லையென்றால், தானே ஏர்-இந்தியா
நிறுவனத்தை வாங்கி இருப்பேன் என்றும் கூறினார்…

அவர் கூறியது பற்றிய செய்தி கீழே –

இந்த நிலையில் தான், 100 சதவீத பங்குகளையும்
விற்பதாக அரசு அறிவித்திருக்கிறது.

அத்தோடு மட்டுமல்லாமல், புதிய அறிவிப்பில் இன்னும்
சில கூடுதல் சலுகைகளும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

கடந்த முறை ஏல அறிவிப்பில், வாங்குபவர்கள்
ஏர்-இந்தியாவின் கடன் சுமையில் – ரூ.33,392- கோடியையும்
ஏற்க வேண்டுமென்று கூறப்பட்டிருந்தது.

இப்போது அந்த கடன் தொகையில் ரூ.24,576- கோடியை
மட்டும் ஏற்றுக் கொண்டால் போதுமென்று
அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு முன்னால் அறிவிக்கப்பட்ட ஏலங்களை
தவிர்த்த ஹிந்துஜா கம்பெனிகள் இந்த மாற்றத்திற்கான
காரணங்களாக இருக்கலாமென்று செய்திகள் சொல்கின்றன….ஆட்சியை 5 வருடங்களுக்கு மொத்தமாக குத்தகைக்கு
கொடுத்து விட்ட மக்களுக்கு. இவற்றை எல்லாம
கேள்வி கேட்க தகுதியோ, உரிமையோ
இருக்கிறதா என்ன….?

ஆனால், டாக்டர் சுப்ரமணியன் சுவாமி கொதிக்கிறார்.
அன்றாடச் செலவுகளுக்கு பணமில்லை என்றால் –
வீட்டையே விற்று விடுவதா தீர்வு என்கிறார்…..!!

குடும்ப சொத்தை விற்பனை செய்வதற்கு பெயர், பங்குகளை
விற்பனை செய்வது என அர்த்தம் அல்ல.

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் பங்குகளை விற்பனை
செய்வது என்பதே மிகப்பெரிய ஊழலுக்கு இட்டுச் செல்லும்.

நான் ஏர் இந்தியா நிறுவன பங்குகள் விற்பனையை
விவகாரத்தை தொடர்ந்து கண்காணிப்பேன், 
நீதிமன்றத்தில் தனியாக ஒரு மனுத் தாக்கல்
செய்வேன்..என்று சுப்ரமணியன் சுவாமி அறிவித்திருக்கிறார்.

இன்னும் ஒரு படி மேலே போய் –
இது தேசத்துரோகம் என்று சொல்லக்கூடிய அளவிற்கும்
போய் விட்டார்….

யார் எதை விற்றாலென்ன;
எவ்வளவு வாங்கிக்கொண்டாலென்ன…?

மக்களுக்கு இவற்றைப்பற்றி எல்லாம் குறை கூற அருகதையோ,
தகுதியோ கிடையாது…. !!! எனவே, அவர்கள் வழக்கம் போல்
எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே கடந்து செல்ல
வேண்டியது தான்…

ஆனால், டாக்டர் சுப்ரமணியன் சுவாமியை அப்படி ஒதுக்கிவிட
முடியாது. அவர் என்ன எதிர்பார்க்கிறாரோ, அந்த
மரியாதையை அவருக்குச் செய்ய வேண்டும்;

இல்லையேல் –
எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும்
பாயக்கூடியவர் அவர் என்பதை ஆட்சியில் இருப்பவர்கள்
நினைவில்  வைத்துக் கொள்வது அவர்களுக்கு நல்லது.

ஏதோ – அவர்கள் மீது உள்ள
அக்கறையில் சொல்கிறோம்…!!!

மற்றபடி, இதெல்லாம் –
எப்படிப் போனால் நமக்கென்ன…?

.
———————————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to டாக்டர் சு.சுவாமி …தன் கட்சி ஆட்சியையே “ஊழலோ-ஊழல்” என்கிறார்…. !!!

 1. Ezhil சொல்கிறார்:

  கா.மை. அய்யா, கண்டிப்பா எதோ ஒரு உள்-காரணம் இல்லாம இருக்காது… ஏன் அரசு மற்றும் அரசு-சார்ந்த நிறுவனங்களை எல்லாம் களீபரம் பண்ணி, தனியாருக்கு தாரைவார்க்க துடியா துடிக்குறாங்கனு தெரியலை… ஆனா ஒன்னு, நான் கூட காங்கிரஸ் தான் இந்தியாவை முழுசா வித்துடுவாங்கனு நெனச்சேன்.. இப்போ பாஜக அதை வெற்றிகரமா செஞ்சிக்கிட்டு இருக்காங்க ….

 2. புவியரசு சொல்கிறார்:

  கைப்புண்ணை பார்க்க கண்ணாடி தேவையா என்ன ?

  ” அவர்களுக்கு” வேண்டப்பட்ட ஒவ்வொரு பிசினஸ்மேனுக்கும்
  தனித்தனியே பார்த்து பார்த்து “தீனி” போடுகிறார்கள்.

  அண்மையில் அடானி’க்கு 6 ஏர்பொர்ட்களில் மெயிண்டெனன்ஸ்
  காண்டிராக்ட் கொடுத்தார்களே எப்படி ? இப்படித்தான்.

  அவ்வப்போது கைச்செலவுக்கு உதவுவதோடு
  தேர்தல் சமயத்தில், இவர்களுக்கு பல்க்’காகவும்
  பதில் மரியாதை கிடைக்கும்.

  அதான் கே.எம்.சாரே சொல்லி விட்டாரே; 5 வருஷ
  மொத்த குத்தகை என்று. இவர்களைச் சொல்லி பயனில்லை;
  குத்தகைக்கு கொடுத்தார்களே நம் மக்கள் அவர்களைத்தான்
  சொல்ல வேண்டும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.