எரியும் வயிறு …. யார் காரணம் …?


முதல் முறையாக, நானே உருவாக்கிய ஒரு கார்ட்டூன் இது…(இதற்கான வசதிகளை வலைத்தளத்திலிருந்தே தேடிக்கொண்டேன்…!!1 )

உலகப் பொருளாதார மன்றத்தின்
(World Economic Forum – WEF) 50-ஆவது உச்சி
மாநாடு, அண்மையில் டாவோஸில் நடந்தது.

இந்த மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில்
உள்ள மக்களின் பொருளாதார நிலை குறித்த,
தனது ஆய்வறிக்கையை, ‘டைம் டு கேர்’ என்ற
தலைப்பில் ஆக்ஸ்பாம் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில் வெளியாகியுள்ள சில முக்கிய தகவல்கள் –

1) இந்தியாவின் ஒரு சத விகித
பெரும் பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு …

-70 சதவிகித சாமான்ய மக்களின் சொத்து
மதிப்பை விட – 4 மடங்கு அதிகம்.

2) இந்தியாவின் 63 கோடீஸ்வரர்களின்
மொத்த சொத்து மதிப்பு, மத்திய அரசின்
பட்ஜெட் தொகையைக் காட்டிலும் அதிகம்….

—————————

உலக பொருளாதார நிலைமை குறித்தும்,
இந்திய நிலைமை குறித்தும் வெளியிடப்பட்டிருக்கும்
அந்த அறிக்கையில் உள்ள சில முக்கிய தகவல்கள் –

– உலகில் மொத்தம் உள்ள
2,153 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு,
460 கோடி மக்களின் சொத்து மதிப்பை விட
அதிகமாக உள்ளது.

– கடந்த 10 ஆண்டுகளில் கோடீஸ்வரர்களின்
எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது.

– கடந்த ஓராண்டில் இவர்களின் சொத்து மதிப்பு
சரிந்த போதிலும், உலகம் முழுவதும்
ஏழை – பணக்காரர் இடையிலான விகிதம்
அதிகரித்திருக்கிறது.

————————————————————

இந்தியா குறித்து – ‘ஆக்ஸ்பாம்’ நிறுவன
ஆய்வறிக்கையில் வந்திருக்கும் தகவல் –

– இந்தியாவில் உள்ள 1 % பெரும்பணக்காரர்களின்
மொத்த சொத்து மதிப்பு 70 % மற்ற மக்களின்
சொத்து மதிப்பை விட – 4 மடங்கு அதிகம்….

இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களின்
சொத்து மதிப்பு –

– ஓராண்டுக்கு மத்திய அரசு போடும்
பட்ஜெட் மதிப்பை விட அதிகம்.

அதாவது, 2018-19 நிதியாண்டிற்கான மத்திய
பட்ஜெட்டின் மொத்த மதிப்பு –

ரூ. 24 லட்சத்து
42 ஆயிரத்து 200 கோடி.

ஆனால், இந்தியாவில் உள்ள 63 கோடீஸ்வரர்களின்
மொத்த சொத்து மதிப்பு, இந்த பட்ஜெட் தொகையைக்
காட்டிலும் அதிகம்.

———————————————————-

இந்தியா ஒரு சுதந்திரமான நாடு…
இங்கு ஜனநாயக முறையில் –
அரசுகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன..

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு,
மக்களுக்காக செயல்பட வேண்டிய அரசுகள் –

எப்படி – பணக்காரர்களுக்காக
மட்டும் செயல்படுகின்றன…?
இங்கே அரசுகள் பணக்காரர்களுக்கான
அரசுகளாக மாறியது ஏன்…?

-தாங்கள் தேர்ந்தெடுக்கும் அரசியல்வாதிகளை,
அரசியல் கட்சிகளைப்பற்றி, நம் மக்கள்
எப்போது சரியாக புரிந்து கொள்ளப்போகிறார்கள்…?

நம் வயிறு எரிவதற்கு,
நம் மக்களின் அறியாமையே தானே
முக்கிய காரணம்…?

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை,
ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டு தானே இருப்பார்கள்…?

மதத்தைக் காட்டி மக்களை ஏமாற்றினால்,
பொருளாதாரத்தை சுட்டிக் காட்டி – எதிர்க்கேள்வி
கேட்க வேண்டிய அவசியம் மக்களுக்கு
இருக்கிறதா…. இல்லையா…?

.
————————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to எரியும் வயிறு …. யார் காரணம் …?

 1. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  நீங்கள் சொல்லும் இந்த நிலைமை இந்தியாவில் மட்டும் இல்லை .
  மொத்த உலகமும் கிட்டத்தட்ட இப்படித்தான் .

  பொருளாதார அறிஞர் என்று கூறிக்கொள்ளும் ஆசாமிகள்
  செய்த வேலை .நியோ லிபெரல் என சொல்லப்படும் கோட்பாடு ..
  மார்க்கெட் விலையை நிர்ணயம் செய்யும் .
  அரசு மார்க்கெட்டில் தலையீடு செய்யக் கூடாது .

  வரி வசூல் செய்வது தவறு – அதிலும் குறிப்பாக
  பணக்காரர்களை தொந்தரவு செய்ய கூடாது .
  இன்கம் டாக்ஸ் கூடாது .அரசு கடனும் வாங்கக் கூடாது .

  என்ன ஆகும் ? அரசிடம் பணம் இருக்காது .
  மக்களுக்காக செலவு செய்ய பணம் இராது .
  வேறென்ன – எல்லாம் தனியார் மயம் என்று
  சொல்லி கொள்ளை அடிக்கணும் .

  இந்தியாவில் உள்ள வரிகள் மூலம் வரும் வருமானம்
  பெரும்பாலும் அரசு ஊழியர் சம்பளம் , பென்சன்
  என்றே செலவு செய்கிறார்கள் .
  1991 ல் அரசு ஊழியர் சம்பளம் உயர்த்தியதே இதற்குத்தான் .

  கல்விக்கு அரசு செலவு செய்யாது – தனியார் காலேஜ் !
  அப்புறம் கல்வி தந்தைகள் உண்டாக்கப்படுவார்கள் .

  மக்கள் நிலைமை மோசமாகிக் கொண்டே போகும் .
  அவர்களால் என்ன செய்ய முடியும் ?
  Globalisation என்றால் என்ன என புரிகிறதா ?

  அரசு மக்களுக்காக இல்லை !

 2. Gopi சொல்கிறார்:

  // ஏமாறுபவர்கள் இருக்கும் வரை,
  ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டு தானே இருப்பார்கள்…? //

  அரசியல்வாதிகளின் முதல் தகுதியே
  ஏமாற்றுவது தானே சார் ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.