கடற்படைத் தலைவருக்கும் – சங்கீதத்திற்கும் என்ன சம்பந்தம்….?போர் வீரர்களுக்கு மென்மையான உணர்வுகள்,
பொதுவாக -இசை போன்ற மென் துறைகளில் ஆர்வமோ
ரசனையோ இருக்க வாய்ப்பில்லை என்பது
ஒரு கருத்து.

நான் அரசுப் பணியில் இருந்த காலங்களில்
கீழ்மட்டத்தில் உள்ள பல ராணுவ வீரர்களுடன் நெருங்கிப்
பழகி இருக்கிறேன். குடும்பத்தை விட்டுப் பிரிந்து
வெகு தூரத்தில் பணியில் இருந்த அவர்களுக்கு,
மன அழுத்தத்திலிருந்து விடுபட இசை ஒரு பெரும்
relief ஆக இருக்கும்.

அகில இந்திய வானொலியில், போர் வீரர்களுக்கென்றே
தனியாக “மன் சாஹே கீத்”,”ஜெய் ஜவான்” போன்ற
சில இசை நிகழ்ச்சிகள் உண்டு. இதில் ராணுவத்தினர்
விரும்பும் பாடல்களை அவர்கள் பெயரைச் சொல்லியே
ஒலிபரப்புவார்கள்.

சில இரவு நேரங்களில், நான் அவர்களுடன் உட்கார்ந்து
கொண்டு, டிரான்ஸிஸ்டரில் அந்த நிகழ்ச்சிகளை
கேட்பதுண்டு.

ஆனால், உயர் அதிகாரிகளில் பெரும்பாலோர்
பணிக்காலத்தில் குடும்பத்துடன் தான் இருக்கிறார்கள்
என்பதால் குடும்பத்தை விட்டுப் பிரிந்து இருப்பவர்களுக்கு
ஏற்படக்கூடிய மன அழுத்தம்அவர்களுக்கு இல்லை.
ஆனால் அவர்களுக்கு தங்களது Status -ஐ maintain
பண்ண வேண்டிய கட்டாயம் உண்டு. அந்த உணர்வு,
அவர்களை இதுபோன்ற நிகழ்ச்சிகளிலிருந்து
ஒதுக்கி வைத்திருக்கும்.

ஆனால், விதிவிலக்காக ஒரு வித்தியாசமான
நிகழ்ச்சியை யூ-ட்யூபில் பார்த்தேன்.
இந்திய கடற்படையின் western Command பிரிவின்
– பொன் விழா கொண்டாட்டங்கள்.

அதில் western Command கடற்படையின் மிக மூத்த அதிகாரி
Vice Admiral Girish Luthra அவர்கள், கொஞ்சம் கூட,
status consciousness இல்லாமல், மேடையில் ஒரு பாடலை
மிக அழகாக, மிக எளிதாக, மிக இயல்பாகப் பாடுவதை
பார்த்தேன். ஹிந்தி திரைப்பட பாடகர் உதித் நாராயண்
ஒரு ஹிந்தி திரைப்படத்தில் பாடிய பாடல் அது.

உதித் நாராயணின் ஒரிஜினல் பாடலை நான் கேட்டிருக்கிறேன்.
அவரை விட இவர் சிறப்பாக பாடுகிறார் என்பது என் கருத்து.

ரசனையான இந்த காட்சியை நண்பர்களுடன் பகிர்ந்து
கொள்ள விரும்பி கீழே பதிகிறேன்.

….

….

.
———————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to கடற்படைத் தலைவருக்கும் – சங்கீதத்திற்கும் என்ன சம்பந்தம்….?

  1. புவியரசு சொல்கிறார்:

    அருமை. எவ்வளவு இனிமையான குரல்.
    எத்தனை இயல்பாகப் பாடுகிறார்.
    வெல்டன் கமாண்டர் சார்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.