ராம், ராமசாமி, ரஜினி …!!!


அப்போது வெளியான துக்ளக் கார்ட்டூன்….

…’

அகில இந்திய அளவில், துக்ளக் பரபரப்பாக பேசப்பட்ட செய்தி….

….

அநேகமாக ரஜினி-பெரியார் சீரியலின் எபிசோடுகள்
இப்போதைக்கு – இத்துடன் கடைசியென்று முற்றுப்பெற்று
விடும் என்று நினைக்கிறேன்.

எல்லாரும் பேசும்போது, ஹிந்து நாளிதழ் மட்டும் சும்மா
இருக்குமா…?

நேற்றைய ஹிந்து ஆங்கில நாளேட்டில்,

“Ram, Ramasamy and Rajini : What
happened in Salem in 1971 ..? ”


– என்கிற தலைப்பில், 1971-ல் திராவிடர் கழக
ஊர்வலத்தில் நடந்த சம்பவங்களைப் பற்றி அப்போதைய
ஹிந்து ஆங்கில நாளிதழில் வந்த சம்பவங்களைப்பற்றிய
குறிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது….

அந்த செய்திக் குறிப்பின் தமிழ் வடிவம் கீழே –

‘ஆபாச சித்தரிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டம்’ என்ற
தலைப்பில் ஜனவரி 25, 1971 தி இந்துவில் பிரசுரமான
செய்தியில், சேலம் நிருபர், அதற்கு முந்தைய நாள்
திராவிடர் கழகம் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு
மாநாடு பற்றி செய்தியில் எழுதியுள்ளதாவது:

“இந்த ஊர்வலத்தில் முருகக் கடவுளின் பிறப்பு,
முனிவர்களின் தவம், மோகினி அவதாரம் பற்றிய
ஆபாசமான படங்கள் இருந்தன. ராமரின் 10 அடி
உயரப் படம் ஒரு வண்டியில் எடுத்துச்செல்லப்பட்டது.
அதை பல பேர் செருப்பால் அடித்துக் கொண்டிருந்தனர்”

மேலும் அந்த செய்தியில், “பெரியார் ஒரு ட்ராக்டரில்
அமர்ந்தவாறு அந்தப் பேரணியை தொடர்ந்தார்.
பேரணியின் முடிவில் ராமரின் கட் அவுட்டிற்கு
தீ வைக்கப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில் ஒரு தீர்மானத்தில், இந்திய தண்டனை சட்டத்தின்
கீழ் இன்னொருவரின் மனைவி மீது ஆசைப்படுவதை
குற்றமாகக் கருதாமல் இருக்க உரிய நடவடிக்கை
எடுக்க அரசுக்கு கோரிக்கை விடப்பட்டிருந்தது.

இந்த மாநாட்டின் வரவேற்புக் குழு தலைவர்
டிவி சொக்கப்பா, தி இந்துவுக்கு எழுதிய கடிதத்தில்,
இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.

திருமணமான பெண் தனது கணவர் அல்லாது
வேறொருவருடன் நெருக்கமாக இருக்க விரும்புவது
பற்றிதான்( … 🙂 🙂 … ) தீர்மானத்தில்
குறிப்பிடப்பட்டிருந்ததாக அந்தக் கடிதத்தில்
கூறியிருந்தார். செய்திக்கும், தீர்மானத்துக்கும்
வித்தியாசங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதில் சொல்லியிருந்த சேலம் நிருபர்,
தனது செய்தி சரியானதே என்றும், பெரியார்,

“மைனர் பெண்ணை கவர்வது தவறு. அது கடத்தல்,
அதுவும் குற்றமாகும்.

ஆனால் இன்னொருவரின் மனைவியான, வளரந்த,
மேஜர் பெண்ணை ஒருவர் தீவிரமாக காதலிப்பதில்
எந்தத் தவறும் இல்லை.

அந்தப் பெண்ணும் இந்தக் காதலுக்கு சம்மதம்
தெரிவித்தால் அவர்கள் இருவரும் திருமணம்
செய்து கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும்.
அந்தப் பெண்ணின் கணவன் இந்தத் திருமணத்தை
தடுக்கக் கூடாது” (… 🙂 🙂 … ) என்று பேசியதாகவும்
குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இஸ்லாம், கிறிஸ்துவம், இந்து மதம்
உள்ளிட்ட பல்வேறு நம்பிகைகளில் இருக்கும்
மத ரீதியான பழக்கவழக்கங்களை விமர்சிக்க
அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்” என இன்னொரு
தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் முதலில்
வந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினசரிகளுக்கு எதிரான புகார்

தன்னையும், தான் இருக்கும் கட்சியையும்
இந்த தினசரிகள் அவதூறாகப் பேசியதாக தி இந்து,
தி இண்டியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தினமணி
ஆகிய தினசரிகளுக்கு எதிராக சொக்கப்பா புகார்
அளித்தார்.

இன்னொருவரின் மனைவியைக் கவர்வதைக்
குற்றமாகக் கருதக்கூடாது என்ற தீர்மானம் பற்றி
தி இந்து பிரசுரித்த செய்திக்கு ஆட்சேபனை தெரிவித்தார்.

இந்த வழக்குக்கு எதிராக மூன்று தினசரிகளும்
தொடர்ந்த முறையீடை விசாரித்த, உச்ச நீதிமன்றத்தின்
மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, செப்டம்பர் 4, 1972
அன்று, அவதூறு குற்றச்சாட்டுக்காக இந்த
தினசரிகளுக்கு எதிராக சென்னை நீதிபதி பிறப்பித்த
நடவடிக்கை உத்தரவை ரத்து செய்தது.

.
————————————————————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.