…
…
…
தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் சமூக
ஆர்வலர்கள் அஞ்சலி பரத்வாஜ் மற்றும்
அம்ருதா ஜோரி ஆகியோர் பெற்றுள்ள சில
தகவல்கள் –
———————–
ஜனவரி 2, 2018 -லிருந்து கடந்த வாரம் வரை,
அதாவது கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் –
ரூபாய் 5,936.7 கோடி ரூபாய் அளவிற்கு,
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின்
23 கிளைகளிலிருந்து தேர்தல் நன்கொடை
பத்திரங்கள் ( Electoral Bonds ) வாங்கப்பட்டிருக்கின்றன.
இந்த 6000 கோடி ரூபாய் அளவிற்கான
தேர்தல் நன்கொடை பத்திரங்களை வாங்கியது யார்…?
அது யாருக்கு கொடுக்கப்பட்டது என்கிற விவரங்களை
வெளியிட சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் “ரகசியம்”
என்று கூறி வெளியிட மறுத்து விட்டன.
மேற்படி பத்திரங்களில் 92 % ஒரு கோடி ரூபாய்
மதிப்பிற்கான பத்திரங்கள். எனவே – ஒவ்வொரு
சமயத்திலும் குறைந்த பட்சமாக ஒரு கோடி
ரூபாயாவது சம்பந்தப்படுகிறது. அதிக பட்சம் எத்தனை
வேண்டுமானாலும் இருக்கக்கூடும்.
—————
இது குறித்த முழு விவரங்களும் வெளிவராத
நிலையிலேயே – தற்போது மேலும் விற்பனையை
அனுமதித்து மத்திய அரசு உத்திரவிட்டிருக்கிறது…
( டெல்லி சட்டமன்ற தேர்தல்கள் நடக்க
இருக்கின்றனவே… !!! )
வங்கியில் பத்திரங்களாக வாங்கப்பட்டிருப்பதாலும்,
அந்த பத்திரங்கள் வங்கிக் கணக்குகளிலேயே
பணமாக வரவு வைக்கப்பட்டிருப்பதாலும் – இவை
கருப்புப்பணம் அல்ல… சட்டப்படியான வருமானம் தானே…
என்று, இந்த திட்டத்தை உருவாக்கிய ஆளும்கட்சியின்
தரப்பில் வினவப்படுகிறது…
கம்பெனிகளும், தொழிலதிபர்களும், கணக்கில் வராத
கருப்புப் பணத்தை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக
கொடுத்து வந்தது இதன் மூலம் தடுக்கப்பட்டு விட்டதே
என்றும் கேட்கப்படுகிறது.
…
…
கருப்பை, கருப்பாக கொடுப்பது தடுக்கப்பட்டு விட்டது –
உண்மை தான்…
ஆனால், இதை வாங்கியது யார்..?
எந்த தொழிலதிபர்…? எந்த நிறுவனம்…?
கொடுக்கப்பட்டது எந்த அரசியல் கட்சிக்கு…?
என்கிற விவரங்களை வெளியிட மறுத்து,
சட்டபூர்வமாகவே “ரகசியம்” காப்பது … ஏன்…?
இது – லஞ்சத்தை அதிகாரபூர்வமாகவே
கொடுக்கும்/ வாங்கும் வழக்கத்தை உருவாக்கி,
உறுதிப்படுத்தி இருக்கிறது என்கிற குற்றச்சாட்டை
உறுதிப்படுத்துவதாக இருக்கிறதே..!!!
அரசாங்கத்தில் தங்களுக்கு வேண்டியதை சாதித்துக்
கொள்ள விரும்பும் தொழிலதிபர்கள், அதற்காக
ஆளும் கட்சிக்கு கொடுக்க வேண்டிய லஞ்சப்பணத்தை
சட்டபூர்வமாக, Electoral Bond -களின் மூலமாக
கொடுக்க, இந்த “ரகசியம்” காக்கப்படும் திட்டம்
உதவுகிறதே….
இந்த “ரகசியம்” காக்கும் விதியை கைவிட,
அரசும், ஆளும் கட்சியும் மறுப்பது ஏன்…?
எந்த கம்பெனி அல்லது நபர் – லஞ்சத்தை
நன்கொடை என்கிற பெயரில் Electoral Bond-ஆக
கொடுத்து காரியத்தை சாதித்துக் கொண்டார்கள்/
பயன் பெற்றார்கள் என்பது வெளியே தெரிந்து விடும்
என்பது தானே காரணம்….?
லஞ்சத்தை ஒழிக்க வேண்டுமானால் – அரசின்
செயல்பாடுகள் வெளிப்படைத்தன்மை உடையதாக
இருக்க வேண்டும் என்றால் – இந்த “ரகசிய” விதி
நீக்கப்பட்டு, Electoral Bond சம்பந்தப்பட்ட அத்தனை
விவரங்களும் வெளிப்படையாக அறிவிக்கப்படுவது
உறுதி செய்யப்பட வேண்டும்.
இந்த திட்டம் மக்களின் நம்பிக்கையை
பெற வேண்டுமானால் – இது அவசியம்…
செய்வார்களா…?
.
—————————————————————————————————————————————————-
பெயர் தெரியாத தொழிலதிபர் பெயர் தெரியாத கட்சிக்கு கொடுக்கும் பணம் தங்களின் காரியத்தை சாதித்து கொள்ளத்தானே,பிறகு எப்படி இது ஊழல் இல்லா ஆட்சி..
ஆளும் கட்சிகளுக்கு கொடுக்கப்படும்
நன்கொடை (Electoral Bonds) தொகை
பெரியதாக இருந்தால் அது நிச்சயம்
லஞ்சமாகத் தான் இருக்கும்.
இது குறித்த வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில்
தொடுக்கப்பட்டிருக்கிறது என்று நினைவு.
இத்தகைய வழக்குகளை நீதிமன்றங்கள்
முக்கியத்துவம் கொடுத்து அவசர வழக்காக
கருதி விசாரிக்க வேண்டும்.
துக்ளக் சினிமாவில் சோ சொன்னது போல், லஞ்சம் சட்ட பூர்வமாகி விட்டது! இனி எல்லாம் லாபியிங் ராஜ்ஜியமே!