ரஜினியும் – மீடியாக்களும் – …!!!இன்று – 22/01/2020 – பகல் 1.30 மணி.
பொதுவாக எல்லாரும் பரவலாகப் பார்க்கும்
தமிழ்ச் செய்தி வலைத்தளங்களில் முக்கியமான
ஒன்று – தமிழ் ஒன் இண்டியா.காம்.
(Tamil one india.com ) –

தற்போதைய நிமிடத்தில் –
தமிழக செய்திகள் என்னும் பகுதியான
அதன் முதல் பக்கம் முழுவதையும்
ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது
யாரைப்பற்றிய செய்திகள் – பாருங்கள்…

இதுவரை இப்படி ஒரே மனிதரைப்பற்றிய
செய்தித்தலைப்புகள் முதல் பக்கம்
முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதை
நான் பார்த்ததில்லை….

இதற்கென்ன காரணம் ….?
ரஜினியின் பேச்சு, தமிழக அரசியலை
அந்த அளவிற்கு பாதிக்கிறதா என்ன …?

………………….

.
—————————————————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to ரஜினியும் – மீடியாக்களும் – …!!!

 1. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  ஒரு சுவாரஸ்யமான காணொளி பார்த்தேன்.
  நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

  – நண்பர் மாயவரத்தான் ரமேஷ்குமார் அவர்களுக்கு நன்றி.

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 2. arul சொல்கிறார்:

  KM sir,

  Me and my friends circle stopped to read one india 2 years back it self, because, I heard that one india group only support DMK and funded by sabareesan (Son in law of MK). So that you can not see any negative news about DMK groups last 3 years. They always show soft corner on DMK and when Rajini Sir announced that (Dec 31 2017) he will enter politics, that moment onwards they changed their color.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   அருள்,

   இந்த செய்தி நிறுவனத்தில் திமுகவின் ஆதிக்கத்தைப்பற்றி,
   நானும் அறிவேன். இருந்தாலும், பலவேறு கோணங்களில்
   செய்திகளைப் படித்தால் தான் முழுமையாக செய்திகளை
   அறிய முடியும் என்பதால், இயன்ற வரை முக்கியமான
   செய்தித் தளங்கள் அனைத்தையும் நான் பார்ப்பது வழக்கம்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. புவியரசு சொல்கிறார்:

  தமிழகத்தின் தலையெழுத்தை கடந்த
  50 ஆண்டுகளாக மாற்றி மாற்றி எழுதி
  வந்தவை திமுகவும் அதிமுகவும்.
  அத்துடன் கூட்டு சேரும் சிறிய கட்சிகள்
  ஒவ்வொரு தேர்தலின்போதும், தங்களுக்கு
  சௌகரியப்படும் மெயின் கட்சியுடன்
  கூட்டு சேர்ந்து வந்தன. நேற்று வரை இதற்கு
  தகுந்தாற்போலவே அவற்றின் நிலைப்பாடும்
  இருந்தது.

  மீடியாக்களில் பெரும்பான்மையானவை
  இந்த 2 கூட்டணிகளாலும் பங்கு போட்டுக்
  கொள்ளப்பட்டன. தமிழகத்தை பொருத்தவரை
  அகில இந்திய கட்சிகளுக்கு மைனர் ரோல் தான்.

  இப்போது ரஜினி உள்ளே வருவதில் பிரச்சினை
  என்னவென்றால், இரண்டு மெயின் கட்சிகளான
  திமுகவும் அதிமுகவும் அவர் வருவது தங்கள்
  ஓட்டுகளைப் பிரிக்கும் என்று அஞ்சுகின்றன.
  அந்த பாதிப்பு எந்த அளவிற்கு இருக்கும் ?
  யாருக்கு அதிக பாதிப்பு இருக்கும் ? என்பது
  தெரியாமல் இரண்டும் குழம்பி வருகின்றன.

  சில்லறை கட்சிகளுக்கும் இதே பிரச்சினை தான்.
  எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் ?
  எந்த கூட்டணியில் தங்களுக்கு இடம்/லாபம்
  கிடைக்கும் என்று அவற்றாலும் தீர்மானிக்க
  முடியவில்லை. ஆக ஒட்டுமொத்தமாக
  இப்போதிருக்கும் கட்சிகள் அனைத்துமே ரஜினியின்
  வருகையால பாதிக்கப்படும் என்பதால்,
  அவரை எதிர்ப்பதில் மட்டும் அத்தனை கட்சிகளும்
  ஒன்றுபட்டு நிற்கின்றன.

  எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிற
  நிலை தான். மீடியாக்களும் இதே போல் தான்
  அத்தனையும் ரஜினிக்கு எதிரான சக்திகளாலேயே
  ஆளப்படுகின்றன.

  ஆனால், ரஜினியின் பலம் தெரியாத நிலையிலும்,
  ரஜினி என்ன சொன்னாலும் அதை தெரிந்துகொள்ள
  மக்கள் ஆவலாக இருக்கிறார்கள் என்பதால்,
  ரஜினி சம்பந்தப்பட்ட செய்திகளைப் போடுவதில்
  அத்தனை மீடியாக்களும் ஆர்வம் காட்டுகின்றன.
  ஆர்வம் காட்டுகின்றனவே தவிர, அவருக்கு எதிரான
  கோணத்திலேயே அதை காட்ட முயல்கின்றன.

  ரஜினி, கட்சியை துவங்கி விட்டு, நேரிடையாக
  மக்களை சந்திக்க கிளம்பும்போது தான் அவரது
  உண்மையான பலம் இவர்களுக்கு புரியும்.
  அப்போது இவை/இவர்கள் எப்படி செயல்படுகிறார்கள்
  என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

  இப்போதைக்கு அத்தனை மீடியாக்களும் முந்திக்கொண்டு
  ரஜினி செய்திகளைத் தரும்.
  ஆனால் நெகடிவ் ஆங்கிளிலேயே.

 4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  புவியரசு,

  என் கருத்தும் கூட, கிட்டத்தட்ட நீங்கள் சொல்வது
  போலத்தான்… இதைவிட கூடுதலாக இன்னும் சில
  விஷயங்களும் இருக்கின்றன.

  தீவிர அரசியலில் வருவதற்கு முன்னரே ரஜினியை மிரட்டி,
  அசிங்கப்படுத்தி – அவரை ஒதுங்கியிருக்கச் செய்ய,
  போட்டியிலிருந்து விலகச்செய்ய இவர்கள் அதி தீவிர
  முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
  இதில் இரண்டு முக்கிய கட்சிகளுக்கும் ஒரே நோக்கம் தான்.

  ரஜினியைப்பற்றி இன்னும் பல வதந்திகளையும்,
  கேவலமான பொய்ச்செய்திகளையும் உருவாக்கி,
  அவற்றை அதி தீவிரமாக பரப்பவும் இவர்கள்
  முயற்சி செய்வார்கள். இந்த முயற்சிகள் தொடர்ந்து
  நடக்கும்.

  ரஜினி துக்ளக் ஆண்டு விழாவில் இதைப்பேசும்போது,
  நான் மேடையிலிருந்து 50 அடி தூரத்திற்குள்ளாகவே
  இருந்து நேரடியாகவே கவனித்துக் கொண்டுதான் இருந்தேன்.

  ரஜினி எந்தவிதத்திலும், பெரியாரை அவமதிக்கவே இல்லை.
  அவரது அணுகுமுறையில், பெரியார் பற்றிய செய்திக்கு
  முக்கியத்துவம் இல்லை; கலைஞரின் செயலுக்கு தான்
  முக்கியத்துவம் இருந்தது.

  அவர் சொல்ல வந்தது, சேலம் ஊர்வலத்தைப் பற்றி
  விமரிசித்து எழுதிய துக்ளக் இதழை பறிமுதல் செய்ததன்
  மூலம், ஒரு மிகப்பெரிய பரபரப்பை உண்டுபண்ணி,
  கலைஞர் தன்னையும் அறியாமல், சோ அவர்களுக்கு
  மிகப்பெரிய விளம்பரத்தை தேடிக்கொடுத்தார் என்பதைத் தான்.

  நேரில் முழு நிகழ்ச்சிகளையும் கவனித்தவர்கள்
  அனைவருமே ரஜினி எந்த கோணத்தில் இதைச் சொன்னார்
  என்பதை உணர்வார்கள்.

  ரஜினி பெரியாரை அவமதித்து விட்டார் என்று இவர்கள்
  புரளி பண்ணி, அவரை நெகடிவ்வாக காட்ட முயன்றது
  இப்போது இவர்களுக்கே விரோதமாகப் போகிறது.

  தான் சொன்னதில் மன்னிப்பு கேட்க எதுவும் இல்லை;
  மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சொன்னதன் மூலம்
  ரஜினியின் மதிப்பு மக்கள் மத்தியில் இன்று
  பலமடங்கு உயர்ந்திருக்கிறது.

  இத்தனை நாட்களாக இவர்கள் –
  “ரஜினி நிலையற்றவர்; சொன்ன வார்த்தை எதிலும்
  நிலைத்து நிற்க மாட்டார்; நாளைக்கே நிலை மாறி விடுவார்;’
  மன்னிப்புக் கேட்பார் ” என்று தொடர்ந்து செய்த பிரச்சாரத்தை
  இவர்களே பொய்யாக்கி விட்டார்கள்.

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 5. bandhu சொல்கிறார்:

  எப்போது எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தாரோ, அப்போதிருந்தே திமுக இல்லையேல் அதிமுக என்று ஆகிவிட்டது. அந்த நிலை 50 வருடத்துக்கு அப்புறம் அது மாறி, ரஜினி இல்லையேல் திமுக / அதிமுக என்று ஆகிவிடும் என்ற பதற்றம் தெரிகிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.