அடுக்கடுக்கான ஆதாரங்கள் இதோ….!!!ஆதாரம் இல்லாமல் பேசி விட்டார் ரஜினி ;
தன் கருத்தை வாபஸ் பெற வேண்டும்;
மன்னிப்பு கேட்க வேண்டும் – என்றெல்லாம் –

திமுக, அதிமுக, விசிக, காங்கிரஸ்,
கம்யூனிஸ்டு கட்சிகள்,
திராவிட, சுயமரியாதை இயக்கங்கள் – என்று
அத்தனை பேரும் மொத்தமாகப் பாய்கிறார்கள்….

அவர்கள் பாய்ந்ததன் விளைவாக –
ரஜினி ஒரு ஆதாரத்தை தான் காட்டினார்;

ஆனால் இப்போது அடுக்கடுக்கான ஆதாரங்கள்
வெளிவந்திருக்கின்றன… திரு.ரங்கராஜ் பாண்டே, தனது
காணொளியில் இதைப்பற்றி மிக விரிவாக, அத்தனை
ஆதாரங்களையும் காட்டி விளக்கி இருக்கிறார்.
(காணொளி கீழே …)

இப்போது – ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று
கேட்ட சுயமரியாதைச் சிங்கங்களிடம் நாம் சில
கேள்விகள் கேட்கிறோம் –

1) சேலத்தில் தி.க.வால் நடத்தப்பட்ட ஊர்வலத்தில்
இந்து கடவுளர்களை நிர்வாணமாக, ஆபாசமாகச் சித்தரித்து
எடுத்துச் சென்றதை அவர்கள் ஆதரிக்கிறார்களா…?
நியாயப்படுத்துகிறார்களா…? சரி என்று சொல்கிறார்களா…?

2) செருப்பு மாலை போட்டதையும், ஊர்வலத்தில்
திகவினர் படங்களை செருப்பால் அடித்துக்கொண்டே
சென்றதையும் – எந்தவிதத்திலும் தவறு இல்லை என்று
சொல்கிறார்களா…?

3) சோ இதைக் கண்டித்து துக்ளக் பத்திரிகையில்
எழுதியது தவறு என்று சொல்கிறார்களா…?

4) அப்போதைய முதலமைச்சரான கலைஞர் கருணாநிதி,
ஊர்வலத்தை நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை
எடுப்பதற்கு பதிலாக, அதைப்பற்றிய செய்தியை வெளியிட்ட
துக்ளக் அலுவலகத்தின் மீது ரெய்டு நடத்தியதையும் –
துக்ளக் இதழை தடை செய்ததையும் “சரி” என்று
நியாயப்படுத்துகிறார்களா…?

5) திமுகவின் அப்போதைய ஆங்கில செய்தி ஏடான,
THE RISING SUN இதழே, அந்த ஊர்வலத்தை “ஆபாசம்”
என்று வர்ணித்திருக்கிறதே; இன்றைய திமுக தலைவர்
திரு.ஸ்டாலின் அதைக்கூட தெரிந்து கொள்ளாமல்,
ரஜினி உண்மையை அறியாமல் பேசக்கூடாது என்று
சொல்வதை “சரி” என்று சொல்கிறார்களா…?

6) ஸ்டாலினின் தந்தையும், அப்போதைய முதல்வருமான
கலைஞரே அதை “அநாகரிகம்” என்று சொல்லி இருப்பதாக
அப்போதைய செய்தி ஏடுகளிலேயே வந்திருக்கிறதே.
தன் தந்தை சொன்னதையே ஸ்டாலின் இன்று மறுக்கிறாரா…?

இதையெல்லாம் விடுங்கள் –

திரு.தொல் திருமாவளவன் மற்றும் இதர கூட்டணி
கட்சித்தலைவர்களுக்கு ஒரு கேள்வி. கூட்டணி என்பதற்காக,
திமுக சொல்வதற்கெல்லாம் ஜால்ரா போட வேண்டுமா…?

சேலம் தீர்மானங்களில் ஒன்றான –

” ஒருவன் மனைவி மற்றவனை விரும்பினால்,
அதை குற்றமாக கருதக்கூடாது….”

என்கிற தீர்மானத்தை அவர்கள் ஆதரிக்கிறார்களா…?
ADULTRY யை ஏற்றுக்கிறார்களா…?
தங்கள் குடும்பத்தவர் இதைச் செய்தால் அவர்கள்
ஊக்குவிப்பார்களா…?

இன்னொரு தீர்மானமான –

(கடவுள், மதம், ஜாதி -இவற்றை விட்டு விடுங்கள்…)

மொழி, தேசம் ஆகியவை மீது பற்று வைக்கக்கூடாது
என்பதை இவர்கள் ஆதரிக்கிறார்களா…? அதை
இப்போது வெளிப்படையாகச் சொல்வார்களா…?

ஒருவனுக்கு தன் மொழியின் மீது பற்று வேண்டாமா…?
தன் தேசத்தின் மீது பற்று வேண்டாமா…?

கண்களை மூடிக்கொண்டு பெரியாரை ஆதரிக்கும் இவர்கள்,
சேலம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட
10 தீர்மானங்களையும் ஆதரிக்கிறார்களா..?
அதை வெளிப்படையாக அறிவிக்கத் துணிச்சல் உண்டா …?

பெரியார் அவர்களின் மீது நானும் மிகுந்த
பற்று உள்ளவன் தான். 2009-லேயே இந்த விமரிசனம்
தளத்தில், சுய-அறிமுகத்திலேயே சொல்லி இருக்கிறேன்
எனக்குப் பிடித்தவர்கள் பாரதியும், பெரியாரும் – என்று.
இப்போதும் அது அங்கேயே தான் இருக்கிறது.

ஆனால், கண்களை மூடிக்கொண்டு – மற்றவர்கள்
சொன்னதை/சொல்வதை எல்லாம்
அவர் யாராக இருந்தாலும் சரி – அப்படியே
நான் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

ஒருவரை பிடிக்கும் என்பதற்காக அவர்கள் சொல்லும்
அனைத்தையும், (அவை தவறானவையாக
இருந்தால் கூட ) ஏற்றுக் கொள்பவன்
சுயசிந்தனை உடையவனாக இருக்க மாட்டான்….

மூர்க்கர்களும், முட்டாள் பக்த’ர்களும் தான்
கண்களை மூடிக்கொண்டு எல்லாவற்றையும்
ஆதரிப்பார்கள். தங்கள் தலைவர் பின்னால்
வெறி பிடித்து அலைவார்கள்.

இனியாவது இந்த விஷயத்தில் தொடர்ந்து உளறுவதை
இவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மானமிகு (..?) வீரமணியார் எதை வேண்டுமானாலும்
சொல்வார். அவருக்கு சூடும் இல்லை;
சொரணையும் இல்லை;

ஜெ. ஆட்சியில் இருந்தபோது,
கலைஞருக்கு விரோதமாகவும், ஜெ-வுக்கு ஆதரவாகவும்
அவர் செயல்பட்டதை எல்லாரும் மறந்துவிட மாட்டார்கள்.
அவர் தேர்தல் அரசியலில் இல்லை.
தேர்தல் அரசியலில் இருக்கும் அத்தனை கட்சிகளும்,
நாளை மக்களைச் சந்தித்தாக வேண்டும்…

இந்த கேள்விகளை மக்கள் அத்தனை சீக்கிரம் மறந்து
விட மாட்டார்கள். குறைந்த பட்சம் வருகின்ற தேர்தல்
வரை மட்டுமாவது….என்பதை அவர்கள் நினைவில்
கொள்ள வேண்டும்.

இன்று மக்கள் விரும்புவது ” வேஷமும்,
கோஷமும் போடும் – அரசியல்வாதிகளை ” அல்ல…
“எந்த உண்மையையும் வெளிப்படையாகப் பேசும்
துணிச்சல் உடையவர்”களைத்தான் என்பதை
அவர்கள் உணர வேண்டும்.

உண்மையின் பக்கம்,
நேர்மையின் பக்கம்,
வெளிச்சத்தின் பக்கம்,
சத்தியத்தின் பக்கம் –
நிற்பவர்களைத்தான் மக்கள் விரும்புவார்கள்.

……

……

.
—————————————————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to அடுக்கடுக்கான ஆதாரங்கள் இதோ….!!!

 1. Gopi சொல்கிறார்:

  Those who criticize Rajini are
  only helping him to grow more
  and stand tall.

 2. sakthi சொல்கிறார்:

  ஒன்றும் இல்லாத விசயத்துக்கு இவ்வளவு விவாதமா எனக் கேட்கப் போவதில்லை. தமிழ் நாட்டில் ஒரு பிரச்சனையை மறக்க இன்னொரு பிரச்சனை வருவது இயல்பு.எத்தனையோ பிரச்சனைகள் விட்டு விட்டு இதை விமர்சனம் கையில் எடுக்க வேண்டுமா?

  இன்று இணையத்தில் ஆர்சிவ் ஆக அனைத்தும் கிடைக்கிறது. அன்றைய பத்திரிகைகளின் கோப்புகள் ஒலி நாடாக்கள் எல்லாமே உள்ளன.23.08.1971 இல் மதுரையில் பேசிய பெரியாரின் பேச்சும் ஒலி வடிவில் இருக்கிறது.அதில் இருந்து………………..
  //ஊர்வலம் வந்து கொண்டிருக்கும் போது ஓரிடத்தில் 30, 40 பேர் கருப்புக் கொடியை வைத்துக் கொண்டு கத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பாக 500-க்கு மேற்பட்ட போலீசார் வளைத்து நின்று கொண் டிருந்தனர். போலீஸ் பாதுகாப்பு இருக்கிறது என்கின்ற தைரியத்தில் கருப்புக் கொடி பிடித்துக் கொண்டிருந்த ஒருவன் ஒரு செருப்பை எடுத்து ஊர்வலத்தில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது வீசினான். ஊர்வலத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சென்று கொண் டிருக்கின்றனர். நான் கண்டிக்காவிட்டால் பெரிய கலகம் ஏற்பட்டிருக்கும். அவன் வீசிய அந்தச் செருப்பை எடுத்து ஒரு தோழர் ஊர்வலத்தில் வந்த இராமன் உருவத்தை அடித்தார். அதைப் பார்த்து மற்ற தோழர் களும் தங்கள் தங்கள் செருப்பாலடிக்க ஆரம்பித்தனர். இதுதான் நடந்த உண்மையாகும்.//

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.